தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 juli 2014

புகலிடக் கோரிக்கையாளர்கள் கேர்ட்டின் தடுப்பு முகாமிற்கு மாற்றம்- ஆஸியிடம் நஷ்டஈட்டை கோரும் அகதிகள்

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் மாணவர்கள் மோதல்: பொலிஸார் குவிப்பு
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 07:14.18 AM GMT ]
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் இன்று காலை இரு மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
தம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வியாபார கற்கைநெறி பீடத்தின் 2ம், 3ம் வருட மாணவர் குழுக்களுக்கிடையிலே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதல் சம்பவத்தில் ஒரு பெண் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பதற்ற நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக வவுனியா வளாகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciw3.html

புகலிடக் கோரிக்கையாளர்கள் கேர்ட்டின் தடுப்பு முகாமிற்கு மாற்றம்- ஆஸியிடம் நஷ்டஈட்டை கோரும் அகதிகள்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 07:30.26 AM GMT ]
அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பிற்கு அழைத்து வரப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் 157 பேரில் பெரும்பாலானவர்கள் பொருளாதார அகதிகள் என குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
பல வாரகாலம் சுங்கக் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை கொக்கோஸ் தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள கேர்ட்டின் தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
இந்தத் தமிழர்கள் இன்று பூர்வாங்க பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
ஆஸியிடம் நஷ்டஈட்டை கோரும் அகதிகள்
அவுஸ்திரேலியா கடற்படையினரால் நடுக்கடலில் வைத்து தடுக்கப்பட்டு தற்போது மேற்கு அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள 157 இலங்கை தமிழ் அகதிகளும் நஷ்டஈட்டை எதிர்பார்ப்பதாக அவர்களின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் நஷ்டஈட்டு தொகை எவ்வளவு என்ற விடயம் வெளியிடப்படவில்லை.
இந்திய பாண்டிச்சேரியில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இந்த அகதிகளில் 50 பேர் வரை சிறுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அகதிகளில் 85 பேர் தமக்கு நஷ்டஈட்டை கோரி மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை தற்போது ஆராய்ந்து வரும் அவுஸ்திரேலிய மேல்நீதிமன்றம், அகதிகளை அவுஸ்திரேலியா ஒருமாதகாலம் தடுத்து வைத்தமை சட்ட ரீதியானதா? என்று தீர்மானிக்கவுள்ளது.
இல்லையென்று தீர்மானிக்கப்பட்டால் அகதிகள் நஷ்டஈடு கோருவதற்கு தகுதியானவர்களாவர் என்று சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciw4.html

Geen opmerkingen:

Een reactie posten