தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 juli 2014

பொது வேட்பாளராக சிறுபான்மை இனத்தவர்?

இறுதி யுத்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 10:18.13 AM GMT ]
இறுதிக் கட்ட யுத்தத்தில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களை திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கபட்ட ஆணைக்குழுவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசாரணைகள் இறுதி யுத்தத்தில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலைகளில் இருந்து பெறப்படவுள்ளதாக ஆணைக் குழுவின் தலைவர் எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்காக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் திருகோணமலை புல்மோட்டை வைத்தியசாலைக்கான கண்காணிப்பு விஜயத்தை நேற்று மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது யுத்தத்தால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜானாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்ட போது மக்கள் அளித்த சாட்சியங்களுக்கு அமைய தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் முல்லைத்தீவு மற்றும் புல்மோட்டை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டதாகவும் எச்.டபிள்யூ.குணதாஸ குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆணைக்குழுவின் அடுத்த கட்ட விசாரணைகள் மன்னாரில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchv7.html
கொலை மிரட்டல் குறித்து சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 10:26.26 AM GMT ]
தொலைபேசி மூலமாக தனக்கு தொடர்ந்தும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக கூறி சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகர இன்று பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை முதல் இதுவரை 7 தொலைபேசி அழைப்புகள் எடுக்கப்பட்டதாகவும், தன்னை கொலை செய்ய போவதாக மிரட்டியதாகவும் அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
ஊடக நண்பர்கள் மற்றும் சட்டத்தரணிகள் கோரிக்கையை கவனத்தில் கொண்டு தான் இந்த முறைப்பாடு செய்துள்ளதாக சுனிஸ் ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchwy.html
பொது வேட்பாளராக சிறுபான்மை இனத்தவர்?
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 11:00.10 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாண ஆளுநராக ஜீ.ஏ. சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டமை,  அரசாங்கத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் யோசனையை கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸிடம் முன்வைத்துள்ளதாக பேசப்படுகிறது.
அதேவேளை முஸ்லிம் மக்களுக்கு தொடர்ந்தும் ஏற்பட்டு வரும் பிரச்சினைகள் கரணமாக முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ளது.
இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ்,  கூட்டமைப்பின் யோசனைக்கு ஆதரவு வழங்க இணங்கியுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.
எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோ இந்த தகவல்களை உத்தியோகபூர்வமாக ஊர்ஜிதப்படுத்தவில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchwz.html

Geen opmerkingen:

Een reactie posten