[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 03:40.21 AM GMT ]
பலஸ்தீன் காஸா மீதான தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் மக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
நோன்பு பெருநாள் தொழுகையின் பின்னர் இவ் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியிலும், அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமுனை மற்றும் சின்னப்பாலமுனை ஆகிய பிரதேசங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கெதிரான வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்தி உடனடியாக யுத்தத்தை நிறுத்தி முஸ்லிம்களுக்கு உதவுங்கள் எனக் கோஷம் எழுப்பினர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchqz.html
நாடு முழுவதிலும் இடம்பெற்ற புனித ரமழான் பண்டிகைக் கொண்டாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 05:14.09 AM GMT ]
அந்தவகையில் மலையகத்தில் முஸ்லிம்கள் ரமழான் பண்டிகையை விசேட தொழுகையில் ஈடுப்பட்ட பின்னர் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.
ஹற்றன் நகரில் பிரதான ஜும்மா பள்ளிவாசலில் ஹற்றன் முஸ்லிம் மக்கள் விசேட ரமழான் தொழுகையிலும் பிராத்தனைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
ஏறாவூர் மற்றும் கல்குடாவில்...!
மட்டக்களப்பு, ஏறாவூரில் பெருந்திரளான முஸ்லிம் மக்கள் கூடி இன்று புனித நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியின் திடலில் இந்த தொழுகை செவ்வாய்கிழமை காலை 6.35 இற்கு நிறைவேற்றப்பட்டது.
ஆண்களும், பெண்களுமாக பெருந்திரளான தௌஹீத் ஜமாஅத்தினர் இந்த தொழுகையிலும், அதன் பின்னர் இடம்பெற்ற சன்மார்க்கப் பிரசங்கத்திலும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, நோன்புப் பெருநாளை முன்னிட்டு செவ்வாய்கிழமை கல்குடா ஜம்மியதுல் தவ்வதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்த பெருநாள் தொழுகை செம்மண்னோடை சாட்டோ விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchq0.html
பொலிஸ் நிலையத்திற்கு போலியான தொலைபேசி அழைப்புக்கள்: கடுப்பில் பொலிஸார் (செய்தித் துளிகள்)
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 06:04.13 AM GMT ]
இவ்வாறு அழைப்புக்களை ஏற்படுத்தி, பொலிஸாரை ஏமாற்றுவதற்கு சிலர் முயற்சிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.
இவ்வாறு ஒருவர் மிரிஹான பொலிஸ் நிலையத்துக்கு தொடர்பினை ஏற்படுத்தி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றை விடுவிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட வேளை அவர் பிடிபட்டு கைது செய்யப்படுள்ளார் என அஜித் ரோஹன கூறினார்
இனிவரும் காலங்களில் இந்த விடயம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கஞ்சா வைத்திருந்த பெண் வாழைச்சேனை பொலிசாரால் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை கிராம அலுவலகர் பிரிவில் கஞ்சா வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவிததுள்ளனர்.
பிறைந்துறைச்சேனை கிராம அலுவலகர் பிரிவில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து இங்கு பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது 450 கிராம் கஞ்சாவுடன் இப் பெண்ணை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை செவ்வாய்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ஜே.வி.பி.யின் தலைவரது சாரதி கைது
ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரத்தினபுரி கிரியல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வாகன விபத்தில் காயமடைந்து இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கவனயீனமாக வாகனத்தைச் செலுத்தியதாக குற்றம் சுமத்தி சாரதியை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதியை பொலிஸார் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchq2.html
Geen opmerkingen:
Een reactie posten