தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 januari 2015

மஹிந்தவுக்கு பதிலாக மைத்திரி என்பது தற்காலிக இடைவெளியை போன்றது: குமார் குணரட்ணம்!

ஒரே வீட்டின் நால்வர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்!
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 10:52.37 AM GMT ]
வடமேல் மாகாண, வென்னப்புவ, லுனுவில என்ற இடத்தில் நால்வர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்று குறித்து செய்தி வெளியாகியுள்ளது.
மருத்துவரான பெண் வர்த்தகரான அவரது கணவர், மகன், மகள் ஆகியோரே கொலை செய்யப்பட்ட புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் இடம்பெற்ற நாள் மற்றும் எதனால் இது இடம்பெற்றது என்ற விடயங்கள் இன்னும் வெளியாகிவில்லை.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmpy.html
வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த ஆட்சி வேண்டாம்! நல்லாட்சி போதும்: ஹக்கீம்
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 10:57.27 AM GMT ]
வடக்கு - கிழக்கு ஒன்றிணைந்த ஆட்சி என்ற கோரிக்கையை முன்வைக்க தமது கட்சிக்கு எந்தவொரு தேவையும் இல்லை எனவும், தமக்குத் தேவை நல்லாட்சியே என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடம் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது தமது கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கப் போவதாக தீர்மானித்தமையினாலேயே எனவும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகியதன் பின்னர், பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுக்கள் தம் மீது சுமத்தப்படுவதாகவும் ரவூப் ஹக்கீம் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmpz.html
சஜித் பிரேமதாஸவை ஆளும் கட்சிக்குள் ஈர்க்க முயற்சி
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 12:16.32 PM GMT ]
தொடர்ந்தும் கட்சி மாறல் காரணமாக தேர்தல் பரப்புரைகளில் பின்னடைவை கண்டுவரும் அரசாங்கத் தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்து முக்கியமான ஒருவரை ஆளும் தரப்புக்கு இறுதி 11வது மணித்தியாலத்தில் கொண்டு வருவதன் மூலம் தமது தரப்புக்கு மக்கள் செல்வாக்கை கொண்டுவர முடியும் என்ற முனைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிதலைவர் சஜித் பிரேமதாஸவை ஆளும் கட்சிக்குள் உள்ளீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸும், மேல்மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பிலவும ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் சஜித் பிரேமதாஸ முன்வைத்துள்ள நிபந்தனையை ஏற்றால் ஆளும் கட்சிக்குள் முரண்பாடுகள் வலுப்பெறும் என்று அரசாங்கத்தரப்பு அச்சம் கொண்டுள்ளது.
தாம் ஆளும் தரப்புக்கு வந்தவுடனேயே தமக்கு பிரதம மந்திரி பதவி வழங்கப்பட வேண்டும் என்று சஜித் பிரேமதாஸ நிபந்தனை விதித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
சஜித் பிரேமதாஸவின் இந்த செயல் அரசாங்கத்தை மேலும் செயலிழக்கச் செய்யும் எதிரணியின் செயலாக இருக்குமோ என்ற அச்சமும் அரசாங்கத் தரப்பில் எழுந்துள்ளது .
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் தரப்பில் இருந்து எதிரணிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் அரசாங்கத்தரப்பு கடந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையையும் இழந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmp1.html
வவுனியாவில் இருவர் சடலங்களாக மீட்பு
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 12:37.46 PM GMT ]
வவுனியாவில் இரு வேறு பிரதேசங்களில் இரண்டு சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் குளத்தில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா சுந்தரபுரத்தைச் சேர்ந்த முத்தையா தெய்வானை (வயது 69) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
குடும்பத் தகராறு காரணமாக நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் கணவனுடன் கோபித்துக் கொண்டு சென்ற மனைவியே இன்று காலை சாஸ்திரிகூழாங்குளம் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வவுனியா கனகராயன்குளம் பகுதியில் அடிகாயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, கத்தார் சின்னக்குளத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான எஸ்.ரெனி (வயது 37) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேசன் வேலைசெய்து வரும் இவர் கனகராயன்குளம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார்.
வீட்டு உரிமையாளர் இன்று நண்பகல் 2 மணியளவில் அங்கு சென்றபோது வீட்டு விறாந்ததையில் அடிகாயங்களுடன் இறந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக கனகராயக்குளம் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmp2.html

மஹிந்தவுக்கு பதிலாக மைத்திரி என்பது தற்காலிக இடைவெளியை போன்றது: குமார் குணரட்ணம்
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 01:05.25 PM GMT ]
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு பதிலாக மைத்திரிபாலவின் அரசாங்கத்தை கொண்டு வருவது என்பது, இலங்கையின் எரிந்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தற்காலிக நிவாரணமாகவே இருக்கும் என்று முன்னிலை சோசஸிஸ கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் அரசியல்துறை உறுப்பினர் குமார் குணரட்ணம் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்தபோது குடிவரவு சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2012ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்ட குணரட்னம் இன்று நாடு திரும்பினார்.
இந்தநிலையில் கொழும்பில் இன்று ஊடக சந்திப்பு ஒன்றை அவர் நடத்தினார்
இதன்போது தொடர்ந்தும் தாம் இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக குமார் குணரட்ணம் தெரிவித்தார்.
மஹிந்தவுக்கு பதிலாக மைத்திரி என்பது ஒரு இடைவெளியை போன்றது. இது இலங்கையின் பிரச்சினைக்கு இறுதித்தீர்வை தராது என்றும் குணரட்ணம் கூறினார்.
இதேவேளை தமது இலங்கை வருகை தாமதமானதற்கு காரணம் அரசியல் அழுத்தம் என்றும் குமார் சுட்டிக்காட்டினார்.
1965 ஆம்ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி கேகாலையில் பிறந்த தமிழரான குமார் குணரட்ணம், கேகாலை சென்மேரீஸ் கல்லூரியில் கல்விகற்றார்
பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பிரிவுக்கு அனுமதிப்பெற்ற அவர் குறுகிய காலத்திலேயே மாணவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்
எனினும் தமது பட்டப்படிப்பை நிறைவு செய்யாத அவர், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சிங்கள மருத்துவரான சம்பா சோமரத்ன என்பவரை திருமணம் செய்தார்.
1988- 89ஆம் வருடத்தில் தேசப்பிரேமி ஜனதா வியாபாரய என்ற அமைப்பின் திருகோணமலை தலைவராக செயற்பட்டார்
அத்துடன் பல்லேகல இராணுவ முகாம் இந்திய அமைதிப்படையினரின் கல்லாறு முகாம் போன்றவற்றின் மீது ஜேவிபி நடத்திய தாக்குதலுக்கு குமார் குணரட்ணமே காரணமாக இருந்தார் என்று கூறப்பட்டது.
தமது சகோதரரான ரஞ்சிதம் பிரேமகுமார் மரணமானதன் பின்னர் அவரின் பெயரில் குமார் குணரட்ணம் இயங்கி வந்தார்.
கைது செய்யப்பட்டு போகம்பறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட அவர், அங்கிருந்து 1988ஆம் ஆண்டு தப்பிய நிலையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmp3.html

Geen opmerkingen:

Een reactie posten