[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 04:20.56 PM GMT ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு கட்சிக்கு வலு சேர்ப்பேன். தேர்தலில் போட்டியிட்டு அதன் பின்னர் மாகாண சபையில் இருப்பதா அல்லது நாடாளுமன்றம் செல்வதா என்பது பற்றி தீர்மானிக்கப்படும்.
நூறு நாள் திட்டத்தின் பின்னர் நாடாளுமன்றிற்கு பிரவேசிக்க விரும்புகின்றேன்.
நாடாளுமன்றிலிருந்து விலகி, மாகாணசபைத் தேர்தலுக்கு போட்டியிட்ட போது பலர் என்னை ஏளனம் செய்தனர்.
மீண்டும் நாடாளுமன்றிற்கு செல்வேன் என நான் அப்போது குறிப்பிட்டேன். இப்போது அந்த வார்த்தை யதார்த்தமானதாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கண்டி அஸ்கிரி மல்வத்து பீடாதிபதிகளை இன்று சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcisz.html
ஜனாதிபதி தேர்தலின் போது சூழ்ச்சித் திட்டம்! மஹிந்த கோத்தபாயவிடம் விசாரணை?
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 04:19.13 PM GMT ]
குற்ற விசாரணைப் பிரிவினர் இவ்வாறு விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சூழ்ச்சித் திட்டம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தினமன்று அலரி மாளிகையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சூழ்ச்சித் திட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சூழ்ச்சித் திட்டம் தொடர்பில் ஏற்கனவே முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், இராணுவ சூழ்ச்சித் திட்டம் ஒன்றின் மூலம் ஆட்சியை கைப்பற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயற்சித்தார் என, எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcisy.html
Geen opmerkingen:
Een reactie posten