தோற்றிருந்தால் மகிந்த குடும்பம் கொன்றிருக்கும்…. மைத்திரி
இறுதி நேரத்தில் தமது பிள்ளைகளை கைது செய்து துன்புறுத்தவும் மகிந்த அரசாங்கம் முயற்சித்தது. தோல்வியுற்றிருந்தால் தம்மை கொல்லவும் சதி நடந்தது. ஆனால் மக்கள் தம்மை காப்பாற்றிவிட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்திற்கு பெப்ரவரியுடன் ஆப்பு….
மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தனிஒரு மனிதருக்கு இந்த அளவு அதிகாரங்கள்வழங்கப்பட கூடாது. அவ்வாறு அதிகாரங்கள் வழங்கப்பட்டதால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய மோசடிகளை நாம் கடந்த கால அரசாங்கத்தின் ஊடாக சந்தித்திருக்கிறோம்.
இந்த நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழ் உள்ள அனைத்து மேன்மையான அதிகாரங்களும் ரத்து செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten