தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 juli 2014

157 இலங்கை அகதிகளும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்: இந்தியக் கரையோர பாதுகாப்பு தீவிரம்!

யாழில் வெள்ளைவான் கொள்ளைக் கும்பல் கைது- பெண் இராணுவ அதிகாரி கைது
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 01:42.08 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் வெள்ளை வான்களில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அரச புலனாய்வுப் பிரிவினர் என்ற போர்வையில் குறித்த கொள்ளைக் கும்பல், வீடுகளில் புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், மானிப்பாய், அச்சுவேலி, ஊர்காவற்துறை, கோப்பாய், சுன்னாகம் போன்ற பிரதேசங்களில் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புப் பிரிவின் இரகசிய பொலிஸார் எனத் தெரிவித்து வீடுகளுக்குள் புகுந்து, குறித்த கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்தும் போர்வையில் குறித்த கொள்ளையர்கள் பொதுமக்களிடம் கொள்ளையிட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து தங்கம், டிஜிட்டல் கமரா, கைத்தொலைபேசிகள், பணம் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்களை எதிர்வரும் 10ம் திகதி வரையில் தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தை அண்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் இராணுவ அதிகாரி கைது 
சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண் இராணுவ அதிகாரிகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பானாகொட மெதமண்டிய வீதியில் இயங்கி வந்த சட்டவிரோத சூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பாணந்துறை வலானை மோசடி தடுப்பு பிரிவின் பொலிஸார் நேற்று நள்ளிரவு இவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பனாகொட இராணுவ முகாமில் பணியாற்றும் கேப்ரல் தரத்தில் உள்ள பெண் இராணுவ அதிகாரியும், பெண் சிப்பாயும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூதாட்ட நிலையம் இரவு 10.30 மணிக்கு ஆரம்பித்து அதிகாலை வரை இயங்கும் என மோசடி தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சூதாட்ட நிலையத்தில் இருந்து ஒரு லட்சத்து 36 ரூபா ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLcivy.html
157 இலங்கை அகதிகளும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்: இந்தியக் கரையோர பாதுகாப்பு தீவிரம்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 01:53.42 AM GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்ற 157 இலங்கை தமிழர்களும், இந்தியாவில் இருந்து வந்தமையால் அவர்கள் இந்தியர்களாக கருதப்படுகின்றனர்.
இந்தியா முழுமையான ஜனநாயக நாடு என்ற அடிப்படையில், இந்த 157 பேரும் பொருளாதார அகதிகளாக கருதப்பட்டு இந்தியாவுக்கு, திருப்பியனுப்பப்படவுள்ளனர் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய வானொலி ஒன்றில் இன்று காலை நேர நிகழ்ச்சி ஒன்றுக்கு தகவல் வழங்கிய அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இதனைக் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் இரண்டு வார காலமாக படகில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 157 பேரும் இந்திய அதிகாரிகளின் பரீட்சிப்புக்காக மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள கேட்டின் தடுப்பு முகாமுக்கு மாற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நலன்களுக்கு மதிப்பு கொடுக்கும் நாடு என்ற அடிப்படையில் இந்தியாவின் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டே அவுஸ்திரேலியா இந்த முடிவை எடுத்துள்ளதாக மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அகதிகள் யாவரும் தமிழக முகாம்களில் இருந்து சென்றவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் படகில் தங்கியிருந்த அகதிகளின் நலன்களை மேம்படுத்தவே அவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களை இந்திய அதிகாரிகள் சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வர் என்றும் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அகதிகளின் இந்த படகு இந்த மாதம் 7 ஆம் திகதி அவுஸ்திரேலிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழர்களால் இந்தியக் கரையோர பாதுகாப்பு தீவிரம்
இலங்கையர்கள் இந்தியா ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்லும் நிலையில் தமது கரையோர பாதுகாப்பு குறித்து இந்திய புலனாய்வுப்பிரிவினர் கவனம் செலுத்தியுள்ளனர்.
இந்திய செய்திச்சேவை ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 157 இலங்கையர்களின் தகவல்படி பாண்டிச்சேரியின் இரண்டு படகு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை இந்திய அதிகாரிகள் நடத்திய விசாரணைகளின்படி ஏற்கனவே இந்திய முகாம்களில் தங்கியிருந்தவர்களுடன் அண்மையில் சுற்றுலா வீசா மூலம் இந்தியாவுக்கு வந்த சுமார் 40 பேரும் இந்த படகில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் சில சிங்களவர்களும் இருப்பதாக விசாரணைகளில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்தே இந்திய புலனாய்வுப் பிரிவினர் தமது தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தானிய புலனாய்வுப் பிரிவினர் தென்னிந்தியாவில் தாக்குதல் இலக்குகளை நோக்கி வருகின்றநிலையில், பாண்டிச்சேரியில் இருந்து அதிகாரிகளுக்கு தெரியாமல் அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு சென்றமை பாதுகாப்பில் உள்ள குறைப்பாட்டையே சுட்டிநிற்பதாக இந்திய செய்திசேவை கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLcivz.html

Geen opmerkingen:

Een reactie posten