தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 juli 2014

ஊடகவியலாளர்கள் கைது! தொடர்பை எடுக்காது குறட்டை விட்ட வன்னி எம்.பிக்கள்!

ஈழத்துச் சிறுமியின் தாய் மண்ணின் பாடலால் கண்ணீரில் நனைந்த அரங்கம்

http://www.jvpnews.com/srilanka/77527.html

ஊடகவியலாளர்கள் கைது! தொடர்பை எடுக்காது குறட்டை விட்ட வன்னி எம்.பிக்கள்

அதன் போது இராணுவத்தினர் திட்டமிட்டு எமது வாகனத்தில் கஞ்சாவை வைத்துவிட்டு எமது ஊடகவியலர்கள் ஏழு பேரை கைது செய்தனர். இரவு 10 மணியளவில் இராணுவத்தினரதும் பொலிசாரினதும் முற்றுகைக்குள் அகப்பட்டு கொண்ட நாம் அதிலிருந்து விடுபட பலரது உதவிகளையும் கோரினோம்.
குறிப்பாக எமது வவுனியா சக ஊடகவியலாளர்களும், சம்பவ இடத்திற்கு வருகை தந்து இரவு இரவாக அழுத்தங்களுக்கு மத்தியிலும் எமக்காக குரல் கொடுத்தார்கள். ஆனால் நாம் தொடர்பு கொண்டவர்களில் முக்கியமாக வன்னி (வவுனியா) பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தினோம்.
10.30இல் இருந்து 1மணிவரை எம்மால் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்களது தொலைபேசிகள் எமது அழைப்ப ஏற்க மறுத்தன. அந்தவகையில், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களது கைத்தொலைபேசி மற்றும் நிலையான தொலைபேசி இரண்டிற்கும் 10.30இல் இருந்து தொடர்பு எடுக்கப்பட்ட போதும் அதற்கு எந்தவித பதிலும் வரவில்லை.
தொலைபேசி அழைப்புக்களை அவர் ஏற்கவில்லை. அதன்பின் வவுனியா ஊடகவியலாளர், அவரது சகாக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தனர். அதன் பின்னும் எதுவும் நடக்கவில்லை. அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இரு வவுனியா ஊடகவியலாளர்கள் எம்.பியின் வீட்டு கதவை இரவு 11 மணியளவில் பலமுறை தட்டியும் எந்த பதிலும் இல்லை. அவரது தொலைபேசி அழைப்புச் சத்தங்களை மட்டுமே வெளியே கேட்க முடிந்தது.
அடுத்தது, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.. இவரை தொடர்பு கொள்ள ஆள்மாறி ஆள்மாறி அழைப்பை ஏற்படுத்திய போதும் அவரும் பதில் இல்லை. அதன்பின் அவரது சக பாராளுமன்ற உறுப்பினர் வினோ அவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்திய போது அவரது தொலைபேசி இலக்கம் செயலற்று இருந்தது”.
பாருங்கள் எமது வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களை, அவர்களது அறிக்கைகளையும் செய்திகளையும் மக்களுக்கு கொண்டு சென்று சமூகத்திற்காக உழைக்கும் ஊடகவியலாளருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? இரவு 10 மணியில் இருந்து காலை 5.30 வரை வவுனியாவிலே நின்று போராடிய ஊடகவியலாளருக்கு அதுவரை இந்த எம்.பிமார் தொடர்பு எடுத்தார்களா? இல்லை. இவர்கள் தான் மக்கள் பிரதிநிதிகள்.
இது யாழ் ஊடகவியலாளருக்கோ அல்லது வவுனியா ஊடகவியலாளருக்கோ நடந்த பிரச்சனை இல்லை. எந்த ஊடகவியலாளருக்கு பிரச்சனை என்றாலும் இவர்கள் இதைத்தானே செய்வார்கள்.
http://www.jvpnews.com/srilanka/77530.html

Geen opmerkingen:

Een reactie posten