தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 januari 2015

"பிரபாகரன்" பெயரை கேட்டதும் விண் அதிர கோஷம் கேட்டது !

பிரபாகரன் பெயர் கேட்டதும் பரப்புரைக்கூட்டத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரித்த சம்பவம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் கிட்டு பூங்காவில் பொதுவேட்பாளர் மைத்திபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தனது உரையில் பிரபாகரன் என்ற பெயரை கூறியதுமே கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியில் விண்ணதிரக் கோஷமிட்டனர். சந்திரிக்கா என்ன சொல்ல வந்தாரோ தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு செக்கன் ஆடிப்போய்விட்டார் என்பதனை மட்டும் அவதானிக்க முடிந்ததாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆங்கிலத்தில் உரையாற்றியிருந்தார். அதன்போது 'மிஸ்டர் பிரபாகரன்' என்று ஆங்கிலத்தில் விவரித்து இருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் உணர்ச்சி பொங்கி கோஷமிட்டனர். அத்துடன் அவரது ஆங்கில உரையின் தமிழாக்கம் செய்யப்பட்டது. அதில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் என்று தமிழாக்கம் செய்யப்பட்டதும் அப்போதும் கைதட்டல்களும் , ஆரவாரிப்பும் வானைப் பிளந்தது. இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியமைக்கும் முன்னாள் ஜனாதிபதி நன்றிகளைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தத்தில் தேசிய தலைவருக்கு தமிழர்கள் மத்தியில் எந்த அளவு ஆதரவு இருக்கிறது என்பதனை சந்திரிக்கா மற்றும் மைத்திரி ஆகியோர் நன்றாக அறிந்துகொண்டு தான் கொழும்பு சென்றுள்ளார்கள். 
http://www.athirvu.com/newsdetail/1770.html

Geen opmerkingen:

Een reactie posten