[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 01:13.19 AM GMT ]
குறித்த வீடு முன்னாள் பிரதமர் டீ.எம். ஜயரத்தினவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஒருவருக்கு உரியது என்று கூறப்படுகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமது அலுவலக முறைகேடுகளை மறைக்கும் நோக்கில் அவர் இந்தக்கோப்புகளை கிணற்றுக்குள் வீசியெறிந்துள்ளார்.
எனினும் பொலிசாருக்கு கிடைத்திருந்த ரகசியத் தகவல் ஒன்றை அடுத்து குறித்த கோப்புகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcis0.html
அமெரிக்க அப்பிள் பழங்களில் பக்றீரியா! சுகாதார அமைச்சு எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 01:34.35 AM GMT ]
எனவே அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அப்பிளகளை நுகர்வது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பக்றீரியா, லிஸ்ரியா மொனொசைடொஜெனஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த பக்றீரியாவினால் பாரிய தொற்றுநோய்கள் ஏற்படலாம் என்றும் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcis3.html
பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்க பணம் வசூலிக்கும் அதிபர்களுக்கு எதிராக தண்டனை
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 01:48.56 AM GMT ]
தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்க்கும் போது பெற்றோர்களிடம் பணம் வசூலிக்கும் அதிபர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறினார்.
கட்டட நிர்மாணம், நிறப்பூச்சு பூசவென்று பணம் வசூலிக்கும் அதிபர்களுக்கும் தண்டனை விதிக்கப்படும் இந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அதிபர்களுக்கு எதிராக தண்டனை விதிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுமதிக்கும் போது பணம் வசூலிக்க வேண்டாம் என அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு நேற்று அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் கட்டடங்களை நிர்மாணிக்கவும், நிறப்பூச்சுக்களை பூசுவதற்காகவும் என தெரிவித்து பணம் வசூலிக்கும் நடவடிக்கையை முற்றாக நிறுத்துமாறு கல்வி அமைச்சர், அதிபர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாணவர்களுக்கான வசதிக் கட்டணங்களை அறிவிடுவதற்கான அனுமதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
பெற்றார்களிடம் அநீதியான முறையில் பணம் வசூலிக்கும் அதிபர்கள் குறித்து மாகாண சபைகளிடமோ அல்லது கல்வி அமைச்சின் 1988 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தகவல் வழங்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcis5.html
ஜனாதிபதி மைத்திரியின் விசேட பிரதிநிதி - ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சந்திப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 02:17.40 AM GMT ]
தனபால, இலங்கை அரசாங்கத்தின் விசேட பிரதிநிதியாக நாளை ஜெனீவா செல்லவுள்ளார்
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற சர்வதேச விசாரணையின் அறிக்கை எதிர்வரும் மார்ச்சில் வெளியாகவுள்ள நிலையில் அது தொடர்பில் பேச்சு நடத்தவே தனபால அங்கு செல்கிறார்.
ஏற்கனவே போர்க்குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணைகளுக்கு புதிய அரசாங்கம் ஆதரவு அளிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை சர்வதேச விசாரணையை உள்நாடு வரையும் கொண்டு வந்தமைக்கு முன்னைய அரசாங்கமே காரணம் என்றும் அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcis6.html
சிங்கள - முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த நிபுணர் குழு?
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 02:49.02 AM GMT ]
அண்மைய ஆண்டுகளாக சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
இந்த முரண்பாடுகளை களைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த புத்திஜீவிகளைக் கொண்ட விசேட நிபுணர் குழுவொன்றை அமைக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் சமய விவகார அமைச்சர் மொஹமட் ஹலீம் தெரிவித்துள்ளார்.
சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் மிக நீண்ட காலமாக நல்ல உறவு காணப்பட்டது. ஆனால் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் இந்த நல்லுறவு பாதிக்கப்பட்டது.
சிங்கள - முஸ்லிம் மக்களுக்கு இடையில் நீண்ட கால நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.
புதிதாக நியமிக்கப்படவுள்ள நிபுணர் குழுவில் பத்து பேர் அங்கம் வகிப்பார்கள்.
இந்த நிபுணர் குழுவில் சிங்கள - முஸ்லிம் இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள் என அவர் சிங்கள பத்திரிகையொன்று நேர்காணல் வழங்கியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcit0.html
Geen opmerkingen:
Een reactie posten