தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 juli 2014

அசால்டாக இருக்கும் பிரித்தானியா ! கடுப்பில் மகிந்தர் !

கடந்த 23ம் திகதி ஸ்காட்லாந்தின் முதன்மை நகரமான, கிளாஸ்கோவில் காமன்வெலத் நாடுகளின் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகியுள்ளது. இந்த அமைப்பின் தற்போதைய தவிசாளராக மகிந்தர் உள்ளார். இப்போட்டிகளில் அவருக்கு பிரதம விருந்தினர் என்ற அந்தஸ்த்தும் வழங்கப்பட்டது. ஆனால் அவர் வரவே இல்லை. தமிழர்கள் நன்கு திட்டமிட்ட வகையில், பாரிய போராட்டத்தை அங்கே நடத்த இருக்கிறார்கள் என்ற செய்தி ஏற்கனவே, கொழும்பின் காதுகளுக்கு எட்டிவிட்டது. வெளியுறவு துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் இதனை தடுக்க பல வழிகளில் முயன்றுள்ளார் என்ற தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது.
இம் முறை அவர் கைகளில் எடுத்துக்கொண்ட ஆயுதம், மகிந்தரின் பாதுகாப்பு என்பதாகும். பாதுகாப்பை காரணம் காட்டி, தமிழர்களின் போராட்டத்தை ஸ்காட்லாந்து பொலிசார் தடை விதிக்கவேண்டும் என்று ஜி.எல் பீரிஸ் கோரிக்கை விடுத்தார். ஸ்காட்லாந்து மாநிலம் ஒரு இறைமை மிக்க மாநிலம் ஆகும், எனவே அந்த அரசாங்கத்திற்கு நாம் உங்கள் கோரிக்கையை முன்வைக்கிறோம் என்று கூறி பிரித்தானிய அதிகாரிகள் கையைக் கழுவி விட்டார்கள். இதனால் ஆத்திரமடைந்த மகிந்தர், தான் பிரித்தானியா வரமாட்டேன் என்று பூச்சாண்டி காட்ட ஆரம்பித்துள்ளார்.
முறைப்படி காமன்வெலத் நாடுகளின் தவிசாளர் ஒருவர் வராமல் இந்த விளையாட்டு போட்டியை எப்படி நடத்துவார்கள் ? என்று நானும் பார்கிறேன் என்று அவர் நினைத்துள்ளார். பிரித்தானியா மற்றும் காமன்வெலத் நாடுகளின் அமைப்புக்கு என்று ஒரு பாரம்பரியம் மற்றும் வரைமுறை ஒன்று உண்டல்லவா. அதனை அவர்கள் மீறமாட்டார்கள் என்று மகிந்தர் நினைத்தது பெரும் தவறான விடையம் ஆக மாறிவிட்டது. மகிந்தர் வருவது அல்லது வராமல் போவது குறித்து பிரித்தானியா அலட்டிக்கொள்ளவே இல்லை. இது இலங்கை அரசை பெரும் அதிருப்த்திக்கு உள்ளாக்கியுள்ளது. அத்தோடு இலங்கை அரசு விடுத்த பாதுகாப்பு தொடர்பான பிரேரணையையும், பிரித்தானிய அரசு உதாசீனம் செய்து விட்டது.
இதற்கு முக்கியமான கரணம் ஒன்றும் உள்ளது. தற்போது ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சியானது, தற்போதைய நிலையில் பிரித்தானிய மக்களிடம் செல்வாக்கை வெகுவாக இழந்துள்ளது. அடுத்த வருடம் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலில், அது சிலவேளை தோல்வியடையலாம். இதனால் லண்டனில் உள்ள தமிழர்களிடமாவது வாக்குகளைப் பெற்றுவிடவேண்டும் என்று அக்கட்சியின் , அடி மட்ட தலைவர்கள் சிலர் கமரூனுக்கு அறிவுரை கூறியுள்ளார்கள். இதற்கு அமைவாகவே கமரூன் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும், இந்த விடையத்தில் பிரித்தானிய அரசு நடந்துகொண்ட விதத்தால், மகிந்தர் கடும் கடுப்பில் இருக்கிறார் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.

Geen opmerkingen:

Een reactie posten