100 மில்லியன் பணம் கொடுத்து ஓபாமாவை பாக்கெட்டில் போட மகிந்தர் வகுத்துள்ள ரகசிய திட்டம் அம்பலம் !
[ Jul 28, 2014 03:50:07 PM | வாசித்தோர் : 4710 ]
சர்வதேச ரீதியில், குறிப்பாக அமெரிக்காவிற்குள் இலங்கை அரசாங்கத்தின் நற்பெயரை கட்டியெழுப்பும் பொறுப்பை, நூறு மில்லியன் டொலர் செலவிட்டு அமெரிக்காவிலுள்ள சில நிறுவனங்களிடம் மஹிந்த ராஐபக்ச அரசாங்கம் ஒப்படைத்துள்ளது. அமெரிக்காவில் வங்கி கணக்குகளை பேணிச் செல்லும் அல்லது அமெரிக்காவில் இயங்குகின்ற நான்கு நிறுவனங்களுக்கு ஏற்கனவே அரசாங்கம் நிதியை செலுத்தியுள்ளது குறித்த நான்கு நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்களான மெடிசன் குரூப் நிறுவனம் மற்றும் பெல்ட்வே கவர்ன்மன்ட் ஸ்டெடஜிஸ் நிறுவனம் என்பன அமெரிக்காவில் வெளிநாட்டு முகவர் நிலையங்களை பதிவு செய்வதற்கான சட்டத்தின் கீழ் அமெரிக்காவில் இயங்கிவருகின்றன.
இந்த இரண்டு நிறுவனங்களையும் தவிர, தொம்சன் எட்வயிசரி குரூப் நிறுவனத்துடன் அரசாங்கம் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதுடன், 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதியுடன் அந்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துள்ளது. குறித்த நிறுவனத்திற்கு 100 மில்லியன் ரூபா, அதாவது, 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மாதமொன்றுக்கு 66,600 டொலர் கொடுப்பனவின் கீழ் செயற்பட்டு வந்துள்ளது இதைத்தவிர, மெஜோரிட் குரூப் நிறுவனத்திற்கு அரசாங்கம், 2013ஆம் ஆண்டு 348000 அமெரிக்க டொலரை செலுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் சர்வதேசத்தை தெளிவூட்டுவதற்காக, வெளிவிவகார அமைச்சுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதே மெடிசன் குரூப் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.
அதற்காக, குறித்த நிறுவனத்திற்கு மாதாந்தம் 15 ஆயிரம் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளதுடன், அந்த பொறுப்பு நிறைவேற்றுகின்ற விதத்திற்கேற்ப, அதற்கான செலவுகள் மற்றும் கொடுப்பனவுகளையும் செலுத்தியுள்ளது அத்துடன், மெடிசன் குரூப் நிறுவனத்துடனான உடன்படிக்கை 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவு பெறவுள்ளதுடன், அந்த உடன்படிக்கையை நீடித்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக குறித்த நிறுவனத்தில் கடமையாற்றும் ஒருவரை மேற்கோள்காட்டி, தகவல்கள் வெளியாகியுள்ளன பெல்ட்வே கவர்ன்மன்ட் ஸ்டெடஜிஸ் நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம், அந்த நிறுவனம் இலங்கை வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினரின் பொறுப்புக்களை கண்காணித்துள்ளது.
இந்த விடயம் குறித்து, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவிடம் வினவியபேர்து இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள விடயங்கள் குறித்து தமது அமைச்சு, சர்வதேச சமூகத்துடன் தொடர்புகளை பேணி வருவதாகவும் , அது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அவர் பதிலளித்துள்ளார் தமது கடமைகளையும், பொறுப்பையும் நிறைவேற்றிக் கொள்வதில் தவறு காணப்படுகின்றதா என கேள்வி எழுப்பியுள்ள கண்காணிப்பு உறுப்பினர், எல்.ரி.ரி.ஈ இயக்கம் , அவர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியிலான பிரசாரத்திற்காக ஆண்டொன்றிற்கு 2. 5 மில்லியன் அமெரிக்க டொலரை செலவிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது
சஜின் டி வாஸ் குணவர்தன பத்திரிகைக்கு தெரிவித்த கருத்து- 'இலங்கை மற்றும் ஏனைய சில நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது, அமெரிக்காவின் செயற்பாடுகள் வித்தியாசமானவை எனபதை புரிந்துக் கொள்ள வேண்டும். நிறைவேற்று அதிகாரம், செனட் சபை மற்றும் காங்கிரஸ் என்பன வௌவேறாக காணப்படுகின்றன. சில விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற தூண்டுதல்கள் காரணமாக பல்வேறு கருத்துக்கள் மற்றும் கொள்கைகள் தோற்றம் பெறுகின்றன. அவர்களின் நடைமுறைக்கு அமைய இந்த விடயங்களை அடிப்படையாக கொண்டே காங்கிரஸ் மற்றும் செனட் சபை என்பன தீர்மானங்களை மேற்கொள்கின்றன. இலங்கை அரசாங்கம் இந்த பொறுப்பை நிறைவேற்றுவதில் , சாதகமான பெறுபேற்றை பெற்றுக் கொள்ளவில்லை என்பதனை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும். எமக்கு பழக்கமான நடைமுறையொன்றை பின்பற்றுவதற்கு முயற்சிக்க முடியாது. இந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் அமெரிக்காவின் நடைமுறையை பின்பற்ற வேண்டியிருந்தது.
அதில் நான் தவறொன்றை காணவில்லை. எமது செய்தியை நாங்கள் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. ஒவ்வொரு வாரமும் எம்மை பற்றி, பிரதிவாதிகள் கருத்துக்களை வெளியிடுகின்றமையினாலேயே இந்த பிரயத்தனத்தில் ஈடுபட வேண்டியிருந்தது. அதனூடாக சர்வதேசத்திற்குள் உருவாகின்ற மாற்று எண்ணங்களுக்கு எதிராக செயற்பட வேண்டியிருந்தது. எமது உண்மையான நிலைமையை அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது. அது சட்ட ரீதியாக கருத்தை தெரிவிக்க வேண்டியிருந்தது. அதில் தவறேதும் உள்ளதா?— இவ்வாறான நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்கின்றமை வழமையான விடயம் என்று கருதுவதற்கான வாய்ப்பு இருந்தாலும், அந்த நிறுவனங்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக அரசாங்கம் இந்த நிதியை எவ்வாறு பெற்றுக் கொண்டுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
100 மில்லியன் டொலர் செலவிட்ட அரசாங்கம், அதனை அடைந்துள்ளது எனவும் கேள்வி எழும்பியுள்ளது. அமெரிக்க அரசாங்கம், மிகவும் குறைந்த செலவில் தமது ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் கடமையாற்றி வருவதாகவும், ஊக்கமளிப்பவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், தாம் இமாட் சுபேரி என்பவருடன் தொடர்புகளை வைத்திருந்ததாக கண்காணிப்பு உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இமாட் சுபேரி என்பவர் , அமெரிக்க ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, சுபேரிக்கு, ஒபாமா நிர்வாகத்திற்கு அழுத்தங்களை வழங்க முடியுமா என தமக்கு தெரியாது என்றும் சஜித் டி வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்
பாகிஸ்தானின் பிற்புலத்தை கொண்டுள்ள இமாட் சுபேரி, அமெரிக்க ஜனாதிபதியுடன் நற்புறவை கொண்டுள்ளவர் என்ற ரீதியில் ஒபாமா நிர்வாகத்திற்காக நிதி சேகரிப்புக்கான செயற்பாடுகளில் அவர் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையிலான தொடர்புகளை ஏற்படுத்தி, இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, இலங்கை, சுபேரி ஊடாக செயற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாட் சுபேரி, இலங்கைக்காக, குறித்த சேவையில் ஈடுபட்டுள்ளதுடன், முதலில் குறிப்பிட்டவாறு பெல்ட்வே கவர்ன்மன்ட் ஸ்டெடஜிஸ் நிறுவனத்துடன் பங்குதாரியாகவும் செயற்பட்டு வந்துள்ளது
http://www.athirvu.com/newsdetail/597.htmlஆப்பு வைத்த பிரித்தானிய முஸ்லீம்கள்: அட தமிழர்களை தான் அடிக்கிறார்கள் என்றால் முஸ்லீம்களையுமா ?
[ Jul 28, 2014 06:51:58 PM | வாசித்தோர் : 7780 ]
சமீபத்தில் இலங்கையில் முஸ்லீம்கள் மேல் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக, பிரித்தானியாவில் வசிக்கும் பல முஸ்லீம்கள் இலங்கை அரசுக்கு ஆப்பு வைக்க ஆரம்பித்துள்ளார்கள் என அறியப்படுகிறது. லண்டனில் உள்ள பல முஸ்லீம்கள் தாம் வசிக்கும் பகுதிகளில் உள்ள, MP களை தொடர்புகொண்டு, இறுதியாக பிரித்தானிய வெளியுறவு துறை அமைச்சு வரை சென்றுவிட்டார்கள். இதில் விடையம் தெரியாத ஒரு பிரித்தானிய MP அட தமிழர்களை தான் சிங்களவர்கள் இதுவரை காலமும் தாக்கினார்கள், இப்ப முஸ்லீம்களையும் தாக்குகிறார்களா என்று பதற்றமாக கேட்டுள்ளார். இதன் விளைவாகவே தற்போது பிரித்தானியா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
இலங்கை அனைத்து சமயங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. புனித ரமழான் நோன்பு தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் முஸ்லீம்கள் தாக்கப்படுகிறார்கள் என்று வெளிப்படையாக கூறி சர்சையை தோற்றுவிக்காமல் இருக்கவே, இலங்கையில் அனைத்து இன மக்களும் மதிப்புடன் வாழவேண்டும் என்று அடமொழி வைத்து அவர் அவ்வாறு கூறியுள்ளார், என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
http://www.athirvu.com/newsdetail/598.html
Geen opmerkingen:
Een reactie posten