த கார்டியன் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
கொக்கோஸ் தீவில் இருக்கும் குடிவரவு திணைக்களம் இவர்களை அவுஸ்ரேலியா எல்லைக்கு உட்பட்ட தடுப்பு முகாம் ஒன்றுக்குள் பாரம் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை இடம்பெறுவதாக தகவல் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு
அவுஸ்திரேலிய அதிகாரிகளால் சுமார் ஒரு மாதகாலமாக நடுக்கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் கொக்கோஸ் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் தீவுக்கு செல்லும் காட்சிகள் அடங்கிய காணொளியை தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
சுங்க அதிகாரிகளும், பொலிசாரும் 157 தமிழர்களை கரையோரத்தில் வரிசையில் நின்ற பஸ் வண்டிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இன்று நண்பகல் கொக்கோஸ் தீவில் இருந்து இரண்டு விமானங்கள் புறப்பட்டுச் சென்றிருக்கின்றன. இந்த விமானங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் 157 பேரும் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.
முதல் விமானமான Air Nauru Boeing 737 நண்பகல் 12.40 அளவில் புறப்பட்டுச் சென்றது.
இந்த விமானம் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள கேர்ட்டின் தடுப்பு முகாம் நோக்கி சென்றுள்ளது.
ஹவர் எயார்லைன்ஸ் இலச்சினையுடன் கூடிய நவுரு விமானச் சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டாவது விமானம் 2.25 அளவில் புறப்பட்டுள்ளது.
இதில் புகலிடக்கோரிக்கையாளர்கள் 65 பேருடன் அவுஸ்திரேலிய அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
சிறுவர்கள், தாடி வைத்த ஆண்கள், சாரியணிந்த பெண்கள் ஆகியோர் வரிசையாக செல்கையில் பாதுகாப்பு அதிகாரிகளும், குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளும் அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாதபடி மறைக்க முயற்சித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா விமான நிலையத்தில் புகலிடக் கோரிக்கையாளர்கள் 17 பேருடன், சுமார் 140 பேர் இருந்துள்ளனர். . இவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பது தெளிவில்லையென கார்டியன் தெரிவித்துள்ளது.
மூன்றாவது விமானம் ஓடுபாதையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த விமானத்தின் வால் பகுதியில் அவுஸ்திரேலிய கொடி பொறிக்கப்பட்டிருந்தது.
இந்த விமானம் மாலை 5.30 அளவில் புறப்பட உள்ளதாக தெரியவருகிறது.
இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஓசன் புரடெக்டர் கப்பலில் இருந்து சிறிய சுங்கப்படகுகள் மூலம் காலை 7.30 அளவில் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த மக்களின் உடமைகள் பிளாஸ்ரிக் பைகளில் இடப்பட்டு அருகிலுள்ள இறங்குதுறையில் குவிக்கப்பட்டிருந்தன.
பைகளுக்குள் இருந்த துவாய்களும், ஆடைகளும் தெளிவாகத் தெரிந்தன. பைகளில் படகின் அடையாள எண் குறிக்கப்பட்டு, Suspected Illegal Entry Vessel 885 எனவும் எழுதப்பட்டிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLcis1.html
Geen opmerkingen:
Een reactie posten