தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 januari 2015

யுத்த குற்றம் தொடர்பாக விசாரணை செய்ய புதிய ஆணைக்குழு தேவையில்லை: கூட்டமைப்பு



தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு தமிழர்களுக்கே துரோகமிழைத்த முஸ்லிம் அரசியல்வாதிகள்! த.கலையரசன் மா.உ
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 03:52.31 AM GMT ]
அன்னிய சமூகத்தின் அடிமைகளாக்கப்பட்டு பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வாழும் இனமாக தமிழ் இனம், எல்லைக்கிராமமான பொத்துவில் கிராமத்திலே வாழ்ந்து வருவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
பொத்துவிலில் தமிழர்கள் சிறுபான்மையாக வாழ்கின்றார்கள் என்பதன் அடிப்படையில் அரசியல் ரீதியாகவும் இங்குள்ள ஏனைய நிர்வாக ரீதியாக இருக்கும் அரசாங்க அதிகாரிகளினால், எமது மக்கள் காலாகாலமாக புறந்தள்ளப்பட்டுக் கொண்டே  வருகின்றார்கள்.
ஆண்டாண்டு காலமமாக தாங்கள் குடியிருந்த விவசாயம் செய்யப்பட்ட எத்தனையோ ஏக்கர் காணிகளில் பயிர் செய்ய முடியாமலும் அந்த இடத்திற்கு போக முடியாமலும் இன்றும் உள்ளார்கள்.
மகிந்த அரசாங்கம் பல வடிவங்களில் எமது மக்களின் பூர்வீக நிலங்களையும், கலாசாரங்களையும் நன்கு திட்டமிட்டு ஒட்டு மொத்த வட, கிழக்கு மாகாணங்களிலே சிதைத்துக்கொண்டு இந்த நாட்டை ஆண்டு வந்தார்கள். அதனொரு கட்டந்தான் தொழ்பொருள் ஆய்வு என்ற தோரணையில் தமிழர்களது நிலங்கள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுக் கொண்டு வந்தது.
இதன்காரணமாகத்தான் எமது தலைமைகள் 2015ஆம் ஆண்டு இந்த நாட்டிலே பெரும் அரசியல் மாற்றத்தினை கொண்டு வரவேண்டும் என்று நினைத்து அதனையும் எமது மக்களின் பலத்தின் மூலம் நிருபித்துக் காட்டியிருக்கின்றார்கள். இதனூடாக தற்போது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கௌரவத்திற்குரிய மைத்திரிபால சிறிசேன எமது மக்களுக்கு நல்லதொரு தீர்வை வழங்க முன்வர வேண்டும்.
சிறுபான்மைச் சமூகமாக இருக்கும் முஸ்லிம்கள் பொத்துவில் பிரதேசங்களில் கையாளும் தன்மையை பார்க்கின்ற போது தமிழர்களும் இங்கு இருக்கின்றார்களா என்ற வினாவை கேட்கவேண்டி இருக்கின்றது. இங்கு தமிழ்கள் 8 ஆயிரம் பேர் இருக்கின்றார்கள். ஆனால் தேர்தலில் குறைந்தளவு மக்களே பங்கு பற்றி ஒரே ஒருவரை மாத்திரமே பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்திருக்கின்றார்கள்.
இந்த நாட்டிலே எமது கட்சி அன்றிலிருந்து இன்று வரைக்கும் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இருந்து செயற்பட வேண்டும் என்று எண்ணியே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். 1956 ஆம் ஆண்டு கல்முனை தொகுதியில் முஸ்லிம் இனத்தினை சேர்ந்த எம்.எஸ் காரியப்பரை தமிழரசு கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றிபெறச் செய்தார்கள். பின்னர் அவர் நன்கு திட்டமிட்டு அவரது இனத்திற்கு மாத்திரம் பல வேலைத்திட்டங்களை தீட்டி வேலை செய்தார். இன்று அவர் தீட்டிய திட்டங்களினால் இன்று எமது மக்கள் கல்முனையில் பெரும் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நாங்கள் ஆண்டாண்டு காலமாக முஸ்லிம் சகோதரர்களுடன் இணைந்து வாழ நினைத்தோம் இன்றும் அதனைத்தான் விரும்புகின்றோம். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் எங்களை புறந்தள்ளி அரசியல் நடத்த நினைக்கின்றார்கள். அவ்வாறானவர்கள் நாங்கள் அல்ல என்பதனை முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் தெளிவாக கூறிக்கொள்கின்றேன்.
ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் அனைத்தும் அந்த அரசாங்கத்தினால் களையப்பட்டு எமது மக்களின் நிம்மதியான வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டியது புதிய அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும் எனவும் இவ்வாறான ஆயுதக்குழுக்களினால் நாம் பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்த வரலாறும் உண்டு என்பதனையும் இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன் எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcit2.html

யுத்த குற்றம் தொடர்பாக விசாரணை செய்ய புதிய ஆணைக்குழு தேவையில்லை: கூட்டமைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 04:11.26 AM GMT ]
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பான விசாரணைக்கு புதிய ஆணைக்குழு நியமிக்க அவசியம் இல்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தற்பொழுது வரை யுத்தம் இடம் பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விசாரணைகள் பல இடம் பெற்று வருகின்றன.
குறித்த விசாரணை குழுவினால் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமான செயற்பாடாகும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திர ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார்.
இதேவேளை புதிய அரசாங்கம் நியமித்ததோடு தேசிய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவை ஒழிக்க வேண்டும். புதிய அரசாங்கத்தின் பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் ஆதரிப்பதில்லை.
அதற்காக புதிய அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். தேசிய பிரச்சினை தீர்க்கும் செயற்பாட்டை ஆரம்பிக்க வேண்டும் என சுரேஷ் பிரேமசந்திர இதன் போது தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcit3.html

Geen opmerkingen:

Een reactie posten