தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 juli 2014

இலங்கை இராணுவக் கருத்தரங்கில் இந்தியா பங்கேற்கக் கூடாது: வைகோ!!

மாற்ற ஆடைகள் இல்லாமல் தவிக்கும் 157 அகதிகள்: மொரிசன் இதயசுத்தியுடன் செயற்படுவாரா?
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 06:20.22 AM GMT ]
ஓசியானிக் புரொடெக்டர் என்னும் சுங்க இலாகா கப்பலில் 1 மாத காலமாக தடுத்து வைக்கப்படிருந்த இலங்கை தமிழ் அகதிகள் மாற்ற ஆடைகள் இல்லாமல் கேர்ட்டின்
தடுப்பு முகாமில் வைக்கப்படுள்ளதாக அகதிகள் செயற்பட்டளரான இயன் ரிண்டோல் தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்
ஆனி மாதக் கடைசியில் கடலில் அவர்கள் வந்த படகில் அணிந்திருந்த ஆடைகளையே இன்னும் அவர்களில் பெரும்பான்மையினர் அணிந்திருப்பதாக தெரிவித்துள்ளார் .
இப்போது அங்கு நிலவும் குளிரான காலநிலையால் மேலும் நிலைமை மோசமடைந்துள்ளது .
கேர்ட்டின் முகாமில் முன்பு இருந்த அகதிகளிடமிருந்து புதியவர்களுக்கு கொடுக்கப்பட்ட உடைகள் அறவே போதாமல் உள்ளது
முகாமில் இருந்து எமக்கு வந்த செய்திகளின் அடிப்படையில் குழந்தைகளின் நிலைமை  மிகவும் மோசமாக உள்ளமை கவலை அளிக்கின்றது.
பிள்ளைகளில் 3 வயதுக்கு உட்பட்டவர்கள் அனேகமாக உள்ளனர் அவர்களுக்கான போதியளவு வசதிகள் ஒன்றும் கிடையாது.
இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்ரேலிய பெருநிலப் பரப்புக்கு கொண்டு வந்ததென்பது அரசின் ஒரு அவசர குடுக்கை தனத்தையே காட்டுகிறது ஏனெனில் அங்கு
உள்ள செர்க்கோ நிறுவனம் இந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க ஆயத்தமாக இருக்கவில்லை.
கேர்ட்டினில் உள்ள சேர்க்கோ முகாமையாளர் புதிய அகதிகளின் தேவைகளை பரிசீலிப்போம் என கூறியிருக்கின்றார்.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தேவையான உடுப்புக்கள் இல்லாமல் ஒரு அரசாங்கம் இருக்க முடியாது.
அரசாங்கம் கேர்ட்டினில் உள்ள அகதிகளுக்கு தேவையான உடுப்புகளை உடனடியாக வழங்க வேண்டும் அவர்கள் வுறும் எனும் நகரத்துக்கு ஒரு வாகனத்தை எடுத்து சென்று 3 மணி நேரத்தில் தேவையான ஆடைகளை வாங்கி வர முடியும் என்று இயன் தெரிவித்தார்
மேலும் அங்கு பொழுது போக்கு வசதிகளும் இல்லை ஒரு தொலைக்காட்சி கூடவும் இல்லை.  அமைச்சர் மொரிசன் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும்.
இந்தியாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் என்பது அவுஸ்ரேலியா அரசு சர்வதேச கடற் பரப்பில் நியூசிலாந்து நோக்கி சென்றுகொண்டிருந்த படகை சட்ட விரோதமாக கைப்பற்றியதை மூடி மறைக்க குடிவரவு அமைச்சரால் போடப்பட்ட ஒரு மூடு திரை அன்றி வேறல்ல.
அவுஸ்ரேலியா அரசின் நடவடிக்கைகள் சட்ட பூர்வமானவையா என மேல் நீதிமன்றம் அனுமானித்து எடுக்கும் நடவடிக்கைகளை முந்திக் கொள்வதற்காக பிரதமர் டோனி அபேட்டும் குடிவரவு அமைச்சர் மொரிசனும் அவசரப்பட்டு விட்டார்கள் என இயன் கூறினார்.
இந்த அகதிகள் அவுஸ்ரேலியாவில் வைத்து அவுஸ்ரேலிய அரசினால் மட்டுமே கையாளப்படுவார்கள்.  இந்தியாவில் இருந்து ஒரு இந்திய அகதி கூட இந்த படகில் வர
வில்லை.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உடனடியாக தொலைபேசி வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் அவர்கள் அவர்களின் உறவினர்களுடன் உடனே தொடர்பு கொள்ளும்
உரிமை அவர்களுக்கு உண்டு.
அவர்களுக்கு உடனடியாக சட்ட ஆலோசனைகளும் சட்ட உதவிகளும் வழங்கப்பட வேண்டும்,  ஏனென்றால் அவர்கள் தங்களது பாதுகாப்பு விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஸ்கொட் மொரிசன் அவர்கள் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து இலங்கை அகதிகளை மட்டும் குறி வைத்து செயற்படுவது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchq3.html

நாகர்கோவில் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு திக்கம் மத்தி சனசமுக நிலையத்தினர் உதவி
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 06:30.39 AM GMT ]
திக்கம் சனசமுக நிலையத்தினர் கல்வியை மேம்படுத்தும் பொருட்டு பின்தங்கிய பிரதேச மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவிகளை தொடர்ந்து வழங்கிவருகின்றனர்.
திக்கம் மத்தி சனசமுகநிலையத்தின் ஒழுங்குபடுத்தலில் இந்த உதவிகள் மாணவர்களுக்கு கிடைத்துவருகின்றது.
இதன் இன்னொரு கட்டமாக அண்மையில் நாகர்கோவில் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த உதவிகளை பா.உறுப்பினர் சி.சிறீதரன் நிகழ்வில் கலந்துகொண்டு வழங்கிவைத்தார்.
இதில் திக்கம் மத்தி சனசமுநிலையம் சார்பில் தினேஸ் பச்சிலைப்பள்ளி பிரதேசபை உறுப்பினர் சுரேன் பாலர்பள்ளியின் தலைவர் உட்பட பள்ளிச்சமுகத்தினர் கலந்துகொண்டனர்.
கிடைக்கப்பெற்ற உதவிகள் தமது பாலர்களின் ஆரம்பக்கல்விக்கு நிறைந்த ஊக்கத்தை தருவதாகவும் இத்தகைய காலமறிந்து செய்யப்பட்ட உதவிக்கு தாம் மிகுந்த நன்றிகளை தெரிவிப்பதாக நாகர்கோவில் பாலர் பள்ளிச்சமுகத்தினர் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchq4.html
இலங்கை இராணுவக் கருத்தரங்கில் இந்தியா பங்கேற்கக் கூடாது: வைகோ
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 06:48.37 AM GMT ]
தமிழினப் படுகொலை நடத்திய சிங்கள அரசு, கொழும்பில் ஓகஸ்ட் 18 முதல் 20 ஆம் திகதி வரை ஏற்பாடு செய்துள்ள இராணுவக் கருத்தரங்கில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் இடம்பெறவுள்ள இக்கருத்தங்கில் இந்திய இராணுவத் தளபதிகளும், அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள் என்றும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொள்வர் என்றும் செய்தி வெளியாகி இருக்கின்றது.
இந்தத் தகவல் தமிழ் மக்களுக்குக் கடும் அதிர்ச்சியையும் மனவேதனையையும் தருகிறது. அண்மையில் சுப்பிரமணியன் சுவாமி, சேஷாத்திரி சாரி உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி ராஜபக்சவைச் சந்தித்து, இலங்கை அரசுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும், ஐ.நா. மனித உரிமைக்குழுவில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் இந்திய அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்ததாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.
ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், குழந்தைகள் வயது முதிர்ந்தோர், பெண்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்சவுக்கு ஆதரவாகும் இந்திய அரசு செயல்படும் என்று இந்திய அரசின் சார்பில் அவர்கள் தெரிவித்த கருத்து, தாய்த் தமிழ்நாட்டு மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில், இலங்கை அரசு நடத்தும் இராணுவக் கருத்தரங்கில் இந்திய இராணுவ உயர் அதிகாரிகளும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒரு குழுவும் பங்கேற்பது தமிழர்கள் மீது நெருப்பை அள்ளிக் கொட்டுவதாகும்.
சிங்கப்பூரில் நடந்த ஒரு கருத்தரங்கில் பாரதிய ஜனதா கட்சி வெளிவிவகாரக் கொள்கையின் தேசிய அமைப்பாளர் சேஷாத்திரி சாரி பேசும்பொழுது, “வெளிநாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு, மேற்கு வங்காள மாநிலங்களைக் கருதி தீர்மானிக்க முடியாது” என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.
அப்படியானால் இலட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்டதை சர்வ சாதாரணமாக நினைக்கிறாரா? இதுபோன்ற மிகவும் ஆபத்தான நச்சுக் கருத்தை சேஷாத்திரி சாரி தெரிவித்து இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
உலகம் தடை செய்து இருக்கின்ற இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியும், குண்டுகளை வீசியும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்து மனிதப் பேரழிவை நடத்திய ராஜபக்ச அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை இங்கிலாந்து சனல்-4 தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.
ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் விசாரணைக்குழுவும் இதனை உறுதி செய்து இருக்கின்றது.
பன்னாட்டு நீதிமன்றத்தில் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்திய அரசு மேற்கொள்வது, இலங்கை அரசோடு சேர்ந்துகொண்டு நீதியை குழிதோண்டிப் புதைக்கப் போகிறதோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் குழுவில், இலங்கை அரசு நடத்திய தமிழ் இனப்படுகொலைகளை விசாரிப்பதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடைபெற வேண்டும் என்று உலகின் பல நாடுகள் வற்புறுத்தி வரும் நிலையில், இந்திய இராணுவத் தளபதிகளும், பா.ஜ.க. குழுவும் இலங்கை இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்பது என்பது சகிக்க முடியாத, மன்னிக்க முடியாத மாபாதகச் செயலாகும்.
ஏழரைக் கோடித் தமிழர்களின் உணர்வுகளை மதித்துச் செயல்படும் வகையில், இலங்கை இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்கும் முடிவை இந்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchq5.html

Geen opmerkingen:

Een reactie posten