[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 04:49.29 AM GMT ]
இவ்வஞ்சலி நிகழ்வு தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட். மாவட்ட காரியாலயத்தில் அமைப்பின் மாவட்ட செயலாளர் குணசுந்தரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவர்களுமான கோவிந்தம் கருணாகரம் (ஜனா), பிரசன்னா இந்திரகுமார் மற்றும் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உப செயலாளர் சற்குணராசா (திலக்), அம்பாறை மாவட்ட செயலாளர் லோகநாதன் (நாதன்), அமைப்பின் மூத்த உறுப்பினரான பிரபு மற்றும் ஏனைய உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தளபதிகளான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் உருவப்படங்களுக்கு விளக்கேற்றி மலர்மாலை அணிந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, மிகவும் எளிமையான முறையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது அதிதிகளினால் நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciv5.html
மாவை சேனாதிராசாவே தலைமைக்கு பொருத்தமானவர்!- சீ.வி. விக்னேஸ்வரன்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 05:06.36 AM GMT ]
தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் வரவுள்ளதாக வெளியாகிய செய்தி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண ஆளுநர் மீள் நியமனம் காரணமாக முதலமைச்சர் பதவி விலகத் திட்டமிட்டுள்ளார் எனவும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி பெரிய பதவியை குறிவைக்கின்றார் எனவும் சிலர் கூறிவந்துள்ளனர்.
இவ் விடயங்கள் அனைத்தும் பொய் எனத் தெரிந்துகொண்ட பின்னர் அதே கதையைக் கூறியவர்கள், நான் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு வரவுள்ளதாக கூறுகின்றனர்.
அப்பதவியை நான் பொறுப்பேற்பேன் என எவருமே நினைக்கக் கூடாது. உண்மையில் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மாவை.சேனாதிராசாவே வரவேண்டிவரும், வரக்கூடியவராகவும் உள்ளார்.
இதனை நான் உறுதியாக கூறுகின்றேன். நான் அறிந்தவரையில் கட்சியில் தலைமைகளும் அவ்வாறே கருதுகின்றனர்.
இவ்வாறான கதைகளைப் பரப்புவதன் மூலம் சிலர் கட்சியைச் சிதைக்க எடுக்கும் முயற்சியை முறியடித்து மாவை.சேனாதிராசாவிற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciv6.html
கூட்டமைப்புக்கு சர்வதேசத்தினாலேயே அழிவு ஏற்படும் என்கிறது அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 05:18.49 AM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த அரசாங்கம் நினைக்கின்றது என அக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளதை அடுத்து அது தொடர்பில் அரசாங்கத்திடம் வினவிய போதே அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பிரிவினை வாதத்தினை தூண்டுவதும் நாட்டை பிளவுபடுத்த நினைப்பதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேலையே தவிர அரசாங்கம் யாரையும் அழிக்க ஒருபோதும் செயற்படாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிளவுபடுத்துவதனால் அரசாங்கத்திற்கு எவ்வித இலாபமும் கிடைக்கப் போவதில்லை. அவ்வாறானதொரு அவசியமும் எமக்கு இல்லை.
எனினும் கூட்டமைப்பின் தலைவரே அவ்வாறனதொரு கருத்தனை குறிப்பிட்டிருப்பது உண்மையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவினை ஏற்படுத்தியுள்ளதா என்று எண்ணத் தோன்றுகின்றது.
கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதெனின் அதனை தீர்த்து வைக்க முயற்சிக்க வேண்டுமே தவிர அரசாங்கத்தை குற்றம் சுமத்துவது அர்த்தமற்ற ஒன்றாகும்.
அதேபோல் ஊடகங்களின் கருத்துக்கள் தனித்துவமானவை. அதனை அரசாங்கத்துடன் ஒப்பிட்டு பேசவும் முடியாது.
மேலும் இன்று சர்வதேச அமைப்புகளின் மூலம் அவர்களின் அழுத்தங்களை பயன்படுத்தி இந்த நாட்டை பிளவுபடுத்த நினைப்பது அரசாங்கமல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே.
இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் செயற்படுவதும் பொய்யான சாட்சிகளை தயாரித்து கொடுப்பதும் அரசாங்கமல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே.
இந்த நாட்டின் பிரஜைகளாக இருந்து கொண்டு தாய் நாட்டிற்கு எதிராக துரோகச் செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்க விடயமே.
எனினும் அவர்களுக்கும் இலங்கையில் அரசியல் செயல்களில் ஈடுபட உரிமை உண்டு. அதனை நாம் ஏற்றுக் கொண்டுள்ளதன் காரணத்தினாலேயே இடமளித்துள்ளோம்.
எனினும் இன்று சர்வதேசத்துடன் கைகோர்த்து தாய் நாட்டிற்கு புதிதாக இந்த நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சர்வதேசத்தின் சூழ்ச்சிகளினாலேயே அழிவை எதிர்நோக்குவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciv7.html
RIP
BeantwoordenVerwijderen