தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 31 juli 2014

புகலிட கோரிக்கையாளர்கள் பப்புவா நியூகினியா அல்லது நவுரு தீவுக்கு அனுப்பி வைக்கப்படுவர்: அவுஸ்திரேலியா



மகிந்த ராஜபக்ச 3வது தடவையும் ஜனாதிபதியாவது உறுதி! நாமும் பங்காளர்களாக இணைவோம்!- பசீர் சேகுதாவூத்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 09:38.29 AM GMT ]
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியை மாற்றலாம் என்ற நம்பிக்கை இருந்தால் மாத்திரம் தான் அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ஊக்குவிப்பு உற்பத்தித்திறன் அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் மூன்று மாடிகளைக் கொண்ட நிர்வாகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எல்.ஏ.ஜுனைட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பசீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக அளித்த வாக்குகளை விடவும் குறைவான வாக்குகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அளிப்பார்களாக இருந்தால் தனது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்பை இராஜினாமாச் செய்வேன்.
இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த ஒருவர் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வருவது உறுதி. அதில் நாமும் பங்காளர்களாக இணைந்து கொள்ள வேண்டும்.
தேர்தலில் எதிர்த்து வாக்களித்து விட்டு அவர் வெற்றி பெற்றதன் பின்னர் மீண்டும் அவரிடம் சென்று அமைச்சுப் பொறுப்பை பெற்று என்ன முகத்துடன் எமது பகுதிக்கு அபிவிருத்திக்கான நிதியை கேட்பது. அதனால் தான் கூறுகின்றேன்.
கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளை விடவும் குறைவாக வாக்குகள் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களால் அளிக்கப்படுமாக இருந்தால் எனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்வேன்.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியை மாற்றலாம் என்ற நம்பிக்கை இருந்தால் மாத்திரம் தான் அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இலங்கையில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்டு ஜனாதிபதிக்கு எதிராக வாக்களித்தால் மாத்திரம் தான் தோற்கடிக்க முடியும் என்றால் நாம் ஒற்றுமைப்பட்டு அவரை தோற்கடிக்க முயற்சிக்க வேண்டும். மாறாக மட்டக்களப்பில் உள்ள முஸ்லிம்கள் மாத்திரம் எதிர்த்து வாக்களிப்பதால் அவரை தோற்கடிக்க முடியாது.
மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்காமல் அவரை தோற்கடித்து வெல்ல வேண்டும் அல்லது அவர் வெல்வார் என்றால் அவருக்கு வாக்களித்து வெல்ல வேண்டும். எந்த வெற்றி பொருத்தமாக இருக்குமோ அதன்படி நடப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.
நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் கூடுதலான வாக்குகளை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக அவர் வருவது உறுதி. அவ்வாறு அவர் ஜனாதிபதியாக வரும் போது அந்த வெற்றியில் பங்காளர்களாக இல்லாமல் நாம் இருப்போமானால் நட்டமடையப் போவது வாக்களிக்காத முஸ்லிம்கள் தான். மஹிந்த ராஜபக்ச அல்ல என்றார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல், ஓட்டமாவடிக் கோட்டக் கல்வி அதிகாரி எம்.எஸ்.கே.றகுமான், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஜே.எம்.முஸ்தபா, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களாக ஏ.எல்.ஜுனைட், ஐ.ரீ.அஸ்மி, எஸ்.ஏ.அன்வர் மற்றும் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசிகசாலை, வகுப்பறைக் கட்டிடம், நிருவாகக் கட்டிடம் என்பன அமையப் பெறவுள்ள மூன்று மாடிக் கட்டிடத்திற்கு முதலாம் கட்டமாக கல்வி அமைச்சினால் ஒரு கோடி நாற்பத்தொரு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgp7.html
ரயில் சாரதிகளின் சாதுர்யம் - பெரும் விபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட மக்கள்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 09:44.13 AM GMT ]
ரயில் சாரதிகளின் சாதுர்யத்தால் பாரியளவில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ஒன்று, இறுதி நேரத்தில் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலும், கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த ரயிலும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொள்ளவிருந்த சந்தர்ப்பம், தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
சமிக்ஞை தொடர்பிலான குளறுபடிகளே விபத்து ஏற்படக் கூடிய சந்தர்ப்பத்தினை உருவாக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு ரயில்களிலும் பெரும் எண்ணிக்கையிலான பயணிகளுடன் சென்றுள்ளது.
திருகோணமலைக்கும் கல்ஓயாவிற்கும் இடையிலான ரயில் பாதையில் குறித்த இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் நேருக்கு நேர் பயணித்துள்ளன.
அநுராதபுரம் ரயில் சமிக்ஞை பிரிவு இந்தப் பகுதியின் சமிக்ஞை கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் பயணிப்பது குறித்து ரயில் சாரதிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவித்தலை அடுத்து விரைந்து செயற்பட்ட ரயில் சாரதிகள், திருகோணமலை நோக்கிப் பயணித்த ரயிலை 150 கிலோ மீற்றர் மைல் கல்லிற்கு அருகாமையிலும், கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலை 142ம் கிலோ மீற்றர் மைல் கல்லிற்கு அருகாமையிலும் நிறுத்திக்கொண்டனர்.
இதனால் பாரியளவில் ஏற்படவிருந்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgqy.html
புகலிட கோரிக்கையாளர்கள் பப்புவா நியூகினியா அல்லது நவுரு தீவுக்கு அனுப்பி வைக்கப்படுவர்: அவுஸ்திரேலியா
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 09:52.32 AM GMT ]
படகு மூலம் அவுஸ்திரேலியாவை சென்றடைந்த 157 இலங்கை புகலிட கோரிக்கையாளர் நவுரு தீவு அல்லது பப்புவா நியூகினியாவின் மானுஸ் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவர்கள் இந்தியா திரும்ப மாட்டார்கள் எனவும் அரசாங்கம் கூறியுள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தலை தடுக்க அவுஸ்திரேலியா தொடர்ந்தும் பிராந்திய நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் என கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய கொடியுடன் அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்குள் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி சென்ற படகுக்கு எல்லை பாதுகாப்பு படையினர் உதவி வழங்கினர்.
தென் இந்தியாவில் இருந்து சென்றிருந்த இந்த படகில் 157 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இருந்தனர்.

அதில் இருந்த 157 பேரும் கேர்ட்டின் குடிரவரவு தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர்.
புகலிட கோரிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியை நாடியது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் இவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேற முடியாது.  அவர்கள் இந்தியாவுக்கு திரும்பி செல்லவில்லை என்றால், அவர்கள் நவுரு அல்லது பப்புவா நியூகினியாவில் மானுஸ் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு படகும் ஆட்கடத்தல்கார்களையும் அவர்களின் வாடிக்கையாளர்களை அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்லும் வழியை ஊக்குவிக்கும்.  அதற்கான வாய்ப்பு வழங்கப்படாது.
அண்மைய சம்பவம் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு தெளிவான செய்தியை வழங்கியுள்ளது.  சட்டவிரோத ஆட்கடத்தல்கார்களையும் அவர்களின் வர்த்தகத்தையும் நிறுத்த அவுஸ்திரேலியா கடமைப்பட்டுள்ளது.
மக்கள் சட்டவிரோத ஆட்கடத்தல்கார்களின் பொய்களை நம்பி படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லக் கூடாது எனவும் அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgqz.html

Geen opmerkingen:

Een reactie posten