[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 12:36.19 AM GMT ]
பாப்பரசரின் இலங்கை விஜயத்திற்கான திகதிகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பாப்பரசரின் இலங்கை விஜயத்தை நான்கு நாட்களுக்கு ஒத்தி வைக்க அதாவது 17ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு கோரிக்கை விடுக்க முடியுமா என்பது குறித்து ஜனாதிபதி உள்ளிட்ட ஆளும் கட்சியினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையில் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு பாப்பரசர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கை விஜயத்திற்கு முன்னதாக பிலிப்பைன்ஸ் விஜயத்தை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்க முடியுமா என கர்தினாலிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.
இதேவேளை, பாப்பரசரின் இலங்கை விஜயத்தின் திகதிகளை மாற்றியமைக்க முடியாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciu5.html
அதிகாரங்கள் குறைக்கப்படுவதனை எந்தவொரு ஜனாதிபதியும் விரும்ப மாட்டார்!- வாசு - ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்க்கட்சிகள் திட்டம்!- அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 12:59.41 AM GMT ]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை வரையறுத்து ஆட்சி நடத்தப் போவதாக சிலர் பிரசாரம் செய்கின்றனர்.
இந்தப் பிரசாரத்தில் எவ்வித உண்மையும் கிடையாது.
அதிகாரங்களைக் குறைத்து அந்தப் பதவியில் நீடிக்க எந்தவொரு ஜனாதிபதியும் விரும்ப மாட்டார். மேலும் நிறைவேற்று அதிகாரங்களை வரையறுத்து அந்தப் பதவியில் நீடிக்க முடியாது.
நிறைவேற்று அதிகாரத்தை வரையறுக்கப் போவதாக செய்யும் பிரசாரம், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் நடவடிக்கையாகும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்க்கட்சிகள் திட்டம்! விசாரணை ஆரம்பம்!- அரசாங்கம்
இலங்கையில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கும் அவரின் நிர்வாகத்துக்கும் எதிராக உள்ளுரில் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
தேர்தல்களின் மூலம் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது என்பது எதிர்க்கட்சியினருக்கு தெரியும். எனவேதான் வேறு மார்க்கங்களில் அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் திட்டமிடுகின்றன.
இந்த திட்டங்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருப்பதால் மக்களுக்கு பிழையான செய்திகள் சென்று கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையின் பின்னணியிலும் திட்டம் ஒன்று செயற்படுத்தப்படுகிறது. எனவே இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நிமல் சிறிபால டி சில்வா கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciu7.html
Geen opmerkingen:
Een reactie posten