தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 31 juli 2014

மனோதிடத்துடன் நாம் இந்த உலகத்தை வெல்ல வேண்டும்: பா.உறுப்பினர் சி.சிறீதரன்!



கிழக்குப் பல்கலைக்கழக திருமலை வளாக மாணவர்கள் தனியொருவருக்காக போராடக் காரணமென்ன?
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 01:38.57 PM GMT ]
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் முதல்வர் வைத்தியர் வா்ணகுலேந்திரன் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டு கலாநிதி. ரகுராம் பதில் வளாக முதல்வராகப் பணி நியமனம் செய்யப்பட்டதை அடுத்து வளாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
வா்ணகுலேந்திரனுக்கு எதிராக பல்கலைக்கழகப் பேரவையின் அனைத்து உறுப்பினா்களும் ஏகமனதாக மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாகவே அவா் மீது விசாரணை மேற்கொள்ளும் வகையில் தற்காலிகப் பணிநீக்கம் வழங்கப்பட்டுள்ளது என இவ்விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தா். கலாநிதி. கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் முடிவில் வைத்தியர். வா்ணகுலேந்திரன் நியாயமானவர் எனில் மீள அப்பதவிக்கு நியமிக்கப்படுவார் எனவும் அவா் தெரிவித்தார்.
கடந்த வருடம் கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழுள்ள திருமலை. வளாகத்தை வேறு சிங்களப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் இணைக்க முயன்ற குற்றச்சாட்டுக்கு வா்ணகுலேந்திரன் இலக்காகி இருந்ததுடன், இலங்கையின் தேசிய மற்றும் திருமலையின் உள்ளூர் ஊடகங்களும் இவ்விடயத்தை வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தன.
அதன் பின்னா் இவ்விடயத்தை ஆராயக் கிழக்கு மாகாண சபையில் பிரேரணையொன்றும் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை தமிழ் மாணவா்கள் கடந்த காலங்களில் இப்பல்கலைக்கழகத்தில் தாக்கப்பட்டபோது சிங்கள மாணவா்களுக்கு எதிராக முறையான நடவடிக்கைகளை இவர் மேற்கொள்ளவில்லையென்ற குற்றச்சாட்டுக்களும் இவா் மீது கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிர்வாக ரீதியான இத்தற்காலிக முடிவிற்கு எதிராக ஏன் மாணவா்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
நீதியான விசாரணைக்குத் தலைமையேற்க பல்கலைக்கழகமொன்றின் முன்னாள் சிரேஸ்ட உபவேந்தா் ஒருவா் நியமிக்கப்பட்டிருப்பதுடன் அவ்விசாரணைகள் பாரபட்சமின்றி நிகழும் வாய்ப்பு இருப்பதாகவே தெரிகின்றது.
விசாரணைகளுக்கு முகம்கொடுத்து வைத்தியர். வா்ணகுலேந்திரன் நியாயமானவராக இருப்பின், மீள அப்பதவியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு காணப்படும் நிலையில் மாணவர்கள் இந் நிர்வாக முடிவினை எதிர்த்திருப்பதன் பின்னணியில் இயங்குவது யார்? என்ற கேள்வி எழுகின்றது. 
இங்கு கருத்திற்கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதாகச் சந்தேகிக்கப்படும் நிர்வாக மற்றும் நிதிச் சீர்கேடுகள் தொடர்பாக மாணவா்கள் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எப்போதுமே இருப்பதில்லை.
இதனால் அச்சீர்கேடுகள் தொடர்பாக விசாரணை செய்யவென பேரவை உறுப்பினர்கள் அனைவருமே ஏகோபித்த முடிவாக விசாரணைத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
விசாரணையின் போது குற்றமற்றிருப்பின் அவா் மீளத் தனது கடமைகளுக்குத் திரும்பமுடியும் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையிலும் வறிய மாணவா்கள் தமது கல்வியைப் பலியிட்டு தனி மனிதரொருவருக்காகப் போராடப் புறப்பட்டுள்ளமையின் பின்புலம் என்ன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgr0.html

மனோதிடத்துடன் நாம் இந்த உலகத்தை வெல்ல வேண்டும்: பா.உறுப்பினர் சி.சிறீதரன்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 03:39.34 PM GMT ]
கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா அண்மையில் கல்லூரியின் முதல்வர் பூலோகராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பழம்பெரும் கிராமங்களில் ஒன்றான தர்மபுரத்தின் பெருமையாக விளங்கும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி 1959ம் ஆண்டு 03ம் மாதம் 9ம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப்பாடசாலை படிப்படியாக கடந்த அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றார்கள் பழையமாணவர்களின் ஒத்துழைப்பினால் பெருவளர்ச்சி கண்டு, கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய மூன்றே மூன்று 1ஏபி சுப்பர் பாடசாலைகளில் ஒன்றாக விளங்குகின்றது.
கடந்த கால போர்களால் இந்தப்பாடசாலையும் பாடசாலை சமூகமும் உயிர் உடமை என பெரும் இழப்புக்களை சந்தித்த போதும் தற்போதைய அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்களின் பலத்தால் தனது 55வது அகவையை நிறைவு செய்து விழா எடுத்து மகிழ்ந்துள்ளது.
இந்த விழாவிற்கு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் முருகவேல், கண்டாவளை கோட்ட கல்விப்பணிப்பாளர் தருமபுரம் வைத்தியசாலை அத்தியட்சகர் கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினரும் கிராமத்தின் முன்னோடியுமான புஸ்பராசா மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் பெருமளவான நலன்விரும்பிகள் என கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
இந்த நிகழ்வில் அதிபர் தனது அறிக்கையில்,
<
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இந்த பாடசாலையின் உயர்ச்சியில் மிகுந்த அக்கறைகொண்டு பள்ளியின் பொன்விழா மலருக்காக தனது சொந்த நிதியில் இருந்து இரண்டு இலட்சம் ரூபாவை வழங்கியதையும் 2010ம் ஆண்டு விளையாட்டுப்போட்டியில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களையும், பெற்றோர்களுக்கு அன்று அத்தியாவசியமாக தேவைப்பட்ட இலாம்புகளையும் வழங்கியிருந்ததையும் பதிவு செய்தார்.
இதற்கு மேலதிகமாக 2011ம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்ட உதவிகளையும் நினைவுபடுத்தியுள்ளார்.
அத்தோடு கல்வி அமைச்சர் குருகுலராஜா கல்விப்பணிப்பாளர் ஆகியோரின் ஒத்துழைப்புக்களை நன்றி பாராட்டியுள்ளார்.
அத்தோடு சுத்தமான குடிநீர் வசதிகள் சுற்றுமதில் சிற்றுண்டிச்சாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் போன்றவற்றிற்கு இருக்கக்கூடிய தேவைப்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்புற நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சாதனை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் விருந்தினர்களால் மதிப்பளிக்கப்பட்டனர்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் குருகுலராஜா,
இந்த பாடசாலைக்கும் எனக்கும் இந்தக்கிராமத்துக்கும் நீண்ட உறவு இருக்கின்றது. அதன் படிமுறையான வளர்ச்சி பற்றி எனக்குத்தெரியும்.
இலங்கையில் மூத்த கிராமங்களில் இதுவும் ஒன்று. பல்வேறு சிறப்புக்களை இந்தப்பாடசாலை கொண்டுள்ளது. மாணவர்களை கௌரவிக்கின்றபோது கூடவே அவர்களின் பெற்றோர்களையும் அழைத்துக்கௌரவிக்கும் சிறந்த பண்பை இங்கே தொடர்ந்து நான் காண்கின்றேன்.
இங்கே பரிசில் வாங்க வந்த ஒரு பிள்ளையின் தாயை பார்த்தேன். அவர் மேடையில் இருந்து இறங்குகின்றபோது அவருக்கு ஒரு கால் இல்லை என்பதை நான் உணர்ந்தேன். அவரை எனக்குத் தெரியும் அவர் படிக்கின்ற காலத்தில் நல்ல ஓட்ட வீராங்கனை இதுதான் எமது வாழ்க்கைப் பயணம்.
நாம் எல்லாவற்றையும் பெற்றுள்ளபோதும் அடிப்படை சுதந்திரம் எமக்கு இங்கு உள்ளதா என்பது பற்றி நாம் எல்லோரும் சிந்திக்கவேண்டும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது உரையில்,
இந்த பூமி எம்மால் வெல்லப்படுவதற்காகவே எம் காலடியில் கிடக்கின்றது. அதற்கு சிறந்த மனோதிடமும் கல்வி அறிவும் மிக அவசியமானது.
அது இந்த பாடசாலைக்கு அடிப்படையில் இருந்து கைவரப்பெற்றுள்ளது. இந்தப்பாடசாலை விளையாட்டு கல்வித்துறையில் சாதனைகளை படைத்து வருகின்றது. அதற்கு இந்தக்கிராமத்தின் இடர்நிறைந்த வரலாறும் ஒருகாரணம் சிங்களவர்களால் அடித்து துரத்தப்பட்ட மக்களால் உருவாக்கப்பட்ட இந்த கிராமம் இன்று அரைநூற்றாண்டு கண்ட தம் பாடசாலையில் பெருமையில் நனைகின்றது.
இந்தப்பெருமையும் நிமிர்வும் எமது மொழி இனம் சார்ந்ததாக என்றும் வளரவேண்டும். ஏராளம் மனிதர்களின் தியாகம் இந்த பாடசாலையிலும் இந்தக்கிராமத்திலும் கலந்திருக்கின்றது என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடாதவர்களாக இருக்கவேண்டும் எனக்குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgr2.html

Geen opmerkingen:

Een reactie posten