தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 juli 2014

நளினி - முருகன் மீண்டும் சந்திக்க அனுமதி!

ஆசியாவில் திறமையற்ற விமான நிலையங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும் அடக்கம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 01:03.51 PM GMT ]
ஆசியாவில் மிகவும் திறமையற்ற விமான நிலையங்களில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும் அடங்குகிறது என்று விமானப் போக்குவரத்து ஆய்வு நிறுவனம் தனது தரப்படுத்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள வர்த்தக - சர்வதேச விமான நிலையங்களை தரப்படுத்தி வெளியிடப்பட்ட அந்த அமைப்பின் அறிக்கையில் 200 விமான நிலையங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் அமெரிக்காவின் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் 12 வது வருடமாகவும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
தவிர வட அமெரிக்காவின் சர்லோட், ஒக்லஹோமா, வன்கூவர் விமான நிலையங்கள் முன்னிலை வகிக்கின்றன.
ஐரோப்பாவில் கோப்பன்ஹேகன் விமான நிலையமும், ஆசியாவில் தென்கொரிய விமான நிலையமும் முன்னிலை வகிக்கின்றன.
ஆசியாவின் திறமையற்ற விமான நிலையங்களாக ஜப்பானின் ஹன்சாய் விமான நிலையம் நகோயா விமான நிலையம், இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஆகியன தரப்படுத்தப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLcitz.html
இலங்கைக்கு பாகிஸ்தான் அதிகாரி தொடர்பான தகவல்களை வழங்கிய இந்தியா
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 01:14.53 PM GMT ]
இந்தியாவின் தென் பகுதியில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தூதரங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதில் முக்கிய பங்கை கொண்டிருந்த கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரியின் ஐ.எஸ்.ஐ.உறுப்பினர் குறித்து இலங்கைக்கு  இந்தியா தகவல்களை வழங்கியுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் 2010 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட தேசிய புலனாய்வு முகவர் அமைப்புகளுக்கு இடையிலான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் இந்த தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவின் தகவல் ஒன்றின் அடிப்படையில் தமிழக பொலிஸார் இலங்கை பிரஜையான சாகீர் உசைன் என்ற நபரை கைது செய்திருந்தனர்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் ஆகியன தொடர்பில் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனத்திற்காக வேவு பணிகளை முன்னெடுக்க சாகீர் உசைன் இந்தியாவுக்குள் வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் பாகிஸ்தான் தூதரகத்தின் ஊடக இணைப்பாளர் முஹமட் தாவூத் எத்திஷாம் பாகிஸ்தானின் பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனங்கள் அத்தகைய செயல்களில் ஈடுபடுவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLcit0.html
நளினி - முருகன் மீண்டும் சந்திக்க அனுமதி
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 01:41.11 PM GMT ]
ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியும் அவரது கணவரான முருகனும் மீண்டும் சந்திக்க சிறைத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தூக்கு தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் மத்திய சிறையிலும், இவருடைய மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறை யிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து 30 நிமிடங்கள் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் முருகன் அறையில் இருந்து ரூ.7,500 மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து நளினி - முருகன் சந்திக்க கடந்த 3 வாரங்களாக சிறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் மன வேதனையடைந்த நளினி உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக முருகன், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கான தண்டனையை ரத்துச் செய்யக் கோரி சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார்.
இதையடுத்து வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வழக்கம் போல் நளினியும், முருகனும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLcit2.html

Geen opmerkingen:

Een reactie posten