தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 juli 2014

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் இலங்கையுடன் எந்த பேச்சுமில்லை: மொரிசன்!

கடனை திருப்பி செலுத்த முடியாத இக்கட்டில் அரசாங்கம்: சம்பிக்க ரணவக்க
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 11:34.37 AM GMT ]
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பெறப்பட்ட கடனுக்காக வருடாந்தம் திருப்பி செலுத்த வேண்டிய தொகையை செலுத்த முடியாத இக்கட்டான நிலைமையை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி வருமானம் மற்றும் அரச வருமானத்தை அதிகரிக்காது போனால், தேசிய மற்றும் சர்வதேச கடன்களை செலுத்த நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடன் சுமை குறைத்து கவர்ச்சிகரமான வளர்ச்சியை பெற்றுள்ளதாக கூறினாலும்> அரசாங்கத்தின் முழு வருமானம் வருடாந்த கடனை செலுத்துவதற்கும் போதுமானதல்ல எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
கடனை திருப்பி செலுத்துவதில் பிரச்சினைகளை எதிர்நோக்கிய யுக்ரைன் , இத்தாலி போன்ற நாடுகள் கடனை திருப்பி செலுத்துவதற்காக பெறுமதியான நிலங்கள்,  துறைமுகம், ரயில் சேவை,  மின்சார உற்பத்தி நிலையங்களை வெளிநாட்டவர்களுக்கு வழங்க வேண்டிய நிலைமையை எதிர்நோக்கின.
இதனால், கடன் செலுத்துவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து,  நாட்டின் தேசிய வருமானம் மற்றும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காது போனால் இலங்கைக்கு அந்த நிலைமை ஏற்படும் எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchw0.html
வடக்கில் 400 பாடசாலைகளில் 80க்கும் குறைவான பிள்ளைகள்!
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 12:31.40 PM GMT ]
வடக்கில் உள்ள 400 பாடசாலைகளில் 80 க்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்பதாக வடக்கு மாகாண கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இவற்றில் 162 பாடசாலைகளில் 50 முதல் 80 வரையான மாணவர்கள் பயில்வதுடன் 250 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் 50க்கும் குறைவான மாணவர்களே கற்பதாக கூறப்படுகிறது.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் பல முறை மக்கள் இடம்பெயர்ந்ததன் காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளது.  மாணவர்களின் எண்ணிகை குறைவாக இருப்பதால், ஆசிரியர்களின் விகிதாசாரத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchw2.html

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் இலங்கையுடன் எந்த பேச்சுமில்லை: மொரிசன்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 02:12.22 PM GMT ]
157 புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில் இலங்கையுடன் எவ்விதமான பேச்சுவார்த்தைகளும் இல்லை எனவும் அவர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் எனவும் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.
மேற்படி புகலிட கோரிக்கையாளர்கள் இந்தியாவில் வாழ்ந்திருக்க வேண்டும் அல்லது இந்தியா வழியாக வந்திருக்க வேண்டும்.
சுமார் ஒரு மாதம் கடலில் சுங்க கப்பலில் வைக்கப்பட்டிருந்த 157 புகலிட கோரிக்கையாளர்களை இந்தியா ஏற்பது தொடர்பான விடயம் வெற்றியளிக்கவில்லை எனவும் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நீண்டகால கொள்கையை மீறி 37 குழந்தைகள் உட்பட இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் சில நாட்களுக்கு முன்னர் கேர்ட்டின் தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர்.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் இவர்கள் ஜூன் மாத நடுப்பகுதியில் இந்தியாவின் புதுசேரி மாநிலத்தில் இருந்து படகு மூலம் புறப்பட்டனர்.
இந்த புகலிட கோரிக்கையாளர்கள் மற்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி கூறி குடிவரவு அமைச்சர் சில வாரங்கள் மறுத்து வந்தார். 
புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் இரகசியமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்ததாக மொரிசன் பின்னர் தெரிவித்திருந்தார்.
நாங்கள் நான்கு தெரிவுகள் பற்றி கலந்துரையாடினோம். புகலிட கோரிக்கையாளர்கள் அடையாளம், செயற்பாடுகள், இந்தியா அவர்களை ஏற்பது பற்றி நாங்கள் பேசினோம். ஆனால் இந்தியா அவர்கள் ஏற்பதை மறுத்து விட்டது.
தமிழ் புகலிட கோரிக்கையாளர்களை ஏற்பது தொடர்பான இந்திய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.
சுங்க கப்பலில் இருந்தவர்களின் சொந்த நாடு மற்றும் அடையாளம் காண்பதில் சிரமங்கள் இருந்தன. இதனையடுத்து குறித்த பொருளதார குடியேறிகள் அவுஸ்திரேலியாவில் மேற்கில் உள்ள கேர்ட்டின் தடுப்பு முகாமுக்கு கொண்டு வரப்பட்டனர்.
இவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றம் முடியாது. அவர்கள் இந்தியாவுக்கு திரும்பி செல்ல முடியும் எனவும் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பு முகாமில் இருக்கும் புகலிட கோரிக்கையாளர்களின் அடையாளம் மற்றும் வதிவிடங்கள் குறித்து தீர்மானிக்க இந்திய அதிகாரிகள் உதவியளிப்பாளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகாமில் உள்ள தமிழர்களிடம் விசாரணைகளை நடத்த அவுஸ்திரேலியா விடுத்துள்ள அழைப்பு கிடைத்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இரண்டு தரப்பினரும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchw3.html

Geen opmerkingen:

Een reactie posten