[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 06:02.58 AM GMT ]
இந்த சம்பவம் இன்று காலை 7.30 அளவில் திருகோணமலை - கொழும்பு வீதியின் பளுகஸ்வெவ என்ற பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் இருந்து அளுத்கம நோக்கி அழைத்து வரப்பட்ட அதிரடிப்படையினரை ஏற்றிய பஸ் பளுகஸ்வெவ பிரதேசத்தில் குடைசாய்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சீமெந்து ஏற்றிய லொறி ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட போது விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த அதிரடிப்படையினர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
84 கிலோ கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது
4 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை மாவட்டம், எதிமலே கல்கனுப்பிட்டி பிரதேசத்தில் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலர் நபர்கள் கஞ்சா போதைப் பொருளை கடத்திச் செல்வதாக எதிமலே பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் சியம்பலாண்டுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
அளுத்கம சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி வீடுகள் புனரமைப்பு
அண்மையில் அளுத்கம மற்றும் பேருவளையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான வீடுகள் மற்றும் கடைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிபடைந்த 100 வீடுகளும் 7 கடைகளும் புனரமைப்புச் செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுள்ளதாக இராணுவப் பேச்சாளர் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தின் இன்று நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் இந்த தகவலை அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாதிப்படைந்த 103 வீடுகளும் 25 கடைகளும் மேல் மாகாண பாதுகாப்புத் தலைமையகத்தினால் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்தப் பணிகள் பூர்த்தியானதும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அளுத்கமவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது இப் பகுதியில் 210 வீடுகளும் 84 கடைகளும் சேதமாக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
தபால் கட்டண உயர்வு இடைநிறுத்தம்
தபால் கட்டண உயர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாளை முதல் தபால் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தபால் கட்டண உயர்வு தொடர்பிலான மாற்றங்கள் ஒரு வார காலம் வரையில் ஒத்தி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் ஒருவார காலத்திற்கு தற்போதைய தபால் கட்டணங்களே நடைமுறையில் இருக்கும் என பிரதி தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் தபால் கட்டண உயர்வு குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
5 ரூபா பெறுமதியான முத்திரையுடன் அனுப்பி வைக்கப்படக் கூடிய சாதாரண தபால் ஒன்றிற்கு 10 ரூபா முத்திரை ஒட்டப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
அனைத்து தபால் கட்டணங்களும் பாரியளவு வீதத்தில் உயர்த்ப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgo5.html
அரசாங்கத்திற்குள் பாரிய பிளவு? - ஆளும் கட்சிக்குள் இருந்து புதிய கட்சி உதயம்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 06:11.11 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர், புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க உள்ளார். இந்த கட்சிக்கு முதல் முன்னணி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அரசியல் கட்சிக்கு உத்தியோகப் பற்றற்ற அடிப்படையில் தலைமை தாங்க குறித்த பிரபல அமைச்சர் இணங்கியுள்ளார்.
ஜே.வி.பி.யின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், பாணந்துறை மேயருமான நந்தன குணதிலக்க, முன்னாள் முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினருமான அசல ஜாகொட இந்த புதிய கட்சியை அமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மிகவும் இரகசியமான முறையில் கட்சி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கட்சியை விட்டு விலகிய விலகும் வகையில் செயற்பட்டு வரும் அரசியல்வாதிகளை அணுகி அவர்களை கட்சியில் இணைத்துக் கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் முதல் சுவரொட்டி சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கட்சியை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் கட்சிக்குள் இருந்து புதிய கட்சி உதயம்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உள்ள சிலர் இணைந்து முதலாம் முன்னணி என்ற பெயரில் புதிய கட்சியை ஒன்றை உருவாக்கியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் அங்கும் வகிக்கும் ஒரு முக்கிய பிரமுகர் தலைமையில் இந்த புதிய கட்சி இயங்குவதாக கூறப்படுகிறது.
பாணந்துறை நகர சபையின் தலைவர் நந்தன குணதிலக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல ஜாகொட ஆகியோர் இந்த கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தெரியவந்துள்ளது.
ஏனைய கட்சிகளில் இருந்து ஆளும் கட்சியில் இணைந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் இணைந்து இந்த கட்சியை ஆரம்பித்துள்ளதுடன் அது இரகசியமான முறையில் இயங்கி வருகிறது.
மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளின் கவனம் செலுத்தும் வெகுஜன அமைப்பாக இந்த கட்சி செயற்பட உள்ளது.
புதிய அரசியல் கட்சி எதிர்காலத்தில் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படும் எனவும் பெரும்பாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கட்சி பதிவு செய்யப்படும் என புதிய கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்கப்படும் என்பதை அவர் தெரிவிக்க மறுத்துள்ளார்.
இருளை எதிர்க்கும் உங்களுக்கு என எழுதப்பட்ட சுவரொட்டிகள் அண்மையில் நாடு முழுவதும் ஒட்டப்பட்டிருந்ததுடன் அந்த சுவரொட்டியில் முதலாம் முன்னணி எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
Geen opmerkingen:
Een reactie posten