[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 01:22.49 PM GMT ]
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டதாக கூறப்படும் உடன்படிக்கையில் உள்ள கையொப்பங்களை அரச பகுப்பாய்வாளரின் ஆய்வுக்கு உட்படு;த்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.
தமக்கிடையே குறித்த உடன்படிக்கை செய்து கொள்ளப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட இந்த உடன்படிக்கை ஆவணம் போலியானது என்று ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டிருந்தார்.
இதனையடுத்தே இன்று கோட்டை நீதிமன்றம் இந்த உத்தரவை இரகசிய பொலிஸாருக்கு பிறப்பித்துள்ளது.
திஸ்ஸ அத்தநாயக்கவின் இந்தக்குற்றசாட்டு தொடர்பில் ஏற்கனவே அவரிடமும் ரணில் மற்றும் மைத்திரியிடமும் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmp4.html
நாளை முதல் காங்கேசன்துறை வரை ரயில் சேவை! ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கிறார்!
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 02:30.37 PM GMT ]
நாளை வெள்ளிக்கிழமை காலை பலாலி விமான நிலையத்தை வந்தடையும் ஜனாதிபதி மகிந்த அங்கிருந்து காங்கேசன்துறைக்கு செல்வார்.
காங்கேசன்துறை ரயில் நிலையத்தைத் திறந்து வைத்து அங்கிருந்து ரயில் சேவையை ஆரம்பித்து வைக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முதலாவது பயணியாக அங்கிருந்து யாழ்ப்பாணம் நகரை வந்தடைவார்.
நாளை முதல் கொழும்பிலிருந்து சகல ரயில் சேவைகளும் காங்கேசன்துறை வரை நடைபெறும் என புகையிரத சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் ஜனாதிபதி துரையப்பா பொது விளையாட்டரங்கில் இடம்பெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பார். பின்னர் மன்னார், வவுனியாவில் நடக்கும் பரப்புரைக் கூட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னர் ஜனாதிபதி துரையப்பா பொது விளையாட்டரங்கில் இடம்பெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பார். பின்னர் மன்னார், வவுனியாவில் நடக்கும் பரப்புரைக் கூட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmp5.html
வடக்கில் இராணுவ முகாம் அகற்றப்பட மாட்டாது! மத நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும்: புத்தளத்தில் மைத்திரி
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 02:34.30 PM GMT ]
ஆனால், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து பணியாற்றக் கூடிய சூழல் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புத்தளத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இன, மொழி மத பேதமின்றி புதிய அரசாங்கம் ஒன்றின் தேவை குறித்து மக்கள் பேசி வருகின்றனர். அதற்காக மக்கள் ஒன்றுப்பட்டுள்ளனர்.
பொது விடயங்கள் காரணமாக சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கி மக்கள் அரசாங்கம் மாற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், கட்சிகள், முஸ்லிம்கள் கட்சிகள் மாத்திரமின்றி ஜாதிக ஹெல உறுமய கட்சியும் போன்ற தென் பகுதி கட்சிகளும் பொது எதிரணிக்கு ஆதரவு வழங்கி எமது அணியுடன் இணைந்துள்ளன.
நாட்டின் இன்றைய அரசாங்கத்தை போல் நாட்டின் வரலாற்றில் எந்த நாடும் பொது மக்களின் பணத்தை கொள்ளையிடவில்லை.
நாட்டில் மேற்கொள்ளப்படும் பாரிய அபிவிருத்தித்திட்டங்களில் 50 வீதம் கொள்ளையிடப்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களில் எந்தளவு பணத்தை அரசாங்கத்தில் இருப்பவர்கள் கொள்ளையிட்டு இருப்பார்கள் என்பதை உங்களால் கணக்கிட முடியாது எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmp6.html
Geen opmerkingen:
Een reactie posten