தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 juli 2014

அரசை விமர்சிக்கும் நபர்களை அச்சுறுத்தும் சீ.ஐ.டியினர்!

இலங்கை வரும் சுப்ரமணியன் சுவாமி, மகிந்த, ஜீ.எல் மற்றும் கோத்தாவை சந்திக்கவுள்ளார்!
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 06:29.27 AM GMT ]
இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி இந்த வாரம் இலங்கை வரவுள்ளதாக தி இந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
இலங்கை வரும் அவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்க உள்ளார்.
சுப்ரமணியன் சுவாமி இலங்கை விவகாரங்களை உன்னிப்பாக அவதானித்து வரும் நபர் என்பதுடன் அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்து வருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த அவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளை பற்றி கலந்துரையாடினார்.
கொழும்பில் இன்று நடைபெறவுள்ள கருத்தரங்கில் பிராந்தியம் மற்றும் உலகம் சம்பந்தமான மோடி அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து சுப்ரமணியன் சுவாமி உரையாற்ற உள்ளதாக தெரியவருகிறது.
சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையம் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
சுப்ரமணியன் சுவாமியுடன் பாரதீய ஜனதா கட்சியின் வெளிவிவகார கொள்கை குழுவின் தேசிய ஏற்பாட்டாளர் சேஷாத்திரி சாரி, முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான சுவப்பன் தாஸ்குப்தா, மணிபால் பல்கலைக்கழகத்தின் புவிசார் பேராசிரியர் மாதவன் நல்லப்பட் ஆகியோரும் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclt5.html

ஒரே இடத்தில் இரண்டு வாகன விபத்துக்கள்- சிவில் பாதுகாப்பு படை வீரரை கொலை செய்த மற்றுமொரு வீரர் கைது
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 07:29.35 AM GMT ]
புஸ்ஸல்லாவ, வகுகப்பிட்டிய பிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு காரணங்களில் ஒரே இடத்தில் இரண்டு வாகன வீபத்துக்கள் இடப்பெற்றுள்ளன. (20.07.2014 மாலை 5.00 மணி )
நுவரெலியாவிலிருந்து கண்டியை நோக்கிச் சென்ற வான் ஒன்று தனது பிரேக்கை இழந்ததால் பாதையை விட்டு விழகி விபத்திற்கு உள்ளானது.
இதன் போது வாகனத்தில் முன்னே பயனித்த ஒருவருக்கு கால் உடைந்துன்னது அத்துடன் பயனித்த மேலும் 02 பேருக்கு சிறு சிறு காயங்களுக்கு உள்ளானதுடன்.
காயப்பட்டவர்கள் புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு பின் கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
அதே வேலை கண்டியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற கார் ஒன்று அதே வகுகப்பிடடிய பிரதேசத்தில் பாதையின் அருகே இருந்த வீடு ஒன்றில் சாரதியின் தூக்கம் காரணமாக மோதி வாகனம் உட்பட வீடு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளானது.
பயனித்தவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை மேலகிக விசாரனைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி சம்பவங்களை படங்களில் காணலாம்.
பொலிஸ் அணிவகுப்பு தலவாக்கலை பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது​
நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர் அனுர அபேவிக்கிரம தலைமையில் 21.07.2014 அன்று வருடத்திற்கான பொலிஸ் அணிவகுப்பும், மரியாதை செலுத்தியதும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்த பொலிஸ் அணிவகுப்பு தலவாக்கலை பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது பொலிஸ் அத்தியட்சகர் அனுர அபேவிக்கிரம பொலிஸ் வாகனங்களை சோதனைக்குட்படுத்தியதும் குறிப்பிடதக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclt7.html
கோத்தபாயவின் பொதுபல சேனா அமைப்பு பசிலை கடுமையாக தாக்குகிறதாம்
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 07:33.06 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பு தன்னை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருவதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொதுபல சேனா அரசாங்கத்தையே அதிகமாக சாடி வருகிறது. என்னையும் கடுமையாக தாக்கி பேசி வருகிறது.
பொதுபல சேனா அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற அமைப்பு என்பது தவறானது என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆசிர்வாதத்துடனேயே பொதுபல சேனா அமைப்பு இயங்கி வருவதாக எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
பொதுபல சேனா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் இடையிலான இணைப்பு நடவடிக்கைகளை, முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவே மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அண்மையில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLcluy.html
அரசை விமர்சிக்கும் நபர்களை அச்சுறுத்தும் சீ.ஐ.டியினர்
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 07:40.27 AM GMT ]
அரசாங்கத்தின் சில செயற்பாடுகளை பகிரங்கமாக விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளை அச்சுறுத்தும் நடவடிக்கை ஒன்று அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் எனக் கூறி, இவ்வாறான செயற்பாட்டாளர்களின் அயல் வீட்டினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்கள் கேட்டறியப்படுவதாக கூறப்படுகிறது.
ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பு இது தொடர்பில் அவதானத்துடன் இருந்து வருவதாகவும் அயல் வீட்டாரிடம் கூறி, இவ்வாறு அச்சுறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பிரபல சிங்கள இலக்கியவாதியான காமினி வியாங்கொடவின் அயல் வீட்டாருக்கு இவ்வாறு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டு, அவரது விபரங்கள் கோரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLcluz.html

Geen opmerkingen:

Een reactie posten