தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 januari 2015

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற மகிந்த முன்வைக்கும் வாக்குறுதிகள் எவை?

ஹக்கீமை ஏன் அரசாங்கம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவில்லை: ஜே.வி.பி கேள்வி
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 06:05.07 AM GMT ]
முன்னாள் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தில் தனியான முஸ்லிம் நிர்வாக வலயம் ஒன்றை கோரியிருந்தால், அரசாங்கம் அவரை அப்போதே அமைச்சர் பதவியில் இருந்து விலக்கியிருக்க வேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
அப்படி எதனையும் செய்யாத அரசாங்கம், முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து விலகிய பின்னர் தேசத்துரோக முத்திரையை குத்தி வருகிறது என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் றிசார்ட் பதியூதீன் தரப்பை தேச துரோகிகள் என அடையாளப்படுத்த முயற்சித்து வரும் அரசாங்கம் இறுதி வரை அவர்களை தம்பக்கம் இழுக்க பல சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகளையும் நடத்த முயற்சித்தது.
இந்த முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகத்தை பிரதிநிதித்துப்படுத்தும் அந்த கட்சிகள் மீது ராஜபக்ஷ அரசாங்கம் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmt0.html
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல ஜகொட எதிர்க்கட்சியில் இணைவு!
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 06:15.46 AM GMT ]
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல ஜாகொட எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். ஜாகொட தேசிய சுதந்திர முன்னணியின் முக்கிய உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
 மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் மூன்றாவது தேசியப் பட்டியல் ஆளும் கட்சி உறுப்பினர் அச்சல ஜாகொட என்பது குறிப்பிடத்தக்கது.
அச்சல ஜாகொட எதிரணியில் இணைந்தன் மூலம் ஆளும் கட்சியின் மூன்று தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணில் இதுவரை இணைந்துக்கொண்டுள்ளனர்.
ஜே.வி.பியில் அங்கம் வகித்த ஜாகொட பின்னர் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்தார். இதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஜாகொட ஜனாதிபதியினால் சுற்றுலாத்துறை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmt1.html
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற மகிந்த முன்வைக்கும் வாக்குறுதிகள் எவை?
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 06:17.48 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் தேர்தல் பிரசாரம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இன்றைய பிரசாரத்தில் ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு வழங்கப் போகும் வாக்குறுதிகள் எவை என்பதைப் பொறுத்தே ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை தமிழ் மக்கள் எடுப்பர்.
தேர்தல் பிரசாரத்திற்கு அப்பால் காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்தல், நிலையான தேசம் தொடரும் முன்னேற்றம் குறித்த கருத்துக்களம் என்பவற்றிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ பங்கேற்கவுள்ளார்.
எதிர்வரும் 8ந் திகதி ஜனாதிபதித் தேர்தல் என்ற நிலையில் தேர்தல் பிரசாரத்தில் மிகக் கடுமையாக ஈடுபட வேண்டியுள்ள நேரத்தில், யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட நேரத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ செலவிடுவது, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக என்பதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை.
காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத சேவை மற்றும் கருத்துக்களம் என்பன, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் காத்திரமான செல்வாக்கைச் செலுத்தும் என்று கூறிவிட முடியாது.
மாறாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ யாழ்ப்பாணத்தில் நடத்தும் தேர்தல் பிரசாரம் தமிழ் மக்களை தனது பக்கம் திசை திருப்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமையலாம்.
இதை நாம் கூறும் போது ஏற்கெனவே எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அணியினர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்துள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேனவுக்கே தமது ஆதரவு எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ள வேளையில், தமிழ் மக்களின் வாக்குளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ச  பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு உண்டா? என்று நீங்கள் யாரேனும் கேட்கலாம்.
அத்தகையதொரு கேள்வி நியாயமாயினும் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­  பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இன்னமும் நிறையவே உண்டு.
அதாவது இன்று யாழ்ப்பாணத்தில், தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ முக்கியமான சில வாக்குறுதிகளை வழங்க வேண்டும். அதில்
I.தமிழ் மக்களின் சொந்த நிலம் அவர்களுக்கு வழங்கப்பட்டு சகல இடங்களிலும் மீள்குடியேற்றம் நடத்தப்படும். இதற்காக தமிழ் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள படையினர் அங்கிருந்து வெளியேற்றப்படுவர். தமிழ் மக்களின் மீள் குடியமர்வு இக்கணமே நடைமுறைக்கு வரும்.
II.இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் உள்ளிட்ட உரிமைகளுடன் உடனடியாக தீர்வு காணப்படும்.
III.வடக்கு மாகாண அரசு சகல அதிகாரங்களுடன் இயங்க அனுமதிப்பதுடன் வடக்கு மாகாண அரசு விரும்புகின்ற ஆளுநர் ஒருவரை நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்படும் என்பது போன்ற விட யங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ தனது வாக்குறுதிகளாக அறிவிக்கும் போது, தமிழ் மக்கள் நிச்சயமாக தமது வாக்களிப்புத் தொடர்பில் உறுதியான முடிவுகளை எடுப்பர்.
இதைவிடுத்து, ஒரே தேசம், ஒரே நாடு, நாம் எல்லோரும் இந்த நாட்டின் மக்கள் என்றவாறான பிரசாரங்கள் தமிழ் மக்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துமே அன்றி வேறெதையும் ஏற்படுத்த மாட்டா.
எனவே தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக வாக்குறுதிகளை வழங்கக் கூடிய வலிமை மைத்திரியை விட தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வுக்கே அதிகம் என்பதால், இன்றைய தேர்தல் பிரசாரத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­  தமிழ் மக்களுக்கு வழங்கப் போகும் வாக்குறுதிகள் எவை என்பதைப் பொறுத்தே ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை தமிழ் மக்கள் எடுப்பர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmt2.html

Geen opmerkingen:

Een reactie posten