தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 juli 2014

ஜனாதிபதியைத் தவிர வேறு யாராலும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது: அமைச்சர் ரோஹித்த!!

ஹெரோயின் கடத்தல்: கடற்படை வீரர் உட்பட இருவர் கைது! போதைப்பொருள் எங்கே?- ஐ.தே.க கேள்வி
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 04:11.21 PM GMT ]
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கடற்படை வீரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவருடன் கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் முகாமையளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாக குறித்த இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுருவ பிரதேசத்தில் வைத்து குறித்த இருவரையும் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 1675 மில்லி கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கடற்படை வீரர் திருகோணமலை பிரதேச முகாமொன்றில் கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
17 கிலோ கிராம் ஹெரோயின் கடத்திய நபர் கைது
17 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய நபர் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
பொரள்ளே ஒதா எனப்படும் வசந்த சஞ்சீவ அபேரட்ன என்பவரை பொரளை பொலிஸார் இன்று மாலை கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் 17 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை சவப்பெட்டி ஒன்றில் இட்டு பொரளையிலிருந்து மினுவன்கொட வரையில் கடத்தியுள்ளார்.
அண்மையில் வனாத்தவில்லு பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட குடு திலான் என்பவரின் சகாவே ஒதா என தெரிவிக்கப்படுகிறது.
ஒதாவினால் மினுவன்கொடைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதைப் பொருள், விநியோகம் செய்யப்பட்ட நபர்கள் மற்றும் இடங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விரைவில் போதைப் பொருளையும் தொடர்புடையவர்களையும் கைது செய்ய முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருட்கள் எங்கே? ஐக்கிய தேசியக்கட்சி கேள்வி
அண்மைக்காலமாக இலங்கையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருட்களுக்கு என்ன நடந்தது என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீண்டும் பின்கதவால் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதா? என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர்,
அண்மைக்காலமாக கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருட்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போதைப் பொருட்கள் அதன் பின்னர் நீதிமன்ற பாதுகாப்பில் உள்ளதா அல்லது பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதா என்பது தெரியாது.
இந்தநிலையில் பொலிஸ் மற்றும் சுங்கத்தினர் கைப்பற்றும் போதைப் பொருட்கள் மீண்டும் கடத்தல்காரர்களுக்கே செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் சுமார் 1000 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchs1.html
சிறுமி ஒருவரை காதலிப்பதாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் விளக்கமறியலில் - நயினாதீவு திருவிழாவில் திருட்டில் ஈடுபட்ட 3 சிறார்கள் சிறுவர் இல்லத்தில்
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 04:15.57 PM GMT ]
யாழ்.பருத்தித்துறை பகுதியில் உள்ள சிறுமி ஒருவரை காதலிப்பதாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் சிறுவர் நீதிமன்றில் முறபடுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் தகவல் தருகையில்,
பருத்தித்துறை பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பல தடவைகள் சிறுமியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியிருக்கின்றார்.
இந்நிலையில் காதலிப்பதாக கூறிய இளைஞர் பின்னர் ஏமாற்ற நினைத்த நிலையில் சிறுமி தற்கொலைக்கு முயற்சித்ததாக பெற்றோர் பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுத்துள்ளனர்.
இதனடிப்படையில் குறித்த இளைஞரை கைது செய்து யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்றில், நேற்றைய தினம் முற்படுத்திய நிலையில் குறித்த இளைஞரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிப்பித்திருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்திருக்கின்றனர்.
நயினாதீவு திருவிழாவில் திருட்டில் ஈடுபட்ட 3 சிறார்கள் சிறுவர் இல்லத்தில்
யாழ்.நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்ற பொழுது அங்கே திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட 3சிறார்களை சிறுவர் இல்லங்களில் சேர்க்குமாறு சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி ஆலயத்தின் தேர் திருவிழா நடைபெற்ற தினத்தில் ஒரு சிறுமி உட்பட 3 சிறார்கள் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தவர்களின் பொருட்களை திருடினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைதுசெய்யப்பட்ட சிறார்கள் நீதிமன்றில் சில தினங்களுக்கு முற்படுத்தப்பட்ட நிலையில், தம்மை கைதுசெய்த பொலிஸார் தம்மை தாக்கியதாக சிறுவர்கள் நீதிமன்றில் தெரிவித்திருந்த நிலையில்
சிறுவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் முன்னர் கூறியிருந்தது.
இதற்கமைவாக சிறார்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை யாழ்.சாவற்கட்டு பகுதியை சேர்ந்த 3 சிறார்களும் 3 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடினர் என்ற குற்றச்சாட்டின்  பேரிலேயே கைதுசெய்யப்பட்டனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchs2.html
ஜனாதிபதியைத் தவிர வேறு யாராலும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது: அமைச்சர் ரோஹித்த
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 04:21.16 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைத் தவிர வேறு யாராலும் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாது என துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உறுதுணையாக அமைந்தது.
நாடாளுமன்றில் உள்ளவர்கள் கால்களில் இழுத்து பயணத்தை தடுக்க கூடியவர்கள். அவ்வாறானவர்களைக் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியாது. 
ஜனாதிபதி மஹிந்தவே இந்த நாட்டை சரியான பாதையில் வழிநடத்தி வருகின்றார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் களுத்துறையில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchs3.html

Geen opmerkingen:

Een reactie posten