[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 04:51.12 PM GMT ]
இது தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தாம் ஏற்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் சர்வதேச மற்றும் தமது நாட்டு சட்டமுறைகளின் அடிப்படையிலேயே இந்த படகு அகதிகள் விடயத்தை அணுகுவதாக அபோட் இன்று ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
நடுக்கடலில் தடுக்கப்பட்ட படகில் இருந்த 157 பேரில் பெரும்பாலானோர் இலங்கை தமிழர்களாக இருக்கலாம்.
தற்போது கென்பராவுக்கு அழைத்து வரப்படும் அவர்கள், அங்கு தங்கவைக்கப்படுவர் என்று அபோட் கூறினார்.
மனித கடத்தல்காரர்களால் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் அழைத்து வரப்படும் அகதிகள், தாம் சட்டவிரோதமாகவே அழைத்து வரப்படுவதை உணர வேண்டும்.
இந்தநிலையில் படகுகள் மூலம் சட்டவிரோதமாக வரும் எவரும் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக தங்க வைக்கப்படமாட்டார்கள் என்றும் அபோட் குறிப்பிட்டார்.
கடந்த செப்டெம்பரில் பதவிக்கு வந்த அபோட், அகதி படகுகளை நிறுத்தப்போவதாக உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcip6.html
யு.எஸ். எயிட் நிறுவனம் தொடர்பில் மீண்டும் குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 11:24.16 PM GMT ]
வாக்காளர்களை தெளிவுபடுத்துவதன் மூலம் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த அந்த நிறுவனம் முயற்சித்திருந்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாரியளவு நிதி ஒதுக்கீட்டில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது. எனினும், இலங்கை அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பு காரணமாக வாக்காளர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது யு.எஸ். எயிட் நிறுவனம் கிராமங்களுக்குள் பிரவேசித்துள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
வேறு வழியில் அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் இவ்வாறு யு.எஸ். எயிட் நிறுவனம் கிராமங்களுக்குள் பிரவேசித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேற்குலக நாடொன்றின் தூதரக காரியாலயத்தில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சிவில் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் திட்டமொன்றின் மூலம், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளுக்காக பணத்தை செலவழிக்கவும் இந்த அரச சார்பற்ற நிறுவனம் விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcip7.html
தமிழ் ஊடகவியலாளர்கள் பயிற்சி பெறுவதற்கான உரிமை மறுக்கப்படுகின்றது!– தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 01:01.27 AM GMT ]
கொழும்பு இதழியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் பயிற்சியில் பங்கேற்பதனை தடுக்கும் நோக்கில் போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.
ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி பட்டறைகளை நடத்துவது அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் அல்ல.
கருத்தரங்கில் பங்கேற்க வேண்டாம் என சில ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்
திட்டமிட்ட வகையில் ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனத்தில் கஞ்சா போதைப் பொருள் போடப்பட்டுள்ளது.
வடக்கிலிருந்து ஊடகவியலாளர்கள் பயிற்சி நெறிகளில் ஈடுபடுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் தைரியத்துடன் பேசி, கொழும்பு வந்தடைந்தனர்.
எனினும், பயிற்சி பட்டறை நடைபெறவிருந்த இடத்தில் நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக பயிற்சி பட்டறை இடைநிறுத்தப்பட்டது என நிக்சன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLciq3.html
Geen opmerkingen:
Een reactie posten