தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 juli 2014

50 இந்திய மீனவர்கள் கைது! கைதான தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

இலங்கையின் ஒரு பகுதி சீனாவிற்கு தாரைவார்ப்பு?
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 02:47.51 PM GMT ]
இலங்கையின் ஒரு பகுதி சீனாவிற்கு தாரை வார்க்கப்பட்டள்ளதாக சர்வதேச இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திருகோணமலை பிரதேசத்தின் சுமார் 1200 ஏக்கர் காணி, சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட கால குத்தகை அடிப்படையில் இவ்வாறு திருகோணமலையின் ஒரு பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மேம்பாட்டு நோக்கிற்காக இந்த காணியை சீனா பயன்படுத்திக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சீனாவிற்கு காணிகள் வழங்குவதனால் சுமார் 450 தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் பாதிக்கப்படக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
திருகோணமலை இயற்கைத் துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள பகுதியில் அதிகளவான முஸ்லிம் பள்ளிவாசல்களும், இந்து ஆலயங்களும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தில் ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கில் சீனா இவ்வாறு இலங்கையின் திருகோணமலைப் பகுதியில் பாதுகாப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கீறீன் லெப்ட் வீக்லி என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.
காணிகளை குத்தகைக்கு விடுவது தொடர்பில் உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இணையத்தளத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchr5.html
50 இந்திய மீனவர்கள் கைது! கைதான தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 02:56.35 PM GMT ]
50 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பிரதேசத்தில் வைத்து இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இ;லங்கைக் கடற்படைப் பேச்சாளர் கோசல வர்னகுலசூரிய தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடித்த 50 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் ஏழு படகுகளும் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களை பருத்தித்துறை பதில் நீதவான் எதிரில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோசல வர்னகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
தங்கள் தலைமையிலான மத்திய அரசு எடுத்த துரித முயற்சியால் சீரான இடைவெளியில் 225 தமிழ மீனவர்கள் படிப்படியாக இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டனர்.
இருப்பினும், அப்போது பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 55 படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
மேலும், கடந்த 22ம் தேதியும், இலங்கை சிறையில் உள்ள 43 மீனவர்களையும், அவர்களது 9 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
இருப்பினும் அவர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 50 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறை பிடித்ததுடன், அவர்களது 5 இயந்திரப் படகு மற்றும் 2 நாட்டுப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுபோன்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது.
எனவே, தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இலங்கை சிறையில் உள்ள 93 மீனவர்களையும், 62 படகுகளையும் விடுவிக்க வேண்டும்  எனக் கூறியுள்ளார். 
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchr6.html

Geen opmerkingen:

Een reactie posten