[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 02:07.47 AM GMT ]
வெலே சுதா எனப்படும் ஜீ.சமந்த குமார என்பவர் போதைப் பொருள் கடத்தல்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக இலங்கை போதைப் பொருள் தடுப்புப் பொலிஸார், பாகிஸ்தான் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
எனவே வெலே சுதாவை கைது செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை பொலிஸார் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெலே சுதாவை கைது செய்யும் நோக்கில் சர்வதேச பொலிஸாரின் உதவியடன் சிகப்பு எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
வெலே சுதா அதிக காலத்தை பாகிஸ்தானில் கழிப்பதாகவும், நாட்டுக்கு நாடு தாவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெலே சுதாவின் இலங்கை நண்பர் ஒருவரை கைது செய்யவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciv1.html
உப்புல் ஜெயசூரியவின் பாதுகாப்புக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 02:12.43 AM GMT ]
எனினும் அவர் தனிப்பட்ட ரீதியில் உப்புல் ஜெயசூரியவின் பாதுகாப்புக்காக பொலிஸாரை அமர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அதற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளரிடம் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்தபோதும், இன்னும் அதற்கு பதில் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசசார்பற்ற நிறுவனங்களின் மீது அரசாங்கம் மேற்கொண்டு வரும் அடக்குமுறையை ஆட்சேபித்து அறிக்கை வெளியிட்டமையை அடுத்து, தமது வாகனத்தை சிலர் பின்தொடர்வதாக உப்புல் ஜெயசூரிய முறையிட்டுள்ளார்.
எனவே பயணங்களின்போது தமக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பொலிஸ்மா அதிபர், ஜனாதிபதியின் கீழ் இயங்கும் சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சின் செயலாளர் நந்தா மல்லவாராட்சியின் அனுமதியை எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றிய பிரதமர் டி.எம்.ஜயரத்ன, உப்புல் ஜெயசூரியவின் வாகனத்தை பின்தொடரும் வாகனங்கள் இலக்க தகடற்ற வாகனங்கள் என்று குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciv2.html
ஆஸியில் மேற்படிப்புக்காக இரவில் சுத்திகரிக்கும் பணியில் ஈடுபடும் இலங்கை மாணவர்கள்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 02:39.41 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் இரவில் சுத்திகரிக்கும் பணிகளில் ஈடுபடும் மாணவர்கள் பகலில் போராட்டங்களில் பங்கேற்கின்றனர்.
அவுஸ்திரேலியாவில் சுத்தம் செய்யும் பணியாளர்களின் உரிமைகளுக்காக போராடும் யுனைடெட் வொய்ஸ் அமைப்பின் பெரும்பாலான அங்கத்தவர்கள் இலங்கை உட்பட வேறு நாடுகளில் இருந்து வந்து மேற்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை, இந்தியா, பங்களாதேஸ் மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்கள் அங்கு தமது மேற்படிப்புக்காக பணத்தை தேடிக்கொள்ள சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்கின்றனர்.
இதன்போது அவுஸ்திரேலிய சட்டப்படி ஒரு மணித்தியாலத்துக்கு 24 டொலர்கள் வரை கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டும்.
எனினும் இலங்கை உட்பட்ட நாடுகளின் மாணவர்களுக்கு 15 டொலர்கள் வரையிலான குறைந்த கொடுப்பனவுகள் செலுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 5 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும்.
இந்தநிலையில் இரவுவேளைகளில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடும் இவர்கள் காலையில் தமது நோக்கங்களுக்கான அலுவலகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் செல்கின்றனர்.
அத்துடன் தமது குறைந்த கொடுப்பனவுக்கு எதிராக யுனைடெட் வொய்ஸ் அமைப்பு நடத்தி வரும் போராட்டங்களிலும் அவர்கள் பங்கேற்பதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciv3.html
யாழில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இரு சிறுவர்கள் வைத்தியசாலையில்!
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 03:37.12 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் திருட்டுக் குற்றச்சாட்டில் கைதான இரு சிறுவர்கள் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்.
நேற்று குறித்த இரு சிறுவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நயினாதீவுப் பகுதியில் வைத்து காணாமல்போன பொருள் ஒன்றைத் திருடியவர்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களுகம் யாழ். சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள் ஊடாக சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டபோது இரு சிறுவர்களும் கடுமையாகத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகவும் அதனால் ஏற்பட்ட உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காகவே இவர்களை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் 11ஆம் இலக்க விடுதியில் சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொகான் டயஸ் சிறுவர்களை பார்வையிட வைத்தியசாலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciv4.html
Geen opmerkingen:
Een reactie posten