மோட்டர் சைக்கிளில் உலவும் சிங்கள பிஸ்டல் கோஷ்டியினர்: ஜா-எலவில் சுட்டதில் ஒருவர் பலி !
[ Jul 29, 2014 05:01:18 AM | வாசித்தோர் : 2565 ]
ஜா-எல துடெல்ல பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் உயிரிழந்துள்ளார். நேற்று முற்பகல் 8.30 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர் ராகம போதனா வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் முற்பகல் 11.30 அளவில் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்பான விசாரணைகளுக்கு இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/610.htmlயாழில் ஆண் ஒருவரை கிடுக்கு பிடி போட்டு கட்டாயமாக தாலி கட்டவைத்த பெற்றோர் கைதாகியுள்ளார்கள் !
[ Jul 29, 2014 06:26:50 AM | வாசித்தோர் : 9390 ]
சில வாரங்களின் முன்னர், தன்னை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என யாழ்ப்பாண வாலிபர் ஒருவர் பரபரப்பு தகவல் வெளியிட்டார் என எமது இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருந்ததை வாசகர்கள் நினைவுகூரக் கூடும். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் மணப்பெண் உட்பட ஐவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தனது விருப்பத்திற்கு மாறாக தன்னை கடத்திச் சென்று, விவாகரத்தான பெண்ணொருவருடன் திருகோணமலையில் திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என வல்வெட்டித்துறை வாலிபர் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் திருகோணமலையிலிருந்து வல்வெட்டித்துறையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு மணப்பெண் உள்ளிட்டவர்கள் வந்து தங்கியிருந்திருக்கிறார்கள். இதனையறிந்த வாலிபர், மீண்டும் தன்னை கடத்திச் செல்லப் போகிறார்களோ என்ற பயத்தில் அலறியடித்துக் கொண்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஓடிச் சென்று தகவல் வழங்கியிருக்கிறார். இதனையடுத்து கடந்த 25ம் திகதி மணப்பெண் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிற்கு எதிராக கடத்தல், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட குற்றங்களை சுமத்தி நேற்று முன்தினம் சனிக்கிழமை பருத்தித்துறை நீதிவான் கஜநிதிபாலனின் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை தலா 2 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்த நீதிவான், எதிர்வரும் ஓகஸ்ட் 20ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/615.html
Geen opmerkingen:
Een reactie posten