[ புதன்கிழமை, 30 யூலை 2014, 03:15.36 PM GMT ]
இதன்போது சுமார் 15 உணவகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. உணவகங்களில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டதுடன் காலாவதியான உணவு வகைகள், குளிர்பான போத்தல் வகைகள், பாண் வகைகள், மிளகாய் தூள் என பல சமையல் வகை பொருட்கள் விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
இதில் 15 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக நுவரெலியா மாவட்ட விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் இனிமேல் இவ்வாறான காலவதியான உணவு பொருட்களை வைத்திருப்பதை தடுத்துக் கொள்ளுமாறு விலை கட்டுப்பாட்டு அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதும்
குறிப்பிடத்தக்கது.
குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஹட்டன் டிக்கோயா நகர சபை எல்லைக்கு உட்பட்ட கடைகளில் பாவனைக்குதவாத 15000 கிலோ கிராம் எடையுடைய கோதுமை மா அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் டிக்கோயா இன்ஜெஸ்ட் தோட்டத்தில் தோட்ட நிர்வாகம் தோட்ட தொழிலாளிகளுக்கு காலவதியான கோதுமை மாவை வழங்கியதாக கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதார பரிசோதகர் விசாரணைக்குட்படுத்தும் போது காலாவதியான கோதுமை மா வைத்திருந்து தெரியவந்தது.
அத்தோடு வழமைக்கு மாறாக கோதுமை மாவில் நிறுவன குறியீடு இல்லாமல் இருப்பதாக தோட்ட தொழிலாளிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு நிறுவன குறியீடு மற்றும் காலவதியான என 15000 கிலோ கோதுமை மா சுகாதார பரிசோதகரால் கைப்பற்றப்பட்டதுடன், கோதுமை மா வைத்திருந்த களஞ்சியசாலைக்கும் முற்றுகை இடப்பட்டது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர் பி.கே.வசந்த தெரிவித்தார்.
மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் இடையிலான முறுகல் நிலையினால் காலவரையறையின்றி பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது.
பல்கலைக்கழகம் 4ம் திகதி திறக்கப்பட உள்ளதாக துணை வேந்தர் ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் பீடாதிபதிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உபவேந்தர் மற்றும் விரிவுரையாளர்களை மாணவர்கள் பணயமாக தடுத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு விரிவுரையாளர்களை தடுத்து வைத்திருந்த மாணவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடையும் 4ம் திகதியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி, பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchw4.html
ஊடக அடக்குமுறைக்கு எதிராக யாழில் நாளை கண்டனப் போராட்டம்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 04:03.25 PM GMT ]
வடக்கு- தெற்கு ஊடக கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் நண்பகல் 12 மணி முதல் 1 மணிவரை இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
கடந்த 25ம் திகதி ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து கொழும்பு சென்று கொண்டிருந்த யாழ்.ஊடகவியலாளர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்த படையினர் முயற்றி செய்தமை உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வடக்கு தெற்கு ஊடக கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் குறித்த போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கடுமையான அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் மேற்படி போராட்டத்திற்கான ஒழுங்கமைப்புக்களை செய்துள்ளதாக தெரிவித்திருக்கும் ஏற்பாட்டாளர்கள், குறித்த போராட்டத்தில் வடக்கு, தெற்கு பகுதிகளை சேர்ந்த ஐந்து ஊடக அமைப்புக்கள் ஒன்றாகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchw5.html
மக்ரே, ஹரிசன், சொல்ஹெம், விக்கி ஆகியோர் ஐ.நா விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்கவுள்ளனர்?
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 11:29.19 PM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்னிலையில் இவர்கள் சாட்சியமளிக்க உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கெலும் மக்ரே, பிரான்ஸிஸ் ஹரிசன் ஆகியோர் அடுத்த வாரம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகருக்கு விஜயம் செய்து சாட்சியமளிக்கவுள்ளனர்.
எரிக் சொல்ஹெய்ம் ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
எனினும், வட மாகாண முதலமைச்சர் விசாரணைகளில் பங்கேற்பது பற்றி எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.
இலங்கைக்கு எதிராக சாட்சியமளிக்கும் தரப்பினருக்கு புலிகளின் சுவிஸ் வலையமைப்பு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க இரண்டு பேர் முன்வந்துள்ளனர்.
புலிகளின் போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இதில் உள்ளடங்குகின்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchw6.html
Geen opmerkingen:
Een reactie posten