தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 juli 2014

போர்க்குற்ற உள்ளக விசாரணைகள் ராஜதந்திர ரீதியில் நடத்தப்பட வேண்டும்: ஐ.தே.க - அநுரகுமாரவை வைத்தியசாலையில் சந்தித்த ரணில்!

கறுப்பு ஜூலை கலவரமே புலிகளை உருவாக்கியது!– ஏ.எச்.எம். அஸ்வர்
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 01:18.14 AM GMT ]
கறுப்பு ஜூலை கலவரமே தமிழீழ விடுதலைப் புலிகளை உருவாக்கியது என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மாத்தளையில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
1983ம் ஆண்டில் ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அரசாங்கம் தமிழ் மக்களை படுகொலை செய்ததுடன் சொத்துக்களையும் அழித்தது.
மாத்தளை முத்துமாரியம்மன் தேரைக் கூட ஐக்கிய தேசியக் கட்சியின் காடையர்கள் தீயிட்டு கொளுத்தினர்.
இஸ்ரேல் தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தேன்.
இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் ஐக்கிய தேசியக் கட்சியினர் அவையை வெளிநடப்புச் செய்தனர்.
தேர்தல் காலங்களில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதாக பிரச்சாரம் செய்யும் ஐக்கிய தேசியக் கட்சி, மெய்யாக முஸ்லிம்களை மதிப்பதில்லை.
தேர்தல் காலங்களில் முஸ்லிம் மக்களுக்காக உருகிப் பேசும் ஐக்கிய தேசியக் கட்சி, நடைமுறையில் அதனை அமுல்படுத்துவதில்லை என அஸ்வர் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchp1.html
ஆளும் கட்சியிலிருந்து விலகுவது குறித்து இன்று தீர்மானிக்கப்படும்! ஊவாவில் தனித்துப் போட்டி: விமல் வீரவன்ச
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 01:20.52 AM GMT ]
ஆளும் கட்சியிலிருந்து விலகுவது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து விலகிய உதய குமார என்ற ஊவா மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தல் தொடர்பில் அரசாங்கத்திற்கும் தேசிய சுதந்திர முன்னணிக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
உதய குமாரவிற்கு மொனராகல மாவட்டத்தில் ஆளும் கட்சியில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானத்திற்கு தேசிய சுதந்திர முன்னணி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொது இணக்கப்பாட்டை மீறி, உதய குமாரவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஸாம்மில் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா இல்லையா என்பதனை இன்று தீர்மானிக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பல தடவைகள் அரசாங்கத்தை விட்டு விலகப் போவதாக தேசிய சுதந்திர முன்னணி அறிவித்த போதிலும் இதுவரையில் அவ்வாறு விலகியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊவா மாகாணசபைத் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி தனித்து போட்டி
எதிர்வரும் ஊவா மாகாணசபைத் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது.
பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தனித்து போட்டியிட உள்ளதாக கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.
ஊவா மாகாணசபைத் தேர்தலில் பதுளை, மொனராகலை மாவட்டங்களில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் ஊவா மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்பு மனு வழங்கியமையே இவ்வாறு தேர்தலில் தனித்துப் போட்டியிடக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியிலிருந்து விலகிய உறுப்பினருக்கு ஆளும் கட்சியில் வேட்பு மனு வழங்கப்படக் கூடாது என விமல் வீரவன்ச அரசாங்கத்திடம் கோரியிருந்தார் எனினும் இந்தக் கோரிக்கையை அரசாங்கம் ஏற்க மறுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchp2.html
போர்க்குற்ற உள்ளக விசாரணைகள் ராஜதந்திர ரீதியில் நடத்தப்பட வேண்டும்: ஐ.தே.க - அநுரகுமாரவை வைத்தியசாலையில் சந்தித்த ரணில்
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 01:44.33 AM GMT ]
உள்ளக ரீதியில் விசாரணை நடத்தப்பட வேண்டுமாயின் அது ராஜதந்திர ரீதியில் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
போர்க்குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் உள்ளக விசாரணை நடத்தினால், அது ராஜதந்திர ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டுமென கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள இணையமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போர் வெற்றிக் களிப்பில் திளைத்த அரசாங்கம் நாட்டை உரிய வகையில் வழி நடத்தவில்லை.
இதன் காரணமாகவே சர்வதேச ரீதியிலும் உள்நாட்டு ரீதியிலும் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
மக்களின் நலன் கருதி இந்த அரசாங்கம் செயற்படுவதில்லை.  இதனால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
இவை குறித்து கவனம் செலுத்தாது அரசாங்கம் மீண்டும் தேர்தல் தொடர்பிலான பரபரப்பை ஏற்படுத்தி மக்களை திசை திருப்பி வருவதாக கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அநுரகுமாரவை வைத்தியசாலையில் சந்தித்த ரணில்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டு நலன் விசாரித்துள்ளார்.
ரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் காயமடைந்த அநுரகுமார கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
நேற்று நேரில் சென்று, அநுரகுமாரவை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க, விபத்து தொடர்பாக கேட்டறிந்துக்கொண்டார்.
அநுரகுமார திஸாநாயக்க, பதுளையில் தேர்தல் நடவடிக்கை ஒன்றுக்காக சென்று திரும்பிக்கொண்டிருக்கையிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் மீண்டும் தேர்தல் பணிகளுக்காக பதுளை செல்வார் என்று ஜே.வி.பி தரப்பு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchp3.html

Geen opmerkingen:

Een reactie posten