தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 31 juli 2014

அவுஸ்திரேலியாவின் தகவல்களுக்காக காத்திருக்கும் புதுச்சேரி பொலிஸார்!ஊடகத்திற்கு எதிரான யுத்தத்தை நிறுத்து!- யாழில் அணிதிரண்ட ஊடகவியலாளர்கள்!



ஊடகத்திற்கு எதிரான யுத்தத்தை நிறுத்து!- யாழில் அணிதிரண்ட ஊடகவியலாளர்கள்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 08:13.01 AM GMT ]
ஊடக அடக்குமுறைக்கு எதிராக யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து கடந்த 25ம் திகதி கொழும்பு சென்று கொண்டிருந்த யாழ்.ஊடகவியலாளர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்த படையினர் முயற்சி செய்தமை, வடக்கில் தொடரும் ஊடக அடக்குமுறைகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறீதரன், வட மாகாண சபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உறுப்பினர்களான அனந்தி சசிதரன்,கஜதீபன் சுகிர்தன், தமிழ் தேசிய மக்கள் முன்ணணியைச் சேர்ந்த செ.கஜேந்திரன் மற்றும் யாழ். மாநகரசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஆதரவை வெளிப்படுத்தினர்.

(இரண்டாம் இணைப்பு)
வடமாகாணத்தில் போர் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அடக்குமுறைகளை கண்டித்து யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று இன்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் வடக்கில் குறிப்பாக யாழ். குடாநாட்டில் ஊடகவியலாளர்கள் மீதும் ஊடகங்கள் மீதும் சிறீலங்கா அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக வன்முறைச் சம்பவங்களை கண்டித்து யாழ். ஊடக அமையம் தெற்கில் உள்ள ஊடக அமைப்புக்களுடன் இணைந்து இன்றைய கண்டனப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது.  குறித்த போராட்டத்தில் வடக்கின் 5 மாவட்டங்களிலிருந்தும் ஊடகவியலாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டிருந்ததுடன்,  ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதுடன், பதாகைகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து யாழ்.பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வைத்தியசாலை வரையில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேற்படி போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும்,  தடுக்கும் வகையிலும் பொலிஸார் எவ்விதமான நடவடிக்கையினையும் எடுக்காததுடன், போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு எவரும் வரவுமில்லை.
இந்நிலையில் போராட்டம் எழுச்சிபூர்வமாகவும், பெருமெடுப்பிலும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
மேலும் இன்றைய போராட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவர்களும் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கு தங்கள் முழுமையான ஆதரவினை தெரிவித்திருக்கின்றனர்.  இதேவேளை யாழ்.ஊடக அமையம் இன்றைய கண்டனப் போராட்டம் தொடர்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
வடக்கில் போர் நிறைவடைந்ததன் பின்னரும் கூட ஊடகத்துறை அச்சுறுத்தல் மிகுந்ததாக மாறியிருக்கும் நிலையில், பல ஊடகவியலாளர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டுதப்பிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
மறுபக்கம் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல் விடப்படுகின்றது.  இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் ஊடகப் பணி சந்திக்கப் போகும் அபாயங்கள் தொடர்பில் ஊடக சமூகம் அச்சத்தில் உறைந்துள்ளது. 
2000ம் ஆண்டின் இறுதியில் எமது சக ஊடகவியலாளர்கள் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையுடன் தொடங்கிய ஊடகவியலாளர்கள் மீதான கொலைக் கலாசாரம் இன்றுவரை தொடர்கிறது.
எங்கள் கண் முன்னால் எங்கள் சக தோழர்கள் பலர் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள்.  பலர் கடத்தப்பட்டார்கள்,  பலர் காணாமல்போனார்கள்,  இன்றுவரை அவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நீண்ட மௌனத்தையே பதிலாக கொடுத்திருக்கின்றது. மூன்று தசாப்த கால போரை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாக சிறீலங்கா அரசு கூறிக்கொண்டிருக்கும் நிலையில்,  அண்மைக் காலமாக அதிகரித்துள்ள ஊடக வன்முறைகள், சிறீலங்கா அரசாங்கத்தின் போர் ஊடகங்களுக்கு எதிராக திரும்பியிருக்கின்றதா?  என்ற சந்தேகத்தை உருவாக்கியிருக்கின்றது.
வலம்புரி பத்திரிகையாளர் உதயராசா சாளின், உதயன் பத்திரிகையாளர் திலீப் அமுதன் தினக்குரலை சேர்ந்த செல்வதீபன் என பல ஊடகவியலாளர்கள்,  இனந்தெரியாதநபர்களின் கொலை முயற்சிகளிலிருந்து தப்பியிருக்கின்றார்கள். தினக்குரல் பத்திரிகையின் செய்தியாளர்களான த.வினோயித்,பி.வின்ஸ்லோ ஆகிய இருவரும், விடுதலைப் புலிகளின் பயிற்சி பெற்றதாக பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரால் தேடப்பட்ட நிலையில், பி.வின்ஸ்லோ நாட்டை விட்டுதப்பிச் சென்றுள்ளார்.
இதேபோன்று யாழ்.உயர் பாதுகாப்புவலய பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற எஸ்.நிதர்சன்,வி.கஜீபன், எஸ்.கே.பிரசாத், எஸ்.கரன், எஸ்.தர்சன் ஆகிய ஊடகவியலாளர்களுக்கு படையினர் நேரடியாகவே உயிர் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
இத்தகைய அச்சுறுத்தல்கள் மத்தியிலும் எஸ்.கே.பிரசாத்தும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இவற்றின் தொடர்ச்சியாக கடந்த 25ம் திகதி கொழும்பில் நடைபெறவிருந்த ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த ஊடகவியலாளர்களான கே.ஹம்சனன், வி.கஜீபன்,  எஸ்.நிதர்சன்,  எஸ்.மயூதரன், பெ.நியூமன், பி.பாஸ்கரன், சொ.சொரூபன் ஆகிய ஊடகவியலாளர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு ஓமந்தை சோதனை சாவடியில் நின்றிருந்த இராணுவத்தினர் முயற்சித்திருந்தனர்.
இவ்வாறு வடமாகாணத்தில் ஊடகவியலாளர்கள் தினசரி தமது பணிகளை மிகுந்த அச்சுறுத்தல்களின் மத்தியில், உயிரை பணயம் வைத்தே ஆற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.
இன்னொருபுறம் ஊடகங்களை முடக்கமான நஸ்ட ஈடு கோரி வழக்கு போடுவதும் ஆசிரியபீட பிரதிநிதிகளை பலாலிக்கும்,  நான்காம் மாடிக்கும் அழைப்பதும் சாதாரணமாகிப் போயுள்ளது. மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் லெம்பேட் அத்தகைய விசாரணை வளையத்தினுள் வாழ்ந்தும் வருகின்றார்.
24 மணிநேரமும் துப்பாக்கி முனைகளின் மத்தியில் அச்சத்துடனேயே வடக்கு ஊடகவியலாளர்கள் பணியாற்றுகின்றனர். அச்சுறுத்தப்படுவதும் பின் தொடரப்படுவதும் சாதாரணமாகியுள்ளது.
இத்தகையசூழலில் ஊடகவியலாளர்கள் தமது தொழில் ரீதியான அறிவை பெறுவதற்கு கூட சிறீலங்கா அரசு தடுத்துவருகின்றது.  இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கடந்த 25ம் திகதி ஓமந்தை சோதனைசாவடியில் இடம்பெற்றசம்பவம் மற்றும், அதற்கு முன்னர் இரு தடவைகள் யாழ்.குடாநாட்டிலிருந்து கொழும்பு சென்ற ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன்,  இயங்கும் சிங்கள இனவாத அமைப்புக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
அவ்வகையான பயிற்சிப்பட்டறை ஒன்றிற்கு பயணித்த ஏழூ ஊடகவியலாளர்களை கஞ்சா குற்றச்சாட்டில் கைதுசெய்து சிறையிலடைக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சியிலிருந்து அவர்கள் மீண்டிருக்கின்றார்கள்.  அப்பட்டமாக இலங்கை இராணுவகட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழூள்ள ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து,  சிக்கவைக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சியை அச்சத்துடன் நாம் அவதானிக்கின்றோம்.
எதிர்வருங்காலங்களில் என்ன நடக்கப் போகின்றதென்பதை, இச்சம்பவம் இயம்பி நிற்கின்றது.  அவர்கள் பின் தொடரப்படுவதும் அச்சுறுத்தப்டுவதும் பாதுகாப்பின்மையை வெளிப்படுத்திநிற்கின்றது.  இத்தகைய சதி முயற்சிகளை வன்மையாக கண்டித்தும்,  தொடரும் ஊடகவியலாளர்கள் மீதான கொலை முயற்சிகள் மற்றும் தாக்குதல்களை கண்டித்தும் சுதந்திரமாக ஊடகப்பணிகளை ஆற்றுவதற்கான சூழலை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்கி கொடுத்திராத நிலையில் ஊடகசுதந்திரத்தை வலியுறுத்தியும் வடக்கு ஊடகவியலாளர்களாகிய நாம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய அனைத்து தரப்புக்களிற்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgp2.html
பொதுபல சேனா அமைப்பின் சந்தேக நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை: கொள்ளுப்பிட்டி பொலிஸார்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 08:44.54 AM GMT ]
அமைச்சர் றிசார்ட் பதியூதீனின் அமைச்சுக்குள், அத்துமீறி பிரவேசித்த பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் யார் என்பது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருவதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தனர். 
இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்றது.
இது தொடர்பில் ஊடக நிறுவனங்களிடம் இருந்து கிடைத்துள்ள காணொளிகளை ஆய்வு செய்து வருவதாகவும் பொலிஸார் கோட்டை நீதவான் திலின கமகேவிடம் கூறியுள்ளனர்.
மேற்படி சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், பொலிஸார் சந்தேக நபர்களை இதுவரை அடையாளம் காணவில்லை.
ஏப்ரல் 23 ஆம் திகதி அமைச்சர் றிசார்ட் பதியூதீனின் அமைச்சுக்குள் பிரவேசித்த பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் அமைச்சுக்குள், வட்டரக்க வஜிர தேரர் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறி தேடுதலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அமைச்சுக்குள் அனுமதியின்றி பிரவேசித்தமை தொடர்பில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சின் மேலதிக செயலாளர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgp3.html
ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினர் கூரையின் மீதேறி போராட்டம்- கொலைக் குற்றம்: 7 பேருக்கு மரண தண்டனை
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 08:59.21 AM GMT ]
ஆளும் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கூரையின் மீது ஏறி போராட்டமொன்றை நடத்தியுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினர் ஹெலப்பிரிய நந்தராஜ் என்பவரே இன்று போராட்டம் நடத்தியுள்ளார்.
ஆளும் கட்சியின் உறுப்பினர் என சொல்லிக்கொள்ள வெட்கப்படுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், சில உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்றது.
நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் பிரதேச சபை கட்டடக் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து வெளியேறி, பிரதேச சபையின் முன்னாள் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பிடத்தின் கூரையில் ஏறி மீளவும் எதிர்பை வெளியிட்டுள்ளார்.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சிரேஸ்ட அமைச்சர்கள் முதல் பிரதேச சபை உறுப்பினர்கள் வரையில் பகிரங்கமாக விமர்சிக்க தொடங்கியுள்ளமை கவனிக்கப்பட வேண்டியது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய 7 பேருக்கு மரண தண்டனை
கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஏழு பேருக்கு பாணந்துறை நீதிமன்றில் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் ஒருவரை படுகொலை செய்த ஏழு பேருக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.
கொலையைச் செய்ததாக குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு குற்றவாளிகளுக்கும் பாணந்துறை உயர் நீதிமன்ற நீதான் மொஹமட் சுர்திகா ரஹிம் மரண தண்டனை விதித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgp4.html
அவுஸ்திரேலியாவின் தகவல்களுக்காக காத்திருக்கும் புதுச்சேரி பொலிஸார்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 09:14.58 AM GMT ]
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கை அகதிகள் தொடர்பில், அவுஸ்திரேலியாவிடம் இருந்து சில தகவல்களுக்காக காத்திருப்பதாக புதுச்சேரி இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரவீர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அகதிகள் புதுச்சேரியில் இருந்து சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அது பற்றிய சரியான தகவல்கள் இந்தியா பொலிஸார் உட்பட எவரிடமும் இல்லை.
இந்த நடவடிக்கை எவருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாக நடந்துள்ளது.
எவ்வாறாயினும் அரசாங்க தரப்பின் ஊடாக பொலிஸார் தற்போது சில தகவல்களை பெற்றுள்ளனர்.
அகதிகள் சென்ற படகு புதுச்சேரிக்கு சொந்தமானது இது குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனினும் படகில் சென்றதாக கூறப்படும் அகதிகளில் பெரும்பாலானோர் புதுச்சேரி மாநிலத்திற்கு வெளியில் உள்ள முகாம்களில் வசித்து வந்தவர்கள்.
சட்டவிரோத ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் இரண்டு படகு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் புதுச்சேரி மாநில இன்ஸ்பெக்டர் ஜெனரல் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புதுச்சேரியில் இருந்து சென்றதாக கூறப்படும் 157 தமிழ் அகதிகள் கேகோஸ் தீவுகளுக்கு அருகில் வைத்து அவுஸ்திரேலிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், புகலிட கோரிக்கையாளர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgp5.html

Geen opmerkingen:

Een reactie posten