தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 juli 2014

தமது அறிக்கை முன்கூட்டியே தயாரிக்கப்பட்டதல்ல!- நவநீதம்பிள்ளை!

பிரபாகரனால் முடியாததை நவனீதம்பிள்ளை முயற்சி செய்கிறார்: அரசாங்கம் குற்றச்சாட்டு
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 02:00.45 AM GMT ]
ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் சர்வதேச விசாரணை ஒரு காட்சியாகும்(Show) என்று அமைச்சர் டிலான் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
ஏனெனில் இந்த விசாரணையின் முடிவுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேலுப்பிள்ளை பிரபாகரனால் செய்ய முடியாததை நவநீதம்பிள்ளை வேறு வழிகளால் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே அரசாங்கம் இந்த முயற்சியை முழுமையாக நிராகரித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இலங்கையின் அரசாங்க ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
இலங்கையில் அனைத்து பொறிமுறைகளும் இருக்கும் போது ஏன்? வெளிநாட்டு பொறிமுறையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchp4.html
இலங்கை அரசாங்கத்துக்கும் பொதுபலசேனாவுக்கும் நெருங்கிய தொடர்பு: அமெரிக்கா
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 02:19.29 AM GMT ]
இலங்கை அரசாங்கத்துக்கும் பொதுபலசேனாவுக்கும் இடையில் வலுவான தொடர்புகள் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையின் ஊடகம் ஒன்றை கோடிட்டு அமெரிக்க ராஜாங்க திணைக்களம் நேற்று வெளியிட்ட 2013 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மதசுதந்திரம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக பொதுபலசேனாவுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், பொதுபலசேனா உட்பட்ட பௌத்த அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.
மிருக படுகொலை, ஹலால் சான்றிதழ் உட்பட்ட விடயங்களை முன்வைத்து பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கம் மதசுதந்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள போதும், சில இடங்களில் இந்த சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாட்சியங்களின்படி பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் காரணமாக சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் பயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கையில் உள்ள அமெரிக்கா தூதரகம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுத்து வருவதுடன், குற்றவாளிகளை தண்டிக்குமாறும் வலியுறுத்தி வருகிறது என்றும் அமெரிக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchp5.html
ஆளும் கட்சிக்குள் தொடர்ந்தும் பிரச்சினை!
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 02:45.17 AM GMT ]
ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் கடைமட்ட உறுப்பினர்கள் மத்தியில் தொடர்ந்தும் அதிகாரப் போட்டிகளும் பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதி உயர்கல்வி அமைச்சருமான நந்திமித்ர ஏக்கநாயக்கவின் செயலாளரை நேற்று மத்திய மாகாண சுகாதார அமைச்சர் கூட்டம் ஒன்றுக்கு அனுமதிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்றின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனுமதியின்றி இந்தக் கூட்டத்துக்கு வந்ததாக கூறியே அமைச்சரின் செயலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மத்திய மாகாண சுகாதார அமைச்சர் யேலகமவே தாமே அரசியலுக்கு அழைத்து வந்ததாக குறிப்பிட்டுள்ள பிரதி உயர்கல்வி அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க, அவர் பழையதை மறந்து செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchp6.html
தமது அறிக்கை முன்கூட்டியே தயாரிக்கப்பட்டதல்ல!- நவநீதம்பிள்ளை
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 02:56.28 AM GMT ]
முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான தமது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நிராகரித்துள்ளார்.
அல் ஜெசீரா தொலைக்காட்சியில் நேற்று இடம்பெற்ற டோக் டு அல் ஜெசீரா நிகழ்ச்சியின் போது நவநீதம்பிள்ளை தம் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
ஐக்கிய நாடுகள் சபையில் நவநீதம்பிள்ளையின் பயணம் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது.
தாம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது சந்தித்த சாட்சிகளின் தகவல்கள் அடிப்படையிலேயே தமது அறிக்கை தயாரிக்கப்பட்டதாக நவநீதம்பிள்ளை இதன்போது குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchqy.html

Geen opmerkingen:

Een reactie posten