தமிழர்களுக்கு மீண்டும் கையை விரித்தது மோடி அரசு! அடுத்தது என்ன..
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் முன்னெடுத்துள்ள விசாரணைக்கு ஐந்து நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. ஐ.நா விசாரணைக் குழு தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான விசாவை வழங்க இந்தியா மறுத்துள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹானாம ஹேவா தெரிவித்துள்ளார்.
நாடொன்றை தனிமையாக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணக்கு குறித்த நாடுகள் ஒத்துழைப்பு வழங்க மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்காக 13 பேர் கொண்ட குழுவையும் மூவர் அடங்கிய நிபுணர் குழுவையும் ஐநா மனித உரிமைகள் பேரவை நியமித்துள்ளது
இந்த விசாரணைகளுக்காக இலங்கைக்கும் அயல்நாடுகள் சிலவற்றுக்கும் செல்வதற்கு ஐநா குழு திட்டமிட்டிருந்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது விசாரணைகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிக்க முடியாமற்போகும் பட்சத்தில் இந்தியாவிலிருந்தேனும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐ.நா குழு எதிர்பார்த்திருந்தாக மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.
குறிப்பாக ஆப்கானிஸ்தானும் இலங்கை தொடர்பான விசாரணைக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையின்போது ஐநா குழுவினர் ஸ்கைப் மற்றும் ரெலி கொன்பரன்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி சாட்சியங்களை திரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது
எவ்வாறாயினும் இலங்கை அல்லது அதன் அயல்நாடுகளுக்கு வருகைதரும் ஐநா குழுவின் பிரதான நோக்கம் நிறைவேறாத நிலையில் அவர்கள் ஆசியாவிற்கு வெளியேயிருந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தளப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஐ.நா குழு தற்போது ஒஸ்லோ, ரொரென்டோ மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் இருந்து தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.jvpnews.com/srilanka/76892.html
மகிந்தரின் மச்சானின் நிதி மோசடி அம்பலம்….
இலங்கை தூதரகத்துக்கான கட்டிட கொள்வனவின் போது அவர் 45 மில்லியன் ரூபாவை மோசடி செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையை உடனடியாக திருப்பிச்செலுத்துமாறு கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று அவர் மேலும் இரண்டு பாரிய நிதி மோசடிகளை மேற்கொண்டிருப்பதாகவும் ராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/76895.html
புதுகுடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக…
35 வயதான குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுகுடியிருப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/76899.html
மோடியின் முக்கியஸ்தர் இலங்கைக்குள்
“மோடி ஆட்சியின் கீழ் இந்தியா” என்ற தலைப்பில், கொழும்பில் இன்று நடக்கவுள்ள கருத்தரங்கில் பாஜக தலைவர்கள் ஐவர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர். இந்தக் குழுவுக்கு சுப்பிரமணியன் சாமியே தலைமை தாங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தாம் சிறிலங்கா அதிபரின் அழைப்பின் பேரிலேயே அங்கு செல்வதாக, கொழும்பு புறப்பட முன்னர், சுப்பிரமணியன் சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நேற்று பிரிஐ செய்தியாளரிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
சுப்பிரமணியன் சாமியை சிறிலங்கா அதிபர் எதற்காக அழைத்துள்ளார் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. அமெரிக்காவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் சுப்பிரமணியன் சாமியைப் பயன்படுத்தி, ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வரப்படுவதைத் தடுப்பதற்கு, சிறிலங்கா அதிபர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
ஆனால், அதற்கு சுப்பிரமணியன் சாமி மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை. எனினும், புதுடெல்லியுடன் குறிப்பாக பாஜகவுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா அதிபர் சுப்பிரமணியன் சாமியைப் பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/76902.html
Geen opmerkingen:
Een reactie posten