தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 juli 2014

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் இழிசெயல்களால் உண்மைகளை உறங்கவைக்க முடியாது!- பொ.ஐங்கரநேசன்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மகிந்த அரசுக்கு எதிரான இயக்கம் - படையினர் வாகனத்தை திட்டமிட்டு சோதனையிடவில்லை!- ருவான் வணிகசூரிய
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 03:05.31 PM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பற்றும் இயக்கம் ஒன்று அந்த கட்சிக்குள் உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வேலைத்திட்டத்திற்கு இணங்காத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் மூலம் இந்த தகவல் கசிந்துள்ளது.
மேற்படி இயக்கத்தினர் 15 விடயங்களுடன் கூடிய வேலைத்திட்டத்தை உருவாக்கி அது குறித்து பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கு எதிராக முனைப்புகளை மேற்கொண்டு வரும் இந்த குழுவினர் குறித்து உயர்மட்டம் மௌனம் காத்து வருகிறது.
மகிந்த அரசாங்கத்தை விமர்சிக்கும் 50க்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்த குழுவில் இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்களில் அரச உயர்மட்டத்தின் ஒற்றர்களும், உண்மையில் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழுவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பவர்கள் என பேசப்படுகிறது.
படையினர் வாகனத்தை திட்டமிட்டு சோதனையிடவில்லை- ருவான் வணிகசூரிய
யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனத்தில் இராணுவ வீரர் ஒருவர் கஞ்சா போதைப்பொருளை வைத்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இராணுவம் மறுத்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற வடக்குகிழக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறி ஒன்றுக்காக நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து ஊடகவியலாளர்கள் குழு ஒன்று கொழும்புக்கு புறப்பட்டது.
இதன்போது ஓமந்தையில் வைத்து அவர்கள் பயணித்த வாகனம் வழிமறிக்கப்பட்டு பொலிஸாராலும் இராணுவத்தினராலும் சோதனையிடப்பட்டது.
இதன்போது இராணுவ வீரர் ஒருவர் சிகரட் பெட்டி ஒன்றை வாகனத்தின் பின்பக்கத்தில் எறிந்துவிட்டு அது வாகனத்தில் கிடந்ததாக கூறி வாகன சாரதியே அதனை கொண்டு வந்தாக குற்றம் சுமத்தினார்.
இதனையடுத்து வாகனம் கைப்பற்றப்பட்டது. ஊடகவியலாளர்களும் சாரதியும் விசாரணை செய்யப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
குறித்த இராணுவ வீரர் சிகரட் பக்கட்டை பின்னால் போட்டமையை தாம் பார்த்ததாக தெரிவித்த ஊடகவியலாளர்கள் அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரினர்
எனினும் ஊடகவியலாளர்களின் வாகனம் திட்டமிட்டு நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய மறுத்துள்ளார்.
எனினும் வாகன சாரதி மாத்திரமே விசாரணை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcip3.html
ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 13 பேர் கைது! - மகளை கொலை செய்த தாய்க்கு 10 வருட சிறை
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 04:15.02 PM GMT ]
பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 13 பயிலுனர் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் ஏழு பயிலுனர் ஆசிரியர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கல்லூரியின் உணவகத்தில் இரவு உணவு உண்டதன் பின்னர் கை கழுவச் சென்ற இடத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்திற்கான பிரதான காரணம் காதல் விவகாரம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதல் காரணமாக கல்லூரியின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய பயிலுனர் ஆசிரியர்களை பத்தனை பொலிஸார் கைது செய்து, ஹற்றன் நீதவான் எதிரில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
மகளை அடித்து கொலை செய்த தாயொருவருக்கு 10 வருட சிறை
தனது மகளை அடித்து கொலை செய்த தாயொருவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் சமையலறையில் வைக்கப்பட்டிருந்த பால்மா போத்தலிலிருந்து பால்மாவை தெரியாமல் எடுத்து சாப்பிட்ட மகளை, தாக்கிக் கொலை செய்த தாய் ஒருவருக்கே 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நான்கு வயதான மகளை தடியினால் கொடூரமாக தாக்கியதாக குறித்த பெண் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டமையினால் குறித்த பெண்ணுக்கு, பலபிட்டிய உயர் நீதிமன்ற நீதவான் மொஹான் செனவிரட்ன, பத்தாண்டு கால கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
ஹிக்கடுவ களுபே என்னும் இடத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
ரோஹினி டி சில்வா என்ற சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்திருந்தார்.
1998ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcip4.html
ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் இழிசெயல்களால் உண்மைகளை உறங்கவைக்க முடியாது!- பொ.ஐங்கரநேசன்
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 04:20.08 PM GMT ]
ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையிலும், அவமானப்படுத்தும் வகையிலும் எத்தகைய இழிசெயல்களை எவர் மேற்கொண்டாலும் உண்மைகளை ஒருபோதும் உறங்கவைக்க முடியாது என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்.
ஓமந்தையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு தமிழ் ஊடகவியலாளர்கள் சிலரைக் கஞ்சா கடத்தியதாகக் கூறி வழக்கில் சிக்க வைப்பதற்குப் படையினர் முயன்றது தொடர்பாக ஊடகங்களுக்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் கண்டனச் செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்தச் செய்திக் குறிப்பில்,
கொழும்பில் நடைபெறவுள்ள ஊடகப் பயிற்சிநெறியொன்றில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்துக் கொண்டிருந்த போது வாகனத்தை ஓமந்தை சோதனைச் சாவடியில் வழிமறித்த படையினர், வாகனத்துக்குள் கஞ்சா அடங்கிய சிகரெட் பெட்டி ஒன்றை வைத்துவிட்டு நாங்கள் கஞ்சா கடத்தியதாக ஈனத்தனமான நாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளனர்" என்று ஊடகவியலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஊடகவியலாளர்கள் ஓமந்தை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட போது அவர்கள் காட்டிய எதிர்ப்பின் காரணமாகப் பின்னர் விடுவிக்கப்பட்டாலும், சாரதி கஞ்சா வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை, தமிழ் மக்கள்மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இனரீதியான ஒடுக்குமுறைகளை, ஈவிரக்கமற்ற இராணுவ நடவடிக்கைகளை, நில அபகரிப்பை உடனுக்குடன் சர்வதேசமெங்கும் அறியச் செய்வதால் இலங்கை அரசாங்கம் அஞ்சி நடுங்கும் பேராயுதமாக இன்று இருப்பது ஊடகங்களும் நெஞ்சுரம் மிக்க ஊடகவியலாளர்களும் தான். தமிழ் மக்களது இன்றைய பெரும் பலமும் இவர்கள்தான்.
இதனால்தான் ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். ஊடகங்கள்மீதும், ஊடகவியலாளர்கள்மீதும் தாக்குதல் மேற்கொள்ளுவதும் சேறு பூசுகின்ற நிகழ்ச்சிகளும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுவருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே, ஊடகவியலாளர்களின் ஆன்மாவைப் படுகொலை செய்யும் நோக்கில் போதைப் பொருள் வழக்கிலும் அவர்களைச் சிக்கவைக்கும் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையிலும் சமூகத்தில் அவர்களது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி அவமானப்படுத்தும் வகையிலும் எத்தகைய இழிசெயல்களை எவர் மேற்கொண்டாலும் உண்மைகளை ஒருபோதும் உறங்கவைக்க முடியாது.
முள்ளிவாய்க்காலில் இராணுவத் தரப்பால் எடுக்கப்பட்ட புகைப்படங்களே இன்று அவர்களுக்கு எதிரான போர்க்குற்ற ஆதாரங்களாக, தமிழினப் படுகொலையின் சாட்சியங்களாக ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருப்பது உண்மைகளை அசுரப்பலம் கொண்டும்கூட மூடிமறைக்க முடியாது என்பதற்கு ஒரு வலுவான உதாரணம் ஆகும்.
ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, ஜனநாயக ஊடகக் குரலை ஒடுக்க முற்படுவோர்களுக்கு எதிராக இன, மொழி பேதங்களைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcip5.html

Geen opmerkingen:

Een reactie posten