தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 juli 2014

சர்வதேச விசாரணைக் குழுவில் விக்னேஸ்வரன் சாட்சியமளிப்பது தேச துரோகம்: வசந்த பண்டார!!

இந்தியவில் இலங்கை அகதிகளுக்கு பணம் வழங்கும் திட்டத்தில் புதிய கொள்கை
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 07:16.26 AM GMT ]
இந்திய அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த பணக் கொடுப்பனவு அட்டையில் கை விரல் அடையாளம் பொறிக்கப்பட்டு அட்டைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கபடுகிறது.
இந்த நடவடிக்கை எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை அதிகாரிகளின் கோரிக்கைக்கு இணங்க இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதனால் ஆள்மாறாட்ட மோசடிகளைத் தவிர்க்க முடியும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
இந்தியன் வங்கி, முகாம்களுக்குச் சென்று ஒவ்வொருவரின் விரல் அடையாளங்களைப் பெற்று புதிய கொடுப்பனவு அட்டைகளை வழங்கவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனித்தனியாகவும் அதற்கு கீழ்பட்டவர்களுக்கு பெற்றோருடனும் இணைத்து இந்த அட்டைகள் வழங்கப்படவுள்ளன.
செப்ரெம்பரில் ஆரம்பிக்கப்படும் இந்த நடவடிக்கை ஒக்ரோபர் மாதத்தில் அனைத்து முகாம்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதத்தின் முதலாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் அழைக்கப்பட்டு பதிவு மற்றும் பணக்கொடுப்பனவு அட்டைகளை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
அவ்வாறு உறுதிப்படுத்தத் தவறுபவர்களது அட்டைகள் நிறுத்தப்படும் என்றும் வருவாய்த் துறையினர் அறிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchq6.html
சர்வதேச விசாரணைக் குழுவில் விக்னேஸ்வரன் சாட்சியமளிப்பது தேச துரோகம்: வசந்த பண்டார
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 08:07.15 AM GMT ]
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை நியமித்த சர்வதேச விசாரணைக் குழுவில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் சாட்சியமளிப்பது தேசத்துரோகமாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொது செயலாளர் டொக்டர் வசந்த பண்டார தெரிவிக்கையில்,
சர்வதேச விசாரணைக் குழுவினர் இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்வதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. அக்குழுவினர் இலங்கை வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்றத்திலும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து வடமாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள விக்னேஸ்ரன் எவ்வாறு சர்வதேச விசாரணை குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க முடியும்.
அவர் அவ்வாறு சாட்சியமளிப்பது என்பது தேசத்துரோக செயலாகும். சர்வதேச விசாரணை குழுவில் முதலமைச்சர் சாட்சியமளிப்பதற்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி நியமித்துள்ள ஆணைக்குழுவினரிடம் சாட்சியங்களை வழங்க தயான் ஜயதிலக்க, விக்டர் ஐவன், விக்னேஸ்வரன் மட்டுமல்ல, எரிக் சொல்ஹெய்மும் முன் நிற்கிறார். இதற்கு அரசாங்கமே காரணம்.
ஏனெனில், ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க வெளிநாட்டு நிபுணர்களை நியமித்தமை அரசாங்கம் செய்த மாபெரும் தவறு என குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchq7.html

Geen opmerkingen:

Een reactie posten