தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 juli 2014

இலங்கை மீது இந்தியா நிபந்தனை….

பாலஸ்தீன இனப்படுகொலையை கண்டித்து சென்னையில் போராட்டம்

போராட்டத்தில் பங்கேற்றவர்கள், இஸ்ரேல்- அமெரிக்க நாடுகளை கண்டித்தும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையை நினைவு படுத்தியும் பதாகைகை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தை சேர்ந்த பிரவின், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ், திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் அருண், தமிழ் தேச பொதுவுடைமை கட்சியை சேர்ந்த தமிழ் சமரன், மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த சலீம் அகமது, இந்திய தவ்கீத் சமாத் கட்சியை சேர்ந்த எஸ்.எம்.பார்கர், இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தை சேர்ந்த உமர்கையான், பொறியாளர் ஏழுமலை மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


போராட்டத்தின் போது வந்த மழைத்தூரல்களையும் பொருட்படுத்தாது பாலஸ்தீன மக்களின் துயரங்களை நெஞ்சில் சுமந்தவாறு பதாகைகளை ஏந்தி நின்று தமிழர்கள் என்றும் தமிழீழ விடுதலையை போன்றே பாலஸ்தீன விடுதலைக்கும் துணைநிர்ப்போம் என்பதை வெளிப்படுத்தினர்.
israel-chennai-01israel-chennai-02israel-chennai-03
http://www.jvpnews.com/srilanka/77590.html

இலங்கை மீது இந்தியா நிபந்தனை….

சிங்கப்பூரில் நடந்த “பிரதமர் மோடி அரசாங்கத்தின் கட்டாயங்களும் சவால்களும்” என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்ட பாரதீய ஜனதா கட்சியின் வெளிவிவகாரக் கொள்கைப் பிரிவின் தேசிய அமைப்பாளர் கலாநிதி சேஷாத்ரி சாரி, பிரிஐ செய்தி நிறுவனத்திடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்புக்கும் புதுடெல்லிக்கும் இடையிலான வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்பினால், தமிழர் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என்று நாம் சிறிலங்காவுக்கு கூறியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
சீனா குறித்து கருத்து வெளியிட்ட கலாநிதி சேஷாத்ரிரி சாரி, ”அதே வகையில் தான் சீனாவையும் அணுகுகிறோம். அருணாசலப் ப்ரதேசம் குறித்து எந்தவொரு பேச்சுக்களையும் நாம் நடத்தமாட்டோம் என்று சீனாவுக்குக் கூறியுள்ளோம்.
எமது அருணாசலப் பிரதேசம் குறித்து சீனா கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் கவலை கொள்வதற்கு திபெத், ஜின்ஜியாங் விவகாரங்கள் உள்ளன. வெளிநாட்டு விவகாரங்கள் குறித்து முடிவுகளை எடுக்கும் – தமிழ்நாடோ, மேற்கு வங்காளமோ அல்ல.” என்றும் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/77599.html

Geen opmerkingen:

Een reactie posten