தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 juli 2014

கச்சதீவுக்குள் நுழையும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள்: இலங்கை கடற்படை!

17 மில்லியன் ரூபாவை வங்கியில் மோசடி செய்த 17 வயது இளைஞன்- கொழும்பில் இரு வைத்தியர் குழுக்களுக்கிடையில் மோதல்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 08:54.56 AM GMT ]
வங்கியொன்றில் 17.8 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த 17 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு கோட்டே நீதிமன்றில் குறித்த இளைஞர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஏ.ரீ.எம். அட்டையப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளது.
பொலனறுவையை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த இளைஞர் கடந்த ஜனவரி மாதம் ஜாஎல பிரதேசத்தில் உள்ள வங்கியொன்றில் கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
163,000 ரூபா வைப்பிலிட்டு இந்த கணக்கை ஆரம்பித்துள்ளார்.
குறித்த தனியார் வங்கியின் கணனி மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாரியளவு பணம், இளைஞரின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
பணத்தைக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றை குறித்த இளைஞர் கொள்வனவு செய்துள்ளார்.
ஏ.ரீ.எம். நிலையங்களின் ஊடாக சுமார் 658 தடவைகள் பணத்தை மீளப்பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றச் செயலை ஒப்புக் கொண்ட இளைஞரை கோட்டே நீதவான் திலின கமகே பிணையில் விடுதலை செய்துள்ளார்.
50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா ஒரு மில்லியன் ரூபாவான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் இளைஞர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மீளப் பெற்றுக்கொண்ட பணத்தை திருப்பிச் செலுத்த இளைஞர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டு வைத்தியர் குழுக்களுக்கு இடையில் மோதல்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டு வைத்தியர் குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கூட்டமொன்றை நடாத்துவது தொடர்பில் இந்த முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் சற்று முன்னர் இந்தக் கூட்டம் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.
இதன் போது எதிர் தரப்பு வைத்தியர் குழு எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பதற்ற நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchvz.html
கச்சதீவுக்குள் நுழையும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள்: இலங்கை கடற்படை
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 09:09.27 AM GMT ]
தமிழக மீனவர்கள் கச்சதீவுக்குள் நுழைந்தால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கடற்படை பேச்சாளர் கமாண்டார் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் கச்சதீவை சுற்றி கடற்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினர் கைது செய்த மீனவர்களை விடுதலை செய்யாது போனால், கச்சதீவில் குடியேற போவதாக தமிழக மீனவர்கள் அறிவித்திருந்தனர்.
எவ்வாறாயினும் தமிழக மீனவர்கள் இவ்வாறு அறிவித்திருப்பது இது முதல் முறையல்ல எனவும் இரண்டு முறை இவ்வாறு கூறியிருக்கின்றனர், எனவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினர் கைது செய்த 92 மீனவர்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 26 ஆம் திகதி 51 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் 7 படகுகள் கைப்பற்றப்பட்டன.
இந்த மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என கோரி தமிழக மீனவர்கள் கடந்த 4 நாட்களாக தொழில் பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது போனால், படகுகளில் வெள்ளைக்கொடியுடன் சென்று கச்சதீவில் குடியேற போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchv0.html

Geen opmerkingen:

Een reactie posten