தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 juli 2014

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அடுத்த முட்டுப்பாடு ஆரம்பம்: மர்மமான பாக்கிஸ்தான் நபர் !

துரையப்பா விளையாட்டரங்கில் குமரிகளின் இடுப்பழகு பார்த்த மாவை சேனதிராசா: புன்முறுவல் !

[ Jul 27, 2014 05:00:57 PM | வாசித்தோர் : 4180 ]
நேற்று இரவு துரையப்பா விளையாட்டரங்கில், கொழும்பில் இருந்து தொழிற்படும் வானொலி ஒன்றின் ஆண்டு விழா நிகழ்ச்சி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. க.பொ.த( உ.த) தோற்றும் மாணவர்கள் கற்றவற்றை மீட்கும் நேரத்தில் குமரிகளின் குத்தாட்டத்துடன் இசை நிகழ்ச்சியை நடாத்தியிருந்தது குறித்த வானொலி. நேற்று நண்பகலின் பின்னர் மிகப் பெரிய அளவில் ஒலியைக் கூட்டி துரையப்பா விளையாட்டு அரங்கச் சூழலை அதிர வைத்தக் கொண்டிருந்தது குறித்த வானொலி.
இதனால் கடுப்பாகிப் போன வடக்கு முதலமைச்சர் யாழ் மாநகரசபைக்கு ஒலியைக் குறைக்கும் வண்ணம் கடிதம் ஒன்றை அனுப்பியதாகத் தெரியவருகின்றது. பொலிசாருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை முதலமைச்சர் ஏன் மாநகரசபைக்கு அனுப்பினார் என்பது புரியவில்லை. இந் நிலையில் மாலை நடந்த ஆரம்ப நிகழ்வில் டக்ளஸ் தேவானந்த, மற்றம் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டதாகத் தெரியவருகின்றது
நிகழ்ச்சி ஆரம்பித்து குத்தாட்டம் நடைபெறும் சமயத்தில் டக்ளஸ் எழுந்து சென்று விட்டதாகவும் ஆனால் மாவை சேனாதிராஜா அங்கு ஆடிக் கொண்டிருந்த குமரிப் பெண்களைக் குறு குறு எனப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.athirvu.com/newsdetail/583.html

எரித்திரியாவில் புலிகளின் விமானங்கள் இருப்பது பொய்: மலேசியாவில் கைதான புலிகள் தகவல் !

[ Jul 27, 2014 05:31:58 PM | வாசித்தோர் : 3530 ]
மலேசியாவில் கைதாகி, கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள 3 முன் நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கல் சில தகவல்களை புலலாய்வுப் பிரிவினருக்கு வெளியிட்டு வருவதாக  சிங்கள இணையம் தெரிவித்துள்ளது. எரித்திரியா என்னும் நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான 6 விமானங்கள் தரித்து நிற்பதாக கூறப்படும் தகவல் தொடர்பாகவும் இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என இச் சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் சிலின் 143 ரக விமானங்கள் சிலவற்றை வாங்கி அதனை பின்னர் போர் விமானங்களாக தாமே வடிவமைத்தார்கள் என்பது யாவரும் அறிந்த விடையம்.
வன்னியில் அவர்களிடம் 2 சிலின் 143 ரக விமானங்கள் இருந்தது. மேலும் பறப்பில் ஈடுபட(இயங்க கூடிய நிலையில்) ஒரு கிளைடர் விமானமும் இருந்தது. இதனை தவிர எரித்திரியா என்னும் நாட்டில் உள்ள தனியார் விமான நிலையம் ஒன்றில் அவர்களுக்கு மேலும், 6 விமானங்கள் இருப்பதாக பரவலாக ஒரு கதை அடிபட்டு வந்தது. இந்த விமானங்களை பாவித்து, இலங்கை மீது புலிகள் அதிர்சி தாக்குதல் ஒன்றை நடத்தலாம் என்று கூட எதிர்வு கூறப்பட்டது. இன் நிலையில் அப்படி எந்த ஒரு விமானமும் எரித்திரியாவில் இல்லை, என்று தற்போது கைதாகியுள்ள புலிகளின் விமானப்படை முக்கியஸ்தர் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும் மலேசியாவில் கைதாகி இவ்வாறு கொழும்பு 4ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன் நாள் விடுதலைப் புலிகள் கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
http://www.athirvu.com/newsdetail/585.html

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அடுத்த முட்டுப்பாடு ஆரம்பம்: மர்மமான பாக்கிஸ்தான் நபர் !

[ Jul 27, 2014 06:20:20 PM | வாசித்தோர் : 1705 ]
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சுமூகமான உறவு ஒன்று தற்போது இருப்பதாக கூறப்படுகிறது. இல்லையென்றால் அதுபோன்ற ஒரு தோற்றப்பட்டு வெளியாகி வருகிறது என்று சொல்லலாம். ஆனால் உண்மையில் பல முரண்பாடுகள் இவ்விரு நாடுகளுக்கும் இடையே தோன்றியுள்ளது. இதற்கு காரணமாக இருப்பது பாக்கிஸ்தான் தான். சமீபத்தில் நரேந்திர மோடியை திருப்த்திப்படுத்த இலங்கையில் உள்ள பாக்கிஸ்தான் தூதுவரை மாற்றுமாறு மகிந்தர் பாக்கிஸ்தானிடம் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று பாக்கிஸ்தானும் தூதுவரை மாற்றியது. ஆனால் தர்போது பிரச்சனை வேறு ரூபத்தில் தோன்றியுள்ளது.
சமீபத்தில் தழிழகத்தில் கைதான இலங்கையைச் சேர்ந்த முஸ்லீம் நபர் ஒருவர், பாக்கிஸ்தானின் உளவாளி என்பது பலராலும் அறியப்பட்ட உண்மை. அவரை கியூ பிரிவு பொலிசார் தொடர்ந்து விசாரித்து வந்ததில், கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் தூதரகத்தில் மேலும் ஒரு நபர் இருப்பதாகவும் அவர் ஐ.எஸ்.ஐ உளவாளி எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் இந்திய மத்திய பாதுகாப்பு துறையினர் மேலும் குழப்பிப்போயுள்ளார்கள். அவர் யார் என்பது தொடர்பான தகவலை இலங்கைக்கு அனுப்பியுள்ளார்கள் றா அமைப்பினர். ஆனால் அப்படி ஒரு நபர் கொழும்பில் இல்லை என்று கோட்டபாயவின் அலுவலகம் அறிவித்துள்ளதாம்.
ஆனால் கொழும்பில் உள்ள தூதுதரகத்தில் தான் குறிப்பிட்ட உளவாளி பதுங்கி இருப்பதாக இந்தியா நம்புகிறது. இதனால் இந்தியாவில் உள்ள ரா அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் , இன்ரலிஜன் புயூரோ பிரினர் தற்போது கொழும்புடன் தொடர்புகளை ஏறபடுத்தியுள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

http://www.athirvu.com/newsdetail/586.html

Geen opmerkingen:

Een reactie posten