தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 juli 2014

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமா?

சட்டத்தரணிகள் சங்கத் தலைவரை கொலை செய்ய முயற்சியா? ரணில்: வாகனங்கள் பதிவு செய்யப்படவில்லை - பிரதமர்
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 05:11.21 AM GMT ]
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரியவை கொலை செய்வதற்கு ஆளும் கட்சியில் எவருக்கேனும் தேவை உள்ளதா என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
உபுல் ஜயசூரியவை கொலை செய்ய வேண்டுமானால் அதனை செய்து முடியுங்கள்.
உபுல் ஜயசூரியவை பின்தொடர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியின் இலக்கத் தகடு விபரங்கள் தொடர்பில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் வெளியிட்ட கருத்து பிழையானது.
13 என்னும் கூட்டெண் வரும் இலக்கத் தகடுகளை விநியோகிப்பதில்லை என ஆணையாளர் தெரிவித்துள்ளார். எனினும் இவ்வாறான பல வாகனங்களை வீதிகளில் காண முடிகின்றது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாடாளுமன்றத்தை பிழையாக வழிநடத்தும் வகையிலான தகவல்களை வழங்கியுள்ளார்.
உபுல் ஜயசூரியவை பின்தொடர்ந்து சென்ற கும்பல் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் நீண்ட நேரம் நோட்டமிட்டுள்ளனர்.
இரண்டு நாட்கள் அவரது காரியாலத்திற்கு அருகாமையிலும், வீட்டுக்கு அருகாமையிலும் கண்காணிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளனர்.
வாகன இலக்கங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் கிடையாது. இது வியப்பிற்குரியது, ஏனெனில் குறித்த இலக்கங்களுக்கு அண்மைய முன், பின்னைய இலக்கங்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் காணப்படுகின்றன.
இது தொடர்பில் சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் எந்தளவிற்கு மேற்கொள்ளப்படுகின்றது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு ரணில் விக்ரமசிங்க பிரதமரிடம் கோரியுள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத் தலைவரை பின் தொடர்ந்த வாகனங்கள் பதிவு செய்யப்படவில்லை - பிரதமர்
சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரியவை பின் தொடர்ந்த வாகனங்கள், இலங்கை மோட்டார் போக்குவரத்து பிரிவில் பதிவு செய்யப்படாதவை என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
குறித்த மோட்டார் சைக்கிளும், முச்சக்கர வண்டியும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படாதவை.
குறித்த இரண்டு வாகன இலக்கங்கள் பற்றிய தகவல்களுமே மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் இல்லை.
உபுல் ஜயசூரியவை வாகனத்தில் பின்தொடர்ந்து கண்காணித்தமை உண்மையான சம்பவம் என்பது உறுதியாகியுள்ளது. எனினும், யார் எதற்காக பின் தொடர்ந்தார்கள் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
உபுல் ஜயசூரியவின் சீ.சீ.டி.வி. கமரா ஊடாக, வாகனங்களை அடையாளம் காண முயற்சிக்கப்படும். எவ்வாறெனினும் குறித்த வாகன இலக்கங்கள் போலியானவை என ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த வாகனங்களின் இலக்கக் கூட்டெண்கள் 13 ஆகையால் எவரும் இந்த வாகனங்களை வாங்குவதில்லை, எனவே மோட்டார் போக்குவரத்து திணைக்களம் 13 கூட்டெண்ணாக வரக்கூடிய இலக்கத் தகடுகளை விநியோகம் செய்வதனை இடைநிறுத்திக்கொண்டுள்ளது என பிரதமர் டி.எம் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjw5.html
தேர்தலை இலக்கு வைத்து அரசு அதிரடி நடவடிக்கை - சிரேஷ்ட அமைச்சர்கள் புறக்கணிப்பு
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 07:38.45 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களை இலக்கு வைத்து அரசாங்கம் குழுவொன்றை நியமித்துள்ளது.
இந்தக் குழுவுக்கு அமைச்சர் டலஸ் அழகபெரும மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் தலைமை தாங்குவர்.
அரச மற்றும் தனியார் ஊடகங்களின் அரசியல் நிகழ்ச்சிகளை அரசாங்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் நெறிப்படுத்துவதற்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பிரபல அரசியல் விவாத நிகழ்ச்சிகளில் அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்கும் 21 விசேட பேச்சாளர்களை இந்த குழு பெயரிட்டுள்ளது.
சந்த பண்டார, ரோஹித்த அபேகுணவர்தன, அனுரபிரியதர்ஷன யாப்பா, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பவித்ரா வன்னியாராச்சி, வாசுதேவ நாணயக்கார, டிலான் பெரேரா, ராஜித சேனாரத்ன, ஹிருணிக்கா பிரேமச்சந்திர, அருந்திக்க பெர்ணான்டோ, ரஞ்சித் சொய்சா உட்பட 21 போ் இதில் இடம்பெற்றுள்ளனர்.
முக்கிய அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரட்ன, விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க போன்றோர் இந்த பட்டியலில் இல்லை என கூறப்படுகிறது.
தனியார் ஊடகங்கள் அரசாங்க தரப்பின் சார்பில் இந்த 21 பேரில் ஒருவரையே அழைக்க வேண்டும் எனவும் தனியார் ஊடகங்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தவிர, தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் அரசியல் விவாத நிகழ்ச்சிகளுக்கான தலைப்புகளை தீர்மானிக்கும் உரிமையையும் இந்த குழு பெற்றுள்ளதாக பேசப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjxy.html

தோட்ட லயன் குடியிருப்பில் தீ விபத்து! 4 வீடுகள் எரிந்து நாசம் (செய்தித் துளிகள்)
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 08:21.50 AM GMT ]
தலவாக்கலை நானுஓயா தோட்டத்தில் அமைந்துள்ள லயன் குடியிருப்பு தொகுதியில் ஏற்ப்பட்ட திடீர் தீயினால் 4 வீடுகளின் கூரைத்தகடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
மேற்படி தோட்டத்தின் 2 இலக்க லயன் தொடர் குடியிருப்பொன்றே 25.07.2014 அன்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் திடீர் தீக்கிரையானது.
தீ ஏற்ப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த லயன் குடியிருப்பு தொகுதியில் மக்கள் அனைவரும்  இருந்துள்ளனர். எனினும் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்ப்படவில்லை. 
பின்னர் விடயமறிந்த பொதுமக்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அதன்போது ஒருவர் கையில் பலத்த தீ காயங்கள் ஏற்பட்ட நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் வீடு திரும்பினார். 
சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் எம். ராம், தலவாக்கலை லிந்துலை நகர சபை உபதலைவர் பிரசாத், நகரசபை உறுப்பினர் ரொசான் ராஜசேகர், கட்சியின் மாநில இயக்குனர் லோகதாஸ் ஆகியோர் விடயங்களை அறிந்து கொண்டதுடன் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினருக்கு உடனடியாக நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
அமைச்சர் ராம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அத்தோட்ட முகாமையாளர் வீரக்கோன் 26.07.2014 அன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் சம்பவ இடத்துக்கு விஜயம் செய்து பாதிப்புக்குட்பட்ட லயன் குடியிருப்பு தொகுதியின் கூரைத்தகடுகளை உடனடியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
தீ விபத்து தொடர்பில் தலவாக்கலை பொலிஸாரால் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.
குளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி
மலையகத்தில் அண்மைக்காலமாக குளவிகளின் தொல்லை தொடர்ந்த வண்ணமே உள்ளது.
பெருந்தோட்டங்களை நிர்வாகிக்கும் தோட்ட நிர்வாகம் இன்று தோட்டங்களை முறையாக நிர்வகிக்கப்படுவதில்லை.
இதனாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அண்மைக்காலமாக தேயிலை மலைகளில் குளவிகள் அதிகரித்துள்ளதுடன்; தேயிலை செடியின் அடிவாரத்தில் குளவி கூடுகள் காணப்படுகின்றன.
அந்தவகையில் நோர்வூட் மேற்பிரிவு தோட்டத்தில் 26.07.2014 அன்று பிற்பகல் 12.30 மணியளவில் குளவி கொட்டியதால் 8 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த வேளையில் தேயிலைப் பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு இவ்வாறு தொழிலாளிகளை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் பாதிப்பு இல்லையெனவும் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியதாகவும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
திம்புள்ளையில் விபத்து
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவின் குயின்ஸ்பரி தோட்டப் பகுதியில் 25.07.2014 அன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பகுதியில் பால் சேகரிப்பில் ஈடுப்பட்ட வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சேகரித்த பாலை குளிரூட்டும் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு திரும்பும் வழியில் வீதியை விட்டு விலகிய வாகனம் சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது வாகனத்தில் மூவர் பயணித்துள்ளனர். இவர்களில் இருவர் நாவலப்பிட்டி வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjxz.html
நாட்டின் மக்கள் தொகை 2.1 மில்லியன்- தொலைபேசிகள் இணைப்புக்கள் 2.2 மில்லியன்!: சரத் அமுனுகம
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 08:33.03 AM GMT ]
இலங்கையில் மக்கள் தொகையை விட அதிகளவானோர் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தொலைத்தொடர் இந்தளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளமை சிறந்தது என்ற போதிலும் அதில் கெடுதிகளும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் மக்கள் தொகையானது இரண்டு கோடியே பத்து லட்சமாகும். எனினும் இரண்டு கோடியே 20 லட்சம் தொலைபேசிகள் புழக்கத்தில் உள்ளன.
மக்கள் தொகைக்கு மேல் தொலைபேசிகள் உள்ளன. நாட்டிலுள்ள அனைவரிடமும் தொலைபேசிகள் உள்ளன.
அலுவலகங்களில் வேறு வேறு வேலைகளுக்காக தொலைபேசியில் பேச அரை மணிநேரம் ஒதுக்க வேண்டும். அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கி கொண்டு 30 நிமிடம் முதல் ஒரு மணிநேரம் வரை தொலைபேசியில் தனிப்பட்ட விடயங்களை பேசுகின்றனர்.
தொழிற்நுட்ப முன்னேற்றத்தோடு மக்களின் வாழ்க்கை சூழலும் மாறி விட்டது. கொழும்புக்குள் மட்டுமே இருந்த அழகு நிலையங்கள் இன்று நாடு முழுவதும் பரவியுள்ளன. இதன் மூலம் தொழில் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjx0.html
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமா?
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 08:49.10 AM GMT ]
அவுஸ்திரேலிய சுங்கக் கப்பலில் வைத்திருக்கப்படும் 157 புகலிடக் கோரிக்கையாளரின் எதிர்காலம் அடுத்த மாதம் தீர்மானிக்கப்படவிருக்கிறது.
இவர்கள் எதிர்காலம் குறித்த விசாரணை, ஆகஸ்ட் மாதம் 5ம் நாள், கன்பராவில் அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படும். இந்த விசாரணை அதி கூடியது இரண்டு நாட்களே நடத்தப்படும் என்றும் இந்த விசாரணையின் முடிவு இரண்டு முக்கிய விடயங்களில் தங்கியிருக்கிறது என்றும் அறியப்படுகிறது.
இது குறித்து இவர்களுக்கு என்னதான் நடக்கும் என்பதைப் பற்றி சற்று ஆழமாகத்தான் பார்க்க வேண்டும் என்று பல தரப்பட்ட கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
வழக்காளரின் கருத்துக்கள்
சமுத்திரவியல் அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பது சட்டபூர்வமானதா என்பதைத் தீர்மானிக்கக்கூடிய வழக்கு விசாரணைக்கு மத்தியில் அவர்களை பிரதான நிலப்பரப்பிற்கு மாற்றும் முயற்சிகள் பற்றி அறிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் திட்டம் குறித்த வழக்கில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அத்துடன், அந்தத் திட்டம் பற்றி அரசாங்கத்திடம் இருந்து எதுவித ஊர்ஜிதப்படுத்தல்களும் கிடைக்கவில்லை.
இலங்கையில் இருந்து படகு மூலம் புகலிடம் கோரி வந்தவர்கள் யூலை மதம் 7ம் திகதி அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவுக்கு அண்மையில் வைத்துத்தான் கைது செய்யப்படுள்ளதாக அவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டும் அல்லாமல் நடுக்கடலில் வைத்து இந்த புகலிடக் கோரிக்கையாளர்களை விசாரிப்பது சட்ட நியாயங்களுக்கு அப்பால் பட்டது எனவும் அவர்களை வாதிடுகிறார்கள்.
புகலிடம் கோரி வரும் படகொன்றினை கடலில் இடைமறித்து அந்த அகதிகளை வேற ஒரு நாட்டுக்கு கையளிக்கும் உரிமை இருக்கின்றதா? இல்லை முடிவெடுக்கும் முறையில் நியாயம் இருக்கின்றதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளதுடன், புகலிடக் கோரிக்கையைாளர்களை நடத்தும் முறையானது சர்வதேச சட்டங்களை மீறிச் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
புகலிட கோரிக்கையாலர்களின் படகை நடுக்கடலில் மரிக்கவோ அல்லது புகலிடக் கோரிக்கையாளர்களை மற்றைய நாடுகளுக்கு பாரம் கொடுப்பதற்கு அரசுக்கு உரிமை இருக்கின்றனவா என்பதை உயர் நீதிமன்றத்தின் குழு ஆயம் கன்பராவில் நடக்கும் அகஸ்ட் மாத இரண்டு நாள் சந்திப்பில் தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.
25 நாட்களாக நடுக்கடலில் தடுத்து வைத்தவர்கள் தொடர்பாக மிகவும் நல்லதொரு முடிவு எடுக்கப்படவேண்டும் என்றும் இவர்களின் வழக்குகள் அனைத்தும் மிக விரைவில் நடக்கப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அரசு தாக்கல் செய்த ஆவணங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் எங்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்பது புலன் படவில்லை.
உயரநீதிமன்றத்தில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டால் புகலிடக் கோரிக்கையாளர்களை அரசு அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கும் என்பது சரியாக தெரியவில்லை.
இந்த வழக்குகள் தோல்வி அடைந்தால் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் சாத்தியமும் இருக்கின்றது என்பது ஒரு சந்தேகமும் இருக்கின்றது.
பசுமை கட்சி
அவுஸ்திரேலியாவின் இந்த கடும்போக்கு திட்டத்துக்கு இந்தியா ஒரு போதும் ஒத்துப்போகாது என்று சுட்டிக்காட்டியுள்ளதுடன் இவர்களனைவரும் இலங்கை தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாமல்தான் இந்தியாவில் அகதிகளாக இருந்தவர்கள்.
இவர்களுக்கு இந்தியாவிலும் குடியுரிமை வழங்கப்படவில்லை இந்த அகதிகள் தொடர்பில் அபட் அரசாங்கம் அரசியல் நடத்துவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரதமரின் கருத்து
இலங்கை மிகவும் நெருங்கிய நேசமிக்க நாடு இலங்கையில் நடந்த யுத்தங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து சமூகமும் சுமுகமாக வாழ்வதற்க்கான சூழலை இலங்கை அரசு மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
மனித உரிமைகள் நன்றாக பேணப்பட்டு வருகின்றது. அகவே இலங்கை அகதிகள் இன்னும் ஒரு நாட்டுக்கு அகதிகளாக இடம்பெயர வேண்டிய அவசியமில்லை.
இலங்கை எமது நேசமிக்க நாடு. எந்தவகையிலும் அவர்களுக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்த அபட் இலங்கை அகதிகள் தொடர்பில் எமது கடும் போக்கு கொள்கையில் மாற்றம் ஏற்பட மாட்டது என ஆணித்தரமாக தெரிவித்தார்.
குடிவரவு அமைச்சர் மொரிசன்
இவர்கள் அவுஸ்திரேலியாவினால் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலில் உள்ள 157 தமிழ் அகதிகளில், இந்திய பிரஜைகளை மாத்திரம் பொறுப்பேற்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் உள்ளிட்ட குழுவினர், இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்தனர்.
இதன் போது இந்த இணக்கம் எட்டப்பட்டதாககவும் மொரிசன் தெரிவித்தார்.
இதில் இலங்கை அகதிகளை இந்தியா பாரம் எடுப்பதற்கு தயாராக இல்லாத நிலையில் இவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தியா பயணித்தின் பின்புதான் இவர்களை தரைக்கு கொண்டு வரும் முயற்சியில் மொரிசன் ஈடுபட்டுள்ளார்.
இந்த செயற்பாடு இலங்கைத் தமிழர்களுக்கு எவ்வளவுக்கு சாத்தியமாகும் என்பது மிகவும் உன்னிப்பாக பார்க்கக் கூடிய விடயமாகவே உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjx2.html

Geen opmerkingen:

Een reactie posten