தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 juli 2014

13வது திருத்தத்தை மறந்தது ஏன்? தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நீதி தேவை இல்லையா? - சோபித தேரரிடம் மனோ கேள்வி

17 மில்லியன் ரூபாவை வங்கியில் மோசடி செய்த 17 வயது இளைஞன்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 08:54.56 AM GMT ]
வங்கியொன்றில் 17.8 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த 17 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு கோட்டே நீதிமன்றில் குறித்த இளைஞர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஏ.ரீ.எம். அட்டையப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளது.
பொலனறுவையை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த இளைஞர் கடந்த ஜனவரி மாதம் ஜாஎல பிரதேசத்தில் உள்ள வங்கியொன்றில் கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
163,000 ரூபா வைப்பிலிட்டு இந்த கணக்கை ஆரம்பித்துள்ளார்.
குறித்த தனியார் வங்கியின் கணனி மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாரியளவு பணம், இளைஞரின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
பணத்தைக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றை குறித்த இளைஞர் கொள்வனவு செய்துள்ளார்.
ஏ.ரீ.எம். நிலையங்களின் ஊடாக சுமார் 658 தடவைகள் பணத்தை மீளப்பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றச் செயலை ஒப்புக் கொண்ட இளைஞரை கோட்டே நீதவான் திலின கமகே பிணையில் விடுதலை செய்துள்ளார்.
50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா ஒரு மில்லியன் ரூபாவான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் இளைஞர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மீளப் பெற்றுக்கொண்ட பணத்தை திருப்பிச் செலுத்த இளைஞர் ஒப்புக்கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchvz.html
13வது திருத்தத்தை மறந்தது ஏன்? தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நீதி தேவை இல்லையா? - சோபித தேரரிடம் மனோ கேள்வி
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 08:41.11 AM GMT ]
18ம் திருத்தத்தை ஒழித்து, 17ம் திருத்தத்தை மீளக்கொண்டு வருதல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் ஆகியவை பற்றி மட்டும் பேசும் வண. மாதுளுவாவே சோபித தேரர், இப்போது அரசியலமைப்பில் பெயரளவிலாவது இருக்கின்ற 13 வது திருத்தத்தை மறந்தது ஏன்? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 
நீங்கள் முன்னெடுக்கும் சமூகநீதி தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இல்லையா? என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளரும், கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதியுமான வண. சோபித தேரரிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் செய்தியாளர் மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்ட போது, வண. சோபித தேரர் தலைமையிலான அதன் முதல் ஊடக மாநாட்டில் நானும் கலந்துகொண்டேன்.
என்னுடன் இன்றைய வடமேல் மாகாண முதல்வர் தயாசிறி ஜயசேகர ஐதேக சார்பாகவும், கூட்டமைப்பு சார்பாக நண்பர் சுமந்திரனும் கலந்துகொண்டார்கள். அத்துடன் இடதுசாரி தலைவர்கள் விக்கிரமபாகு கருணாரத்ன, சிறிதுங்க ஜயசூரிய ஆகியோரும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.
அப்போது அதிகார பகிர்வு பற்றியும் நாம் அந்த ஊடக மாநாட்டில் பேசினோம். உண்மையில் சிங்களத்தில் "சாதாரண சமாஜ சந்தஹாவு ஜாதிக வியாபாரய" என்ற பெயரை தமிழ் மொழியில் “சமூக நீதிக்கான தேசிய இயக்கம்” என்று மொழி பெயர்த்ததே நான்தான்.
ஆனால், இன்று இந்த இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலில் அதிகார பகிர்வு என்ற விடயம் இல்லை. இது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏற்புடையதில்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு என்று நாடு முழுக்க வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் நீதியாக சிந்திக்கும் சிங்கள மக்களின் ஆதரவு அவசியம் என்றால், உங்கள் குறைந்தபட்ச நிகழ்ச்சி நிரலில், 13ம் திருத்தத்திற்கும் இடமிருக்கவேண்டும்.
13ம் திருத்தம் தேசிய இனப்பிரச்சினையை முழுமையாக தீர்க்கப் போவதில்லை. ஆனால், அது ஒரு குறைந்தபட்ச ஆரம்ப புள்ளி. அதைவிடவும் இனி ஒரு போதும் கீழே இறங்க முடியாது.
இந்நாட்டின் ஜனாதிபதி 13ஐ அமுல் செய்து, 13 ப்ளஸ் பற்றி பேச்சுவார்த்தை நடத்த போவதாக ஐநா செயலாளர் நாயகத்துக்கு எழுத்து மூலம் உத்தரவாதம் அளித்துள்ளார். இந்நிலையில் 13ஐ சோபித தேரரின் இயக்கம் மறந்ததையிட்டு தமிழ் பேசும் மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள்.
கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற சமூக நீதிக்கான தேசிய இயக்க மாநாட்டுக்கு வருகை தரும்படி சோபித தேரர் என்னையும் அழைத்திருந்தார். அந்த அழைப்பிற்கு நன்றி. அச்சமயம் நான் நாட்டில் இருக்கவில்லை.
நேற்று தான் நாடு திரும்பினேன். சோபித தேரர் எனது நண்பர். அவருடன் எனக்கு நெருங்கிய பரிச்சயம் உள்ளது. அவரை நான் மதிக்கிறேன். ஆனால், நமது மக்கள் பற்றியும் கலந்து பேசாத இயக்கத்தில் நாம் இணைந்து கொள்வதில் சிக்கல் இருக்கிறது.
இதை வண. தேரின் கவனத்துக்கு பகிரங்கமாக இந்த செய்தியாளர்கள் மூலம் சிங்கள, தமிழ் மொழிகளில் கொண்டு வருகிறேன். இது என் கடமை.
சோபித தேரரின் அந்த கூட்டத்தில் கூட்டமைப்பு தலைவர் கலந்துகொண்டதை பற்றி இங்கே செய்தியாளர் என்னிடம் கேள்வி எழுப்பினார். கலந்துகொண்டதில் என்ன தவறு இருக்க முடியும்? கூட்டமைப்பின் நிலைப்பாடும், எங்கள் நிலைப்பாடாகத்தான் இருக்கும் என நான் நம்புகிறேன். எனினும் இதுபற்றி நீங்கள் கூட்டமைப்பிடம்தான் கேட்க வேண்டும்.
அதிகாரப்பகிர்வு, 13ம் திருத்தம் ஆகியவற்றை தீண்டத்தகாத விடயங்களாக கருதி செயல்படும் ஒரு கூட்டம் இங்கு உள்ளது. அது ஆளும் கூட்டணியிலும், எதிரணியிலும் உள்ளது.
இதன் இணைத்தலைவர்கள் விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவும் ஆகும். இன்று விமல், ஊவா தேர்தலில் தனித்து போட்டியிட போகிறார். இது நல்ல முடிவு. அவரை நான் வாழ்த்துகிறேன். ஹெல உறுமயவும் இப்படி தனித்து போட்டியிட வேண்டும் என கோருகிறேன்.
சிறு கூட்டங்களான இவர்கள், கூட்டணியில் போட்டியிட்டு தங்கள் சொந்த கருத்துகளை பொது கருத்தாக காட்ட முயல்கிறார்கள். ஆகவே தனித்து சென்று, சிங்கள மக்கள் மத்தியிலே உங்கள் செல்வாக்கை காட்டுங்கள்.
இங்கே மேல்மாகாணசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஐம்பத்தி ஓராயிரம் வாக்குகளை சொந்தமாக பெற்று என் மக்கள் செல்வாக்கை நான் காட்டியுள்ளேன். முடிந்தால் நீங்களும் ஊவாவில் சிங்கள மக்களிடம் வாக்கு வாங்கி காட்டுங்கள். அதன்பிறகு அதிகார பகிர்வை எதிர்த்து நீங்கள் பேசலாம்.
அதை செய்யாமல் 13ஐயும் எதிர்த்து கொண்டு, மாகாணசபையையும் எதிர்த்து கொண்டு, மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு, பதவிகளை பெற்று, நீங்கள் கோமாளி அரசியல் செய்கிறீர்கள். இங்கே மேல்மாகாணசபையில் அமைச்சராகவும் பதவி வகித்து கொண்டு ஹெல உறுமயவின் உதய கம்மன்பில உச்சகட்ட கோமாளி அரசியல் செய்கிறார். நாங்கள் கோமாளி அரசியல் செய்யவில்லை.
இந்த நாட்டை பிரித்து தனி நாட்டை உருவாக்க விரும்பிய புலிகள் அதிகாரப்பூர்வமாக பாராளுமன்றம் வரமுடியாது. அதுபோல் அதிகார பகிர்வை ஏற்றுக்கொள்ளாத நீங்கள் அதிகாரப்பூர்வமாக மாகாணசபைக்கு வர முடியாது. புலிகள் வரவில்லையே. நீங்கள் மட்டும் ஏன் வருகிறீர்கள்?
http://www.tamilwin.com/show-RUmsyHQULchvy.html

Geen opmerkingen:

Een reactie posten