தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 31 juli 2014

சுப்பிரமணிய சாமியை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும்! - வேல்முருகன்

கொமன்வெல்த் போட்டியில் மகிந்த ராஜபக்ச பங்கெடுக்காமைக்கு காரணம்! நாடுகடந்த தமிழீழ அரசின் அழுத்தமே!என்ன ஒரு சுயபுராணம்!
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 09:56.20 AM GMT ]
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் ஸ்கொட்லாந்தின், கிளாஸ்கோவில் நடைபெற்றுவரும் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்காமைக்கான காரணங்களில் ஒன்றாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அழுத்தமும் அமைந்துள்ளதென இன்சைட்கேம்ஸ் எனும் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார செயலருக்கும், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான கூட்டமைப்புக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனுப்பி வைத்திருந்த இருகடிதங்களின் சாரத்தினை கோடிட்டுக் காட்டியே இச்செய்தியினை அவ்வூடகம் வெளியிட்டுள்ளது.

மக்களாட்சி, சுதந்திரம், சமாதானம், சட்டமுறையிலான ஆட்சி, அனைவர்க்கும் சமவாய்ப்பு எனும் பொதுநலவாயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு மாறாக இலங்கை அரசு இயங்கி வருவதோடு அனைத்துலகத்தின் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களுக்கும் அழுத்தங்களுக்கும் இலங்கை அரசு  முகம்கொடுத்து வருகின்றது.

இலங்கையில் முப்படைகளுக்கும் தலைமை அதிகாரத்தினைக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான படையினர் இலங்கைத்தீவின் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட வகையிலான இனஅழிப்பினையும் நிலஅபகரிப்பும் மேற்கொண்டு வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் சுட்டிக்காட்டபட்டதாக இன்சைட்கேம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

குடிசார் உரிமைகள் அரசியல் உரிமைகள் பற்றிய அனைத்துலக ஒப்பந்தம் மூலமும் (ICCPR) ,சித்திரவதை மற்றும் கொடுமைகள், மனிதாபிமான மற்றதும் தரக்குறைவானதுமான நடைமுறைகள் என்பவற்றிற்கு எதிரான உடன்படிக்கை (ICCPR) மூலமும்   பொதுநலவாய அமைப்பானது முறையே 1976, 1987 ஆகிய இரு ஆண்டுகளிலும் மனிதஉரிமை விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு உறுதியளித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு என்பவற்றினால் அந்த நாடானது பொதுநலவாய அமைப்பின் உள்ளுணர்வையே மீறுகின்றது என்ற
நிலைப்பாட்டினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கொண்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgq0.html
வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்களின் ஆதரவை இழக்கும் அரசாங்கம்!
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 10:46.31 AM GMT ]
இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வெளிநாடுகளில் தொழில் புரியும் மற்றும் அங்கு வாழ்ந்து சிங்களவர்களை கொண்ட குழுக்கள் தற்போது அமைதியாக இருந்து வருவதாக தெரியவருகிறது.
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இதனை உறுதிப்படுத்தும் சம்பவம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.
அங்கு இலங்கைக்கு எதிராக வீதி நாடகங்களை நடித்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.
இவர்கள் ஸ்கொட்லாந்து மக்கள் மத்தியில் மாத்திரமல்ல விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ள பொதுநலவாய நாடுகளை சேர்ந்த மக்கள் உட்பட உலக மக்களின் கவனத்தை ஈர்க்க பெரும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இங்கிலாந்தில் உள்ள புலம்பெயர்ந்தோர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதற்கு முன்னர் இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் போது, அதற்கு எதிராக இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து தனியான ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். எனினும் இம்முறை அப்படியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகளில் அந்த அமைப்பு நடப்பு தலைவர் கலந்து கொள்வது சம்பிரதாயமானது. எனினும் கிளாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அந்த அமைப்பின் தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வரலாற்று சிறப்புமிக்க ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை.
புலம்பெயர் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்த அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் தயாராக இருந்த போதிலும் ராஜபக்ச அரசாங்கத்தின் குறைபாடுகள் காரணமாக , அவர்களின் முயற்சி வலுவற்றதாகி போனதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த இலங்கையர்களின், இலங்கையில் வாழும் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் எதனையும் மேற்கொள்ளவில்லை.
அரசாங்கத்தின் இந்த செயலானது வெளிநாடுகளில் இருந்து கொண்டு நாட்டுக்கு அந்நிய செலாவணிகளை ஈட்டித் தரும் இலங்கையர்களை அவமதிப்புக்கு உட்படுத்தும் நடவடிக்கையாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் ஜனநாயகம், ஊடக சுதந்திரம் என்பன மறுக்கப்படுகின்றமை, அரச பாதுகாப்புடன் இனவாத குழுக்கள் இனவாத வன்முறைகளை ஏற்படுத்தி வருவது ஆகிய காரணங்களினால் வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது எனவும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgq2.html
சுப்பிரமணிய சாமியை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும்! - வேல்முருகன்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 10:59.56 AM GMT ]
இலங்கையுடன் எந்த ஒரு உறவுமே வைத்துக் கொள்ள கூடாது என்று தமிழகமே குரல் கொடுக்கும் நிலையில், இறுமாப்புடன் செயல்படும் சுப்பிரமணிய சாமிக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈழத் தமிழர் பிரச்சனையில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எத்தகைய துரோகத்தை தமிழினத்துக்கு இழைத்ததோ அதற்கு சற்றும் குறைவில்லை என்கிற வகையில்தான் தற்போதைய பாஜக அரசும் செயல்பட்டு வருகிறது.
அண்மையில் பாஜகவின் சுப்பிரமணிய சாமி தலைமையிலான குழு இலங்கைக்கு சென்று ராஜபக்சவை சந்தித்துப் பேசியது.
இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் ஆகஸ்ட் 18ந் தேதி முதல் 22ந் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச இராணுவ கருத்தரங்கிலும் சுப்பிரமணிய சாமி கலந்து கொள்வதாக கூறி இருக்கிறார்.
சுப்பிரமணிய சாமியின் இந்த திமிர்த்தனம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இலங்கையுடன் எந்த ஒரு உறவுமே வைத்துக்கொள்ள கூடாது என்று தமிழகமே குரல் கொடுக்கும் நிலையில் இறுமாப்புடன் செயல்படும் சுப்பிரமணிய சாமிக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கை நடத்தும் சர்வதேச இராணுவ கருத்தரங்கில் இந்தியா சார்பில் எவருமே கலந்துகொள்ளக் கூடாது என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் வேல்முருகன் கூறியுள்ளார். 
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgq3.html

Geen opmerkingen:

Een reactie posten