உடம்பில் அசிற் ஊற்றிவிட்டு துாக்கில் தொங்கிய இளைஞன் - காரைநகரில் சம்பவம் !
[ Jul 30, 2014 03:52:25 PM | வாசித்தோர் : 1070 ]
இவரது மரணம் தொடா்பாக ஊா்காவற்துறைப் பொலிசார் விசாரணைகள் செய்துவருகின்றனா். சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் இந்த இளைஞர் இவ்வாறு செய்ய என்ன காரணம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருவர் தற்கொலைசெய்ய முடிவெடுத்துவிட்டால் பின்னர் தன்னை தானே ஏன் சித்திரவதைக்கு உள்ளாக்கவேண்டும் ? அத்தோடு குறித்த நபருக்கு அசிட் எங்கே கிடைத்தது என்பது போன்ற விடையங்கள் இதுவரை மர்மமாகவே உள்ளது.
http://www.athirvu.com/newsdetail/624.htmlஅதிகாலை மலசலகூடத்துக்குச் சென்ற பெண்ணுக்கு நடந்த அவலம்! யாழ். கோண்டாவிலில் சம்பவம் !
[ Jul 30, 2014 04:03:02 PM | வாசித்தோர் : 2215 ]
மேற்படி வீட்டிலிருந்த பெண், செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை மலசலகூடத்திற்கு செல்வதற்காக வீட்டிற்கு வெளியில் வந்திருந்த வேளை, அங்கு முகத்தைத் துணியினால் கட்டிய நிலையில் நின்றிருந்த இருவர் அந்த பெண்ணை கத்தி முனையில் பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றுள்ளனர். வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கணவன் மற்றும் மகன் ஆகியோரைக் சத்தம் போட வேண்டாம் எனவும் சத்தம் போட்டால் பெண்ணை கத்தியால் குத்துவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
தொடர்ந்து, வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 15 பவுண் நகை (6 இலட்சத்து 30 ஆயிரம்) மற்றும் 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றினைக் கொள்ளையடித்துக் கொண்டு வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, குறித்த வீட்டுக்காரர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
http://www.athirvu.com/newsdetail/625.html
Geen opmerkingen:
Een reactie posten