தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 31 juli 2014

அமெரிக்க தூதரகத்தின் நோக்கம் தெளிவில்லை: அரசாங்கம்

இலங்கையில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 12:03.45 PM GMT ]
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் இந்திய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை பிரதிநிதிகள் கலந்து கொள்வதற்கு இடைக்கால தடையுத்தரவை கோரி விருதுநகரை சேர்ந்த சட்டத்தரணி எஸ்.எம். ஆனந்தமுருகன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிப்பது, இந்திய மீனவர்கள் மற்றும் தமிழக மக்களின் நலன்களுக்கு சிறந்ததாக அமையும் என அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
மேற்படி மனுவுக்கு எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் பதிலளிக்குமாறு நீதிபதிகள் எம். ஜெயச்சந்திரன் மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்திய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இலங்கையில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் நரேந்திரமோடி இன்னும் தனது கருத்துக்களை வெளியிடவில்லை.
எவ்வாறாயினும் தமிழகத்தின் எதிர்ப்புகளை மீறி மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை தமிழகத்தில் 25 மாவட்டங்களில் உள்ள 110 முகாம்களில் 69 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்தும் அகதிகளாக வாழ்ந்து வருவதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழ் அகதிகள் 10க்கு 10 அடி வீடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
முகாம்களில் இருப்பதை விட சிறந்த வாழ்க்கையை தேடி அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்து வருகின்றனர்.
இலங்கை தமிழ் அகதிகளில் இளைய தலைமுறையினர் இருண்ட எதிர்காலத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.  இவ்வாறான சூழ்நிலையில், இந்தியா, இலங்கையில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வது தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம் எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgq6.html
வடகிழக்கு தமிழர்களைப் பற்றி கதைக்க அதாவுல்லாவுக்கு எந்த அருகதையும் இல்லை!: அ.அமிர்தலிங்கம்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 12:11.39 PM GMT ]
வட, கிழக்கு தமிழர்களின் தாயக பூமி. அதில் பூர்வீகமாக வாழும் தமிழ் மக்களின் நலனைப் பற்றி கதைக்க அமைச்சர் அதாவுல்லா யார் என கல்முனை மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் அதாவுல்லா கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்தில் இருந்து பிரித்தெடுப்பதற்கு தான் மிகவும் கஸ்டப்பட்டதாகவும் அதன்மூலம் தற்போது முஸ்லிம்களினதும், தமிழர்களினதும் உறவு கட்டி எழுப்பப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பாக கல்முனை மாநகரசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமைச்சர் அதாவுல்லா மிகவும் ஆழமாக சிந்தித்தா இவ்வாறான விடயங்களை பேசுகிறார். ஏன் அன்று வடகிழக்கு இணைக்கப்பட்டிருந்த போது தமிழர்களும், முஸ்லிம்களும் நல்ல உறவினை கட்டியெழுப்பி அன்னியொன்னியமாக வாழவில்லையா? அல்லது வாழத்தான் நினைக்கவில்லையா?.
கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் தமிழர்கள்தான் பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள். அதனைப்பொறுக்க முடியாத சிலர் நன்கு திட்டமிட்டு அவர்கள் இனம் சார்ந்த குடியேற்றங்களை தமிழர் பிரதேசங்களை மையப்படுத்தியதாக அமைத்து, தமிழர்களது வீதாசாரத்தினை குறைத்தார்கள்.
அன்று எமது சகோதர இனம் என்று கூறும் அமைச்சர்களும் இந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்காளகத்தான் வாய்மூடி மௌனிகளாக இருந்தார்கள். ஏன் குறிப்பாக வடகிழக்கு தமிழர்கள் வகைதொகையின்றி அழித்தொழிக்கப்பட்டபோதும் தமிழ்ப்பெண்கள் விதவைகளாக்கப்பட்டபோதும், எமது மக்கள் இருப்பதற்குக்கூட இடமின்றி தத்தளித்து ஏதிலிகளாக்கப்பட்ட போதும், தமிழர் சொத்துக்கள் சூரையாடப்பட்டபோதும், தாங்கள் ஒரு அரசியல் கட்சித்தலைவராகவும் பொறுப்பு வாய்ந்த அமைச்சராகவும் இருந்தீர்கள். அன்று எமது மக்களுக்காக ஒரு நிமிடமாவது யாரிடமாவது பேசியதுண்டா? என்பதனை சிந்தித்துப்பாருங்கள்.
நீங்கள் அரசாங்கத்துடன் இருந்து அவர்களது காலைப் பிடித்துக்கொண்டு அவர்கள் நலன் சார்ந்த அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் அரசியல் செய்யுங்கள். அதற்கு எமது மக்கள் என்றும் தடையாக இருக்கமாட்டார்கள். ஆனால் நீங்கள் எங்கள் பூர்வீக நிலங்களை சூரையாடுவதனையும் எமது  மக்களைப்பற்றி தேவையற்ற வார்த்தைகளை பேசுவதனையும் முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறிய மக்கள் இன்னும் தமது சொந்த இடங்களுக்குச்சென்று வாழமுடியாத நிலையிலேயே தமது உறவினர் வீடுகளிலும் ஏனை இடங்களிலும்     ஏதிலிகளாக வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள் என்பதனை அமைச்சர் என்ற வகையில் தெரிந்திருப்பது மிகவும் கட்டாயமானதாகும்.
இன்று வடக்கில் இருந்து கிழக்கு பிரிக்கப்பட்டு விட்டதாகவும் இங்கு வாழும் தமிழர்கள் சகல வசதிகளையும் பெற்று சுயாட்சியுடன் வாழ்கின்றார்கள் என்ற தொனியில் பேசும் இவர் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பிரதேசத்தில் உள்ள காணிகள் தங்களுடைய தலமையில் சுவீகரிக்கப்பட்டிருக்கின்றது. என்பதனை எண்ணிப்பார்த்தீர்களா? தாங்கள் அடாவடித்தனமான அரசியலை நடத்துவது போன்று நாங்கள் அரசியல் நடத்தவில்லை.
65 வருடகாலமாக எங்களது போராட்டம் பல வடிவங்களில் நடத்தப்பட்டிருந்தது அதில் ஒன்று தந்தை செல்வா வழிநின்று அகிம்சை ரீதியான போராட்டம். மற்றயது ஆயுதபோராட்டம்.
இந்த இரண்டு போராட்டங்களிலும் எமது இனம் சொல்லொண்ணா துன்பதுயரங்களை சந்தித்த ஒரு இனம் இவ்வாரான துன்பதுயரங்களை அனுபவித்துவிட்டு வேதனையில் இருக்கும் போது, கிழக்கு மாகாணத்தினை வடக்கில் இருந்து பிரித்தெடுத்து விட்டு இப்போது தான் தமிழர்களும் முஸ்லிங்களும் ஐக்கிய உறவு என்று சொல்வது நகைப்பிற்குரிய விடயமாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது.
இவரைப்பார்த்து நாம் ஒன்றைக்கேட்க வேண்டி இருக்கின்றது. இந்த நாட்டிலே முஸ்லிங்கள் தாக்கப்பட்டபோதும் பள்ளிவாசல்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்போதும், வாய் மூடி மௌனிகளாக இருந்துவிட்டு அரசாங்கத்திற்கு எதிராக எந்தக்கருத்தினையும் சொல்ல முடியாத அமைச்சர் கிழக்கினை பிரித்தெடுத்ததன் மூலம் தமிழ் - முஸ்லிம் உறவு வளரும் என்று சொல்வதற்கு இவருக்கு வெட்கமில்லையா எனக்கேட்க விரும்புகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgq7.html
அமெரிக்க தூதரகத்தின் நோக்கம் தெளிவில்லை: அரசாங்கம்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 01:16.29 PM GMT ]
இலங்கையின் ஊடக சுதந்திரம் சம்பந்தமாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்காக அமெரிக்க தூதரகம் கடந்த வாரம் ஒழுங்கு செய்திருந்த பயிற்சி திட்டம் ஒன்றை அரசாங்கம் மூலம் இரத்து செய்தமை குறித்து அதிருப்தி தெரிவித்து தூதரகம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதன் மூலம் இலங்கையின் ஊடகவியலாளர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.
எவ்வாறாயினும் இது சம்பந்தமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு,  அமெரிக்க தூதரகம் இவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு எந்த நோக்கத்தில் உதவுகிறது என்பது தெளிவில்லை என குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgrz.html

Geen opmerkingen:

Een reactie posten