தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 juli 2014

அகதிகளுக்காக பணி செய்த மதபோதகர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்றாகும்!!

இலங்கையில் அல்- கைதா செயற்படவில்லை - பாதுகாப்பு அமைச்சு
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 06:38.32 AM GMT ]
இலங்கையில் அல்- கைதா அமைப்போ ஏனைய பயங்கரவாத அமைப்புகளோ தளங்களை கொண்டிருக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் இலங்கையை தமது பயிற்சி தளமாக பயன்படுத்தி வருவதாக பல சந்தர்ப்பங்களில் குற்றம் சுமத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த குழுக்கள் இலங்கைக்குள் இயங்க இலங்கை அரசாங்கம் எந்த சந்தர்ப்பங்களையும் வழங்கவில்லை. பயங்கரவாதம் என்பதில் மாற்றங்களும் இல்லை அது எந்த வடிவமாக இருந்தாலும் பயங்கரவாதமே.
முஸ்லிம்களோ, முஸ்லிம் குழுக்களோ இலங்கைக்குள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சித்தால், அதற்கு இடமில்லை. விடுதலைப் புலிகள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டார்களோ அவ்வாறே இதுவும் மேற்கொள்ளப்படும்.
இலங்கையிடம் உண்மைகளை கண்டறியும் திறன் உள்ளதுடன் இலங்கை மண்ணில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்பட்டால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையில் வெளிநாட்டு பயங்கரவாத குழுக்கள் செயற்படுவது தொடர்பில் இராணுவமோ, பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவுகளே எந்த தகவல்களையும் பெறவில்லை எனவும் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLcir6.html
பஸ்களை அனுப்பியும் சுதந்திரக் கட்சியின் கூட்டங்களுக்கு கூட்டம் சேரவில்லை!
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 06:43.35 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெறும் தொகுதி வாரியான கூட்டங்கள் தொடர்ந்தும் தோல்வியடைந்து வருவதாக தெரியவருகிறது.
கண்டி மாவட்டத்தில் பல தொகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை பயன்படுத்தி ஆட்களை அழைத்து வந்த போதும் போதிய கூட்டம் சேரவில்லை.
இதனால் வெளிப்பிரதேசங்களுக்கு பஸ்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் ஆட்களை திரட்ட முடியவில்லை.
இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் கூட்டம் எனக் கூறியே குருணாகல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் நடத்தப்பட்ட கூட்டங்களுக்கு ஆட்களை வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எந்தவொரு அரசாங்கமும் முழுமை பெற்றவை அல்ல: மைத்திரிபால சிறிசேன
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 07:12.55 AM GMT ]
தற்போதைய அரசாங்கம் நூற்றுக்கு நூறு முழுமை பெற்ற அரசாங்கம் அல்ல என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனினும் இன்றைய அரசாங்கம் நாட்டை உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தம்புள்ளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் ஒன்றை நடத்தும் போது அது நூற்றுக்கு நூறு முழுமை பெற்ற அரசாங்கமாக இருக்காது. உலகில் எங்கும் அப்படியான அரசாங்கங்கள் இல்லை.
10 வருடங்களுக்கு முன்னர் இலங்கை எப்படி இருந்தது? அந்த யுகம் நினைவில் உள்ளதா? 25 வருடங்களுக்கு முன் இப்படியான அபிவிருத்தி நாட்டில் ஏற்பட்டதா?
நாட்டில் இன்றிருக்கும் அமைதி அன்றிருந்ததா, நாட்டில் ஏதேனும் அரசியல் மறுசீரமைப்பு நடக்க வேண்டுமாயின் அது மகிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான இந்த அரசாங்கத்திலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சுமார் 10 ஆண்டு கால அரசாங்கத்தில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அமைதி ஏற்படுத்தப்பட்டது.
அமைதியை ஏற்படுத்தி முன்னெடுக்கும் அபிவிருத்தியுடன் நாட்டுக்கு தேவையான ஏனைய சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை மேற்கொண்டு நாம் முன்னோக்கி செல்ல வேண்டும் எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
அகதிகளுக்காக பணி செய்த மதபோதகர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்றாகும்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 07:36.35 AM GMT ]
1990ம் ஆண்டு போரால் அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு சென்று உதவிகளைப் பெற்று வரும் வழியில் பங்குத்தந்தை செல்வராசா சவளக்கடை கிராமத்திலே வைத்து இராணுவத்தினராலும், ஊர்காவற் படையினராலும் கொடூரமான முறையிலே கொலை செய்யப்பட்ட நாள் இன்றாகும்.
சொறிக்கல்முனை சாந்தகுறூஸ் விளையாட்டுக்கழகம் பங்குத்தந்தை செல்வராசா அவர்களின் 24 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சொறிக்கல்முனை பொது விளையாட்டு மைதானத்திலே கழகத்தலைவர் எம். அரவிந் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன், மு.இராஜேஸ்வரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.குணரெத்தினம், பிரதேசசபை உறுப்பினர்கள், கிராம பெரியார்கள், ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்,
இந்த நாட்டிலே இனக்கலவரங்கள் ஏற்பட்ட போதெல்லாம் தங்களது உயிரையும் துச்சமென மதித்து மக்களின் துன்பத்தில் பங்கெடுத்தவர்கள்தான் மதபோதகர்கள் அந்த வகையிலேதான் பங்குத்தந்தை அவர்களும் செயற்பட்டார்.
தமது பிரதேசத்திலே உள்ள அகதியாக தஞ்சமடைந்திருந்த மக்களின் நிலையினை கவனத்தில் கொண்டு அந்த மக்களுக்காக வேண்டி அவரது பணியினை முன்னெடுத்துச் சென்றபோது எந்த ஈவிரக்கமும் இன்றி கொலை செய்யப்பட்டார்.
இவர் கொலை செய்யப்பட்ட அன்று அந்தக் கிராத்திலே 80க்கும் மேற்பட்ட உயிர்கள் அழிக்கப்பட்டன. அத்தோடு 1990ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின் போது 42 பேரை கைதிகளாக பிடித்துச்சென்றார்கள். அவர்களின் நிலை என்னவென்று இன்றும் வெளிச்சத்திற்கு வரவில்லை என்ற நிகழ்வினை நினைக்கும்போது அனைவரது மனமும் வேதனைப்படும்.
குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களிலே பல இடங்களில் உயிர் இழப்புக்கள் ஏற்பட்டு அவை காலம் கடந்தாவது வெளிவந்திருக்கின்றன. ஆனால் அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரையில் இவ்வாறான பேரழிவுகள் இடம்பெற்றபோதும் அது என்றும் வெளிவராததொன்றாகவே இருந்து வருகின்றது.
இது போன்ற உண்மைச் சம்பவங்களை வெளியில் கொண்டுவருகின்ற போது நாட்டைக் காட்டிக் கொடுக்கின்றார்கள் என்றும், துவேசமான வார்த்தைகளைக்கூறி உணர்ச்சியை ஏற்படுத்துகின்றார்கள் என கூறுகின்றார்கள். அதன்காரணமாக எமது தமிழ் மக்களின் உண்மையான அழிவுகளை எங்களைப்போன்ற அரசியல்வாதிகளால் வெளியிட முடியாத நிலையிலே இருக்கின்றோம்.
2013ஆம் ஆண்டு தேசத்திற்கு மகுடம் நிதி ஒதுக்கீட்டில் சாந்தகுறுஸ் விளையாட்டுக்கழக மைதானத்திற்காக 14 இலட்சம் ரூபா நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் அந்த வேலைத்திட்டத்தில் நான்கில் ஒரு பங்குகூட இதுவரையும் முன்னெடுக்கப்படவில்லை. அதே போன்று 11 ஆம் கிராமம் மத்திய முகாம் 6 இல் பொது விளையாட்டு மைதானத்திற்காக 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டமும் இதுவரைக்கும் நிறைவேற்றப்படாததொன்றாகவே இருந்து வருகின்றது.
இதைத்தான் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் அபிவிருத்தி என்று கூறுகின்றார்களா என்ற கேள்வியினை ஒவ்வொருவரும் கேட்கவேண்டி இருக்கின்றது. இவ்வாறு அபிவிருத்தி என்று சொல்லி எமது பிரதேசத்தினை சீரழிப்பதனையும், எமது மக்களை அழித்துவிட்டு தமிழர்களுக்குரிய தீர்வினை வழங்காது ஏமாற்று வித்தை செய்யும் இந்த அரசாங்கத்தினை நம்பி பின்னால் செல்லும் அரசியல் வாதிகள் திருந்தி எமது மக்களின் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து ஒத்துழைப்பு வழங்குவதன்மூலமே எமது சரியான இலக்கை அடைய முடியும்.
அதனைவிடுத்து தங்களது சுயலாபம் கருதி அரசாங்கத்துடன் நின்றவர்கள் மக்களால் கைவிடப்பட்டு அனாதைகளாக அழைந்து திரிவதனையும் எம்மால் காணமுடிகின்றது எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLcis0.html

Geen opmerkingen:

Een reactie posten