தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 januari 2015

மட்டக்களப்பில் த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரப் பணிகள் ஆரம்பம்!

மட்டக்களப்பில் த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரப் பணிகள் ஆரம்பம்!
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 03:15.13 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரப் பணிகள் மட்டக்களப்பில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதில் பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன், மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், கோ.கருணாகரம், பிரசன்னா, வெள்ளிமலை, நடராசா மற்றும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்களும் என பலரும்  கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இக்குழுவினர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
இந்த தேர்தல் பிரச்சாரப் பணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbms1.html

தலைவருக்கு முன்னர் எனது நிலைமையே கவலைக்கிடமாகும்: ஜனாதிபதியின் பிரதான சோதிடர்
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 05:52.38 AM GMT ]
அரசாங்க புலனாய்வு பிரிவுகளின் அறிக்கையை புறந்தள்ளி விட்ட ஜனாதிபதி தனது பிரதான சோதிடர் சுமணதாச அபேகுணவர்தனவின் ஆலோசனையின்படி ஜனாதிபதித் தேர்தலை அறிவித்தார்.
தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமற்ற நிலைமை உருவாகியுள்ள சூழ்நிலையில், சுமணதாச அபேகுணவர்தனவும் கடும் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. சுமணதாச, ஊடகங்களில் இருக்கும் தனது நண்பர்களை தொடர்பு நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து தகவல்களை கேட்டறிந்து வருகிறார்.
தலைவருக்கு முன்னர் தனது நிலைமையே கவலைக்கிடமாகி போகும் என சுமணதாச தனக்கு நெருக்கமான ஊடக நண்பரிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
தற்போது நிலவும் நிலைமைகள் காரணமாக உடனடியாக கதிர்காமத்தில் பூஜை ஒன்றை நடத்துமாறும் சுமணதாச, ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த ஜனாதிபதி, கெட்டவார்த்தைகளால் அவரை திட்டித் தீர்த்ததாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் கடந்த 31 ஆம் திகதி இரவு திடீரென கதிர்காமத்திற்கு சென்ற ஜனாதிபதி விசேட வேண்டுதல்களில் ஈடுபட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmtz.html

Geen opmerkingen:

Een reactie posten