பிரதேச சபை வீதி, கோரகல்லிமடு என்ற விலாசத்தை சேர்ந்த 04 பெண் பிள்ளைகளின் தாயான தங்கராசா ஞானம்மா (வயது 41) என்பவரே இவர் ஆவார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அம்பியூலன்ஸ் மூலம் சேர்க்கப்பட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வீட்டு எஜமான் சம்பளம் கொடுக்காமல் துன்புறுத்தியதாகவும், சம்பளத்தை தருமாறு கேட்டு கெஞ்சியதால் மூன்று மாதச் சம்பளத்துடன் நாட்டுக்கு திருப்பி அனுப்பியதாகவும் இவர் தெரிவித்து உள்ளார். எஜமான் அடித்து படியில் இருந்து தள்ளி விட்டபோது இவரின் கால் உடைந்து விட்டது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உதவியுடனேயே திரும்பி வந்து உள்ளார். இவரின் கால்கள் செயல் இழந்து போய் விட்டன என்று அஞ்சப்படுகின்றது.



Geen opmerkingen:
Een reactie posten