இலங்கையின் கடலோர பாதுகாப்பு உச்ச நிலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது !
[ Jul 28, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 3035 ]
கரையோரப் பாதுகாப்பு உச்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி பாரியளவில் போராட்டமொன்றை நடாத்த உள்ளதாக தமிழக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆயிரக் கணக்கான மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க உள்ளதாகவும், இலங்கையிடம் புகலிடம் கோர உள்ளதாகவும் எச்சரித்திருந்தனர்.
எனினும், கரையோரப் பாதுகாப்பு உச்சளவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளா கோசல வர்னகுலசூரிய தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 24 மணித்தியாலங்களும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/594.htmlகறுப்பு ஜூலை கலவரத்தில் உயிர் நீத்தவர்களை பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் நினைவு கூர்ந்தார் !
[ Jul 28, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 1620 ]
கறுப்பு ஜூலை கலவரத்தில் இலங்கையில், உயிர் நீத்தவர்களை பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் எட் மில்லிபான்ட் நினைவு கூர்ந்துள்ளார். 1983ம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற வன்முறைகளில் ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் சொல்லொனா துயரங்களை அனுபவிக்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார். ஜூலை கலவரம் தொடர்பில் வெளியிட்ட விசேட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வருந்தத்தக்க வன்முறைகளில் உயிரிழந்த தமிழ் ஆண், பெண் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் பற்றி நினைவு கூற வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். வன்முறைகளில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது பற்றிய துல்லியமான புள்ளி விபரங்கள் கிடையாது என அவா தெரிவித்துள்ளார். வன்முறைகளை எம்மால் இன்றும் மறக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெறுவதனை உறுதி செய்யுமாறு பிரதமர் டேவிட் கமரூனிடம் கோருவதாகத் தெரிவித்துள்ளார். நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக சர்வதேச விசாரணைகளை கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/595.htmlகாணாமற்போனோர் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களும் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் !
[ Jul 28, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 1655 ]
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாம் ! ஆகஸ்ட் 15 ஆம் திகதியுடன் விசாரணைக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு விசாரணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆணைக்குழு முன்னிலையில புலம்பெயர் தமிழர்களும் சாட்சியம் அளிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது புலம்பெயர் தமிழர்களை சிரிப்புக்கு உள்ளாக்கும் விடையம் என்பது அவருக்கு தெரியவில்லை போலும். உள்ளூரில் இருப்பவர்கள் சொல்லியே காது கொடுத்து கேட்க்காமல் இருக்கும் இவர்களுக்கு, புலம் பெயர் தமிழர்களின் சாட்சியும் வேண்டுமாம் ! எனினும், புலம்பெயர் மக்களின் சாட்சி விசாரணைகளுக்கான அமர்வுகள் தொடர்பில் இதுவரை தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சாட்சி விசாரணை அமர்வுகளில் 19,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மெக்ஸ்வெல் பரணகம சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/596.html
Geen opmerkingen:
Een reactie posten