[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 12:02.29 AM GMT ]
கடந்த வியாழக்கிழமையன்று புதிய நகரமண்டபத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் சிராணியும் பங்கேற்றார்.
இதனையடுத்தே அவர் பொதுவேட்பாளராக போட்டியிடுவார் என்ற செய்தி வலுப்பெற்றது.
இந்தநிலையில் அவருக்கு அதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்பட்டமையை அடுத்தே சிராணி பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதில்லை.
இந்தநிலையில் வியாழக்கிழமை கூட்டத்தில் பங்கேற்றமை குறித்து அவரிடம் வினவிய போது, மூன்று நாட்களில் அதற்கான பதிலை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciu2.html
ரணில் - சம்பந்தன் இரகசிய சந்திப்பு
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 12:15.35 AM GMT ]
அண்மையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என சம்பந்தன் நேரடியாகவே ரணிலிடம் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தலில் ரணில் போட்டியிட்டால் அது ஆளும் கட்சிக்கே சாதக தன்மையை ஏற்படுத்தும்.
அனைத்து எதிர்க்கட்சிகளினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஓர் பொது வேட்பாளரை களமிறக்க வேண்டும். உங்களால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என சம்பந்தன் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciu3.html
சர்வதேச விசாரணைக்கு இலங்கை உண்மைத் தகவல்களை வழங்கவேண்டும்!- ஜப்பான் வலியுறுத்து
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 12:28.46 AM GMT ]
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிட்டோ ஹொபோ இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் விசாரணை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே இதன்போது ராஜபக்சவின் அரசாங்கம் உரிய தகவல்களை விசாரணைக் குழுவுக்கு வழங்கும் என்று ஜப்பான் எதிர்ப்பார்ப்பதாக தூதுவர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ இருக்கலாம், ஆனால் இறுதிப்போரின் போது நடந்தவை தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
எனவே அவர்கள் ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவிடம் உண்மைத் தகவல்களை வழங்க வேண்டும் என்று ஹொபோ வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் விசாரணையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட அவர் பிரசன்னம் இல்லாமலேயே பதில் கூறும் முறை ஒன்று இருப்பதை சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் உள்நாட்டு விசாரணையும் சர்வதேச நியமங்களுடன் மேற்கொள்ளப்படுமானால் அதனையும் ஜப்பான் ஏற்றுக்கொள்ளும் என்று ஜப்பானிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciu4.html
இலங்கையில் மதசுதந்திரம் தொடர்பில் அமெரிக்கா விமர்சனம்! மறுக்க தயாராகிறது இலங்கை
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 12:49.47 AM GMT ]
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இன்று 2013ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் தொடர்பிலான அறிக்கையை வெளியிடவுள்ளது.
இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இதனை வெளியிடுவார்.
இதில் இலங்கையில் பொதுபல சேனாவின் மதங்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து விமர்சிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் அதற்கு மறுத்து அறிக்கை வெளியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciu6.html
Geen opmerkingen:
Een reactie posten